பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
Tuesday, 20 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மண்டைதீவில் போர் ஒத்திகை
Tuesday, 20 May 2008

யாழ் தீவகம் மண்டைதீவுப் பகுதயில் சிறிலங்காப்படையினர் கடந்த 17 ஆம் திகதி மாலையில் இருந்து நேற்று காலைவரை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட சடங்கள் இன்று ஒப்படைப்பு.
Tuesday, 20 May 2008

மன்னாரில் சிறிலங்காப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது கொல்லப்பட்ட படையினரின் மூன்று சடலங்கள் இன்று சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க…
 
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறீலங்கா மீண்டும் வருவதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மிகாட்டர் எத
Tuesday, 20 May 2008

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா மீண்டும் அங்கத்துவ நாடாக இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மிக்காட்டர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் முகமாக சிறீலங்கா பிறநாடுகளின் ஆதரவைக் கோருவதையும் அவர் எதிர்த்துள்ளார்.

 
மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு: 50-க்கும் அதிகமானோர் கைது
Tuesday, 20 May 2008

மன்னாரில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலையடுத்து மன்னார் சவுத்பார் சிறிலங்காப்  படை முகாமை அண்மித்துள்ள பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை 50-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
முகமாலை முன்னரங்க காவல்நிலை மீது விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல்
Monday, 19 May 2008
முகமாலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார் எட்டிற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்
நேற்று மாலை 5.00 மணியளவில் விடுதலைப்புலிகள் இந்தத் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்ததும் மீண்டும் மூதூரில் மீன்பிடித் தடை அமுல்
Monday, 19 May 2008

மாகாணசபைத் தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் மூதூர் கடற்பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கான தடை தளர்த்தப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே மீண்டும் அந்த கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தடை அமுலுக்குவந்துள்ளதாக மூதூர் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
இரு அரசுகள் தேவை என்பதை அங்கீகரிக்க வேண்டும்: அவுஸ்திரேலிய முன்னாள் நீதியரசர்
Monday, 19 May 2008

இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த  இரு அரசுகளும்   கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

மேலும் படிக்க…
 
மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி- 50 பேர் காயம்- 6 உடலங்களு
Monday, 19 May 2008

மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 6 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
கடலடிக் கண்காணிப்புக் கருவிகளை வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலை! துறைமுக அதிகார சபைக்கு இப்படி இக்
Monday, 19 May 2008

கடலுக்கு அடியில் இடம்பெறும் செயற்பாடுகளைக் கண்டறிந்து கண்காணிக்கக்கூடிய "சோனார்" கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பொருத்துவதற்காகத் துறைமுக அதிகாரசபை கொள்வனவு செய்துள்ள போதிலும், கடற்படையின் ஒத்துழைப்பு இல்லாததால் இதனைப் பயன்படுத்த முடியாத இக்கட்டு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை தெரிவாவதற்கு கடும் எதிர்ப்பு ஐரோப்பிய நாடுகள் சில தீவிரம்
Monday, 19 May 2008

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கவுன்ஸிலிற்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் புதன்கிழமை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள அதேவேளை, ஐரோப்பிய நாடுகள் சில இத் தேர்தலில் இலங்கைக்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன என்றும் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..