பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தேசத்துரோகம்: எல்லாளன் படையினரால் யாழில் பெண் சுட்டுக்கொலை
Saturday, 22 July 2006
யாழ். நகரப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் தொடர்புடைய கமலசுதன் சிவனேஸ்வரி (வயது 25) என்ற பெண்ணை எல்லாளன் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இளவாலை நாகவலையைச் சேர்ந்தவர் சிவனேஸ்வரி. யாழ். முனியப்பர் கோவில் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
சிறிலங்காவில் ஒரு மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள்
Friday, 21 July 2006
சிறிலங்காவில் ஒரு மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றில் அவர் கூறியதாவது:

5 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 9,26,938 சிறார்கள் சிறிலங்காவில் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 10 முதல் 12 விழுக்காடு தொகையானோர் சுரங்கத் தொழில், வேதித் தொழிற்சாலைகள், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு போன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.
மேலும் படிக்க…
 
இளம் பாடசாலை குழந்தைகளிடம் குண்டுப்பீதியை ஏற்படுத்தும் சிங்கள அதிரடிப்படை
Wednesday, 19 July 2006

இளம் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் குழந்தைகளிடம் குண்டுப்பீதியையும் இனவிரோதத்தையும் வளர்க்கும் வகையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

 

விசாக வித்தியாலய பாடசாலை குழந்தகைளுக்கு சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரி காமினி வலகம, தற்கொலை குண்டுதாரிகளை எதிர்கொள்வது எப்படி என்று வகுப்பு நடத்தியுள்ளார்.

மேலும் படிக்க…
 
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை
Sunday, 16 July 2006
பிரித்தானிய தூதுவர்

இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
சிங்களப் பேரினவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் நாள் தொலைவில் இல்லை
Sunday, 16 July 2006
 கட்டளைத் தளபதி நகுலன்

தமிழினப் படுகொலையினை தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் சிங்களப் பேரினவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் நாள் தொலைவில் இல்லை என்று கட்டளைத் தளபதி லெப். கேணல் நகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலனின் நினைவு வணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை:

மேலும் படிக்க…
 
சந்திரிகாவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரிக்கை
Sunday, 16 July 2006
சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அரசாங்க புலனாய்வுத்துறையின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு புலனாய்வுத்துறையினர் அனுப்பிய அறிக்கையில் சந்திரிகாவின் உயிருக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
பாதுகாப்புப் படைகளில் "புலி உளவாளிகள்": கொழும்பு ஊடகம்
Saturday, 15 July 2006
சிறிலங்காவின் பாதுகாப்புப்படைகளில் இருக்கும் விடுதலைப்புலி உளவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவானது விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
புளொட் பவானைக் கொன்றது யார்?: அம்பலமாகும் உண்மை
Saturday, 15 July 2006
 வவுனியா மாவட்ட புளொட் உறுப்பினர் பவான் (இரத்தினம் சிறீஸ்கந்தராசாவை) படுகொலை செய்தது யார் என்பதை புளொட் அமைப்பினரே அம்பலப்படுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான புளொட் உறுப்பினர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

மேலும் படிக்க…
 
லெப். சார்ள்ஸ் அன்ரனியின் 23 ஆம் ஆண்டு நிகழ்வு
Saturday, 15 July 2006
லெப். சார்ள்ஸ் அன்ரனியின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வின் பொதுச்சுடரை சார்ள்ஸ் அன்ரனி படையணித் துணைத் தளபதி பிரதாபன் ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியத் கொடியை லெப். சார்ள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கோபித் ஏற்றிவைத்தார்.

மேலும் படிக்க…
 
தேசிய அரசாங்கம் அமைக்க உதவுமாறு ரணிலுக்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
Saturday, 15 July 2006
மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்க ஒத்துழைக்குமாறு பொலநறுவ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி சூரியராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க…
 
திருமலையிலும் புலிகள் மீது இராணுவம் தாக்குதல்:
Saturday, 15 July 2006
ஒரு போராளி காயம்

திருகோணமலையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதி மீது சிறிலங்கா இராணுவத்தினர் இன்று எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

திருகோணமலை மற்றும் மூதூரிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இந்த எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த எறிகணைத்தாக்குதலில் போராளி ஒருவர் காயமடைந்துள்ளார் என்று திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 111 112 113 114 115 116 117 118 119 120 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..