பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிதைவடைந்த நிலையில் 16 தமிழ் இளைஞர்களிடன் சடலங்கள் ஒப்படைப்பு
Friday, 01 September 2006
வவுனியாவில் சிதைவடைந்த நிலையில் 16 தமிழ் இளைஞர்களின் சடலங்களை சிறிலங்கா இராணுவம் ஒப்படைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களின் சிலரது சடலங்களில் ஆண் உறுப்புகள்  வெட்டப்பட்டும் சிலரது முகத்தில் அமிலங்கள் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டும் இருந்ததாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க…
 
எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் ஆதாரங்கள் உள்ளன.
Friday, 01 September 2006

தன்னார்வத் தொண்டர் படுகொலையுடன் சிறீலங்கா இராணுவத்திற்கு தொடர்பில்லை என்று கெகலிய ரம்புக்க வெல கூறினாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை, சிறீங்கா இராணுவமே அதற்கு பொறுப்பு என்பதற்கான போதிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தலைவர் கூறியுள்ளார்.

 
ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்பாககண்டனப் பேரணியும் ஒன்றுகூடலும்
Friday, 01 September 2006

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு முன்பாககண்டனப் பேரணியும் ஒன்றுகூடலும்

மேலும் படிக்க…
 
பசில் ராஜபக்ச இந்தியத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடல்.
Friday, 01 September 2006

ஜனாதிபதியின் ஆலோசகர், பசில் ராஜபக்ச இந்திய தலைவர்களைச் சந்தித்து கலந்துரை யாடல்களை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இந்திய அரசாங்கத்தின், அழைப்பின் பேரில் அவசர விஜயம் ஒன்றை அவர் நேற்று முன்தினம் அவர் மேற் கொண்டார்.   இந்த விஜயத்தின் போது பசில் ராஜபக்ச இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உட்பட்ட அதிகாரிகளை சந்திக்கிறார்.   இதேவேளை, இந்திய பாதுகாப்பு செயலர் ஷியாம் சரண் கடந்த வாரம் ஒஸ்லோவிற்கு விஜயம் செய்து இலங்கை விவகாரம் தொடர்பாக அங்கு பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், இலங்கை விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற வேண்டும் என முன் வைத்ததாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
யாழ் இருபாலையில் இளைஞர் சுட்டுக்கொலை.
Friday, 01 September 2006

யாழ்ப்பாணம் கோப்பாய் ராசவீதி இருபாலைப் பகுதியில்  இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று உந்துருளியில் வந்த இந்த இளைஞரை மற்றொரு உந்துருளியில் வந்தோர் துரத்திச்சென்று சுட்டுள்ளனர்.   கொல்லப்பட்ட இளைஞர் தப்பிச் செல்லும் வகையில், வீடு ஒன்றுக்குள் சென்ற போதும் துரத்தி வந்தவர்கள், அவரை வீட்டினுள் வைத்து சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இளைஞரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

 
திருகோணமலையில் 15 இளைஞர்கள் கைது
Friday, 01 September 2006

திருகோணமலை கும்புறுபிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள், குச்சவெளி சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே திருகோணமலை நகர்ப்பகுதியில் வாய்பேச முடியாத இளைஞர் ஒருவரை சிங்களக் காடையர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. கொல்லப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் அவரது சடலம் நகர்ப்பகுதி சுடுகாடு ஒன்றில் வீசப்பட்டிருந்ததாகவும் திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இலங்கை அரசாங்கம் முழு அளவிலான யுத்த திட்டம்
Thursday, 31 August 2006

ஜே.வி.பி பங்காளியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த மாதம் பூராவும் இடம்பெற்றுவரும் பகிரங்க மோதல்களுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி) தனது ஆளும் கூட்டணியில் இணைத்துக்கொள்வது பற்றி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் படிக்க…
 
சம்பூர் மற்றும் செல்வநகர் பகுதிகளில் 14 படையினர் பலி! 112 பேர் காயம்.
Thursday, 31 August 2006

திருகோணமலை  சம்பூர் மற்றும் செல்வநகர் பிரதேசங்களில் இன்று அதிகாலை மேற்கொள் ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போதும் மற்றும்  படையினரின் தேடுதல் நடவடி க்கையின் போதும்  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் பலியானதாக படை த்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மோதல்களில் 14 படையினர் பலியானதுடன் 112 பேர் காயம டைந்துள்ளதாகவும் படைத்தரப்பு  அறிவித்துள்ளது.

 
ஜெயதேவனின் சதியில் அகப்பட்ட சிவாஜினி
Thursday, 31 August 2006

ராமராஜன் சிறை மீண்டு வரமுதல் சிறை செல்ல உள்ளார் சிவாஜினி.

அரசனை  நம்பி புரிசனை கைவிட்ட கதை  போல உண்டியலான் ஜெயதேவனின் கதையை நம்பி ஜெயதேவனின் சதி வலைக்குள் தற்போது அகப்பட்டுள்ளார் ராமரஜனின் மனைவி சிவாஜினி. சுவிஸ் சிறைக்குள் இருந்து ராமராஜன் விடுதலையாகமுதல் அவருடைய மனைவி சிவாஜினி லண்டனில் சிறை செல்ல உள்ளார்.

மேலும் படிக்க…
 
மகிந்தரின் பிரித்தானிய சரணாகதி ஏன்?
Thursday, 31 August 2006

பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பற்ற திடீர் பயணமொன்றை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.சந்திரிகா அம்மையாருடன், தமது கட்சிக்குள் ஏற்பட் டுள்ள நெருகடிகளைத் தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த இலண்டன் வந்துள்ளார் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகம் வெளியிட்ட நிலையில் அவரின் பயணமானது, அதற்கும் பாற்பட்டதொரு நகர்விற்கான பயணமாகக் கருத இடமுண்டு. இருப்பினும் பிரித்தானியா என்கிற பின்கதவால் இந்தியாவை அணுகும் அதிரடி இராஜதந்திர நகர்வாகவே இதனை நோக்கலாம்.

மேலும் படிக்க…
 
ஓப்பறேசன் போர் ப்ளட் செட்
Thursday, 31 August 2006
OPERATION FOR BLOOD SHED (நெருடலுக்காக திருமலையிலிருந்து தமிழ் அழகன்)

Operation for water shed நீருக்கான இரானுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் இன்று Operation for Tamil’s Blood shed என்ற கட்டத்தையும் தாண்டி அழிவுகளை ஏற்படுத்திவிட்டது. மகிந்தரின் விஷேட நேரடிப்பார்வைக்கு உட்பட்டிருக்கும் சம்பூர் மற்றும் அதனை சூழவுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுத் தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் இப்போது மயான பூமியானதென்பது எமக்கு வருத்தம் தருவதாக இருந்தாலும் புலிகளின் பலம் இன்னும் சிறிதேனும் குறையவில்லை என்பது மகிந்தருக்கு மிகவும் வருத்தம் தருவதாக இருக்கும்.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 111 112 113 114 115 116 117 118 119 120 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..