|
Monday, 25 August 2008 |
|
இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
|