பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

மொறட்டுவ குண்டுத்தாக்குதல் எதிரொலி: பிரித்தானியா பயண எச்சரிக்கை
Saturday, 07 June 2008

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும் படிக்க…
 
முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலை வழிநடத்தும் பிள்ளையான் குழு முக்கியஸ்தர் கலிங்கன்!
Friday, 06 June 2008

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காகவும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவினர்களைப் பார்ப்பதற்கும் வந்த முஸ்லிம் மக்கள் பிள்ளையான் குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணம் செய்த இரண்டு டொல்பின் ரக நீல நிற வான்கள் பிள்ளையான் குழுவினரால் அடித்து நொறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் காப்பாற்றப்பட்டு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் காத்தான்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்கிய பிள்ளையான் குழுவினர்!
Friday, 06 June 2008

இன்று காலை 8.30 மணியளவில் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்குள் உட்புகுந்த 15 தொடக்கம் 20 பேர் வரையான பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களுடன் தாக்கி காயப்படுத்தியதாகவும் பள்ளிவாயலிலிருற்த பொருட்களை அடித்து சேதமாக்கியதாகவும் இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டிவிட்டு அப்பகுதிகளில் சிதறி ஓடியதாகவும் காத்தான்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில இந்தப் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள்!
Friday, 06 June 2008

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதிகளில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ் வேளையில் நேற்றையதினம் மாலை 6 மணியளவில் ஆரையம்பதியிலுள்ள பிள்ளையான் குழுவினரின் அலுவலகத்திலிருந்து சுமார் 35 மோட்டார் சைக்கிளில் புறப்பட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிள்ளையான் குழு அலுவலகத்துக்கு வந்து சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
மொறட்டுவவில் பேருந்து மீது கிளைமோர்த் தாக்குதல்: 20 பேர் பலி- 75 பேர் காயம்
Friday, 06 June 2008

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பயணிகள் பேருந்தினை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை 7:35 மணியளில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கைது செய்யப்படுவதுடன், அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகின்றது.

மேலும் படிக்க…
 
தமிழீழம் எங்கும் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் சிறப்புற நடைபெற்று வருகிறது.
Friday, 06 June 2008

தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில்

மேலும் படிக்க…
 
நாகர்கோவிலில் புலிகளின் மோட்டார் தாக்குதல்: இரு படையினர் பலி!
Friday, 06 June 2008
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரது நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க…
 
நாகர்கோவிலில் கடற்புலிகளின் சிறப்புக் கனரக ஆயுத அணியினரால் காவலரண்கள் தாக்கியழிப்பு
Friday, 06 June 2008

வடமராட்சி நாகர்கோவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரண்கள் மீது கடற்புலிகளின் கனரகஆயுத அணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவிக்கையில்.

மேலும் படிக்க…
 
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு
Friday, 06 June 2008

அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க…
 
காத்தான்குடியில் மீண்டும் வன்முறை நேற்று 25 பேருக்கு வெட்டுக் காயங்கள் உடன் ஊரடங்கு அமுலுக்கு
Friday, 06 June 2008

காத்தான்குடிப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாகப் பதற்றத்துடன் நீடித்த ஹர்த்தால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து நேற்றுக் காலை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டபோதிலும் ஓரிரு மணித்தியாலங்களில் நேற்று முற்பகலே அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தமிழர்கள், முஸ்லிம்கள் என மொத்தம் 24 பேர் கத்திவெட்டுக்காயங்களுக்கும், கல்வீச்சுக் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க…
 
இரண்டு பெண்பிள்ளைகளை கற்பழித்தவர்களை தண்டிக்க வாக்களியுங்கள்.
Friday, 06 June 2008

மட்டகளப்பில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து 2பெண் யுவதிகளை தாயின் முன்னால் கற்பழித்து விட்டு தப்பிபோன கும்பல்களை அடையாளம் காணவும் தகுந்த தண்டனை வழங்கவும் உடனடி மனிதாபிமான வாக்குகளை மனுக்களை அனுப்புங்கள் எம் தமிழ் உறவுகளே.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..