|
Wednesday, 12 October 2005 |
|
மீண்டும் ஒரு போர் தொடங்குமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கமே ஏற்ற வேண்டும். ஏனெனில் சமாதான சூழலை சீர்குலைத்தவர்கள் அவர்கள். இன்றும் சீர்குலைத்து கொண்டு இருக்கின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 12 October 2005 |
|
இந்தியாவிலிருந்து நீங்கள் பயன்படுத்திய கணனிக்குள் வைரஸ் வந்துவிட்டதாமே ! காரணம் என்னவோ? அதுதான் ஆபாசப்படங்களைக் கணனிக்குள் பார்க்கக்கூடாது என்று. இணையத் தளங்களை பார்க்க விரும்புகிறாயாமே ஆனால் எப்படி அதை தட்டச்சு செய்வது என்பது தங்களுக்குச் சற்றுச் சிக்கலாக இருப்பதாகக் கிரான் மக்கள் அறிந்தார்கள். அக்கா நிராவுக்குத் தெரியாத தட்டெழுத்து விளையாட்டா |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
சிறிலங்கா அரசு தேசவிரோத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்கள் சுதந்திரமாகப் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் கொலை கலாசாரங்களை நடாத்தி வரும் போது சமாதானத்துக்கான சூழலை உருவாக்கவோ, அல்லது தமிழ் மக்கள் சமாதானத்தின் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவோ முடியாது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
ஆசியா அபிவிருத்தி அடைந்து வருகின்றது. சீனா வியப்புக்குரிய வகையில் அபிவிருத்தி அடைந்து வருகிறது. இந்தியாவும் இதற்கு சளைக்காத வகையில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது. எனினும், ஒப்பீட்டளவில் வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுடன் பார்க்கும் போது இலங்கையில் அபிருத்தி மிகவும் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
25 இலட்சத்துக்கும் அதிகமானோர் இருப்பிடமின்றி பரிதவிப்பு பலியானோர் தொகை 40 ஆயிரத்தை எட்டுகிறது பாகிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் 30 ஆயிரத்திற்கும் 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட தொகையினர் பலியாகியிருப்பதாக யுனிசெப்பும், பாகிஸ்தானின் சிரேஷ்ட அரச அதிகாரியும் நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்துள்ள அதேசமயம் பூமியதிர்வினால் சின்னாபின்ன மடைந்த கிராமங்கள், நகரங்களைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மக்கள் தற்காலிக கூடாரங்களில் காயத்துடனும், பசிமயக்கத்துடனும் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருக்கின்றனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் கெய்டா தமது இயக்கத்துக்கு ஆள்களைச் சேர்ப்பதற்காக இணையத்தளத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இணையத்தள சேவையை கடந்த சில ஆண்டுகளாக அல் கெய்டா உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் பலவும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் உள் விவகாரங்கள் மற்றும் குத்து வெட்டுக்கள் என்பன மெல்ல அரங்கேறத் தொடங்கியுள்ளன. அரசியலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்ற பெரும் அங்கலாய்ப்புக்கு மத்தியில் மக்கள் காணப்படுகின்றனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
|
சமாதானத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சக்திகள் எப்பொழுது ஒரு பக்கச்சார்பு நிலையினை எடுத்து சரிகின்றனவோ அப்போதே அழுத்தம் கொடுக்கும் தகைமையை அவை இழந்து விடுகின்றன சமாதான முன்னெடுப்புகள் நெருக்கடி நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் இக்காலத்தில் அதனை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் புலிகளுக்கு பிரயாணத் தடையை விதித்துள்ளது. சமாதான முன்னெடுப்புக் காலத்தில் அதனை விரும்பும் சர்வதேச சக்திகள் நடுநிலையாக இருப்பதுதான் சர்வதேச அறநெறி. அந்த அறநெறிக் கோட்பாட்டினை இத்தடையின் மூலம் ஐரோப்பிய யூனியன் குப்பைத் தொட்டியில் வீசியிருக்கின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 11 October 2005 |
எமது தமிழீழ விடுதலைப் போராட்டமானது பல பரிமாணங்களைக் கொண்டது. நீண்டகால இந்த விடுதலைப்போராட்டத்தில் எதிரியானவனின் பன்முகப் போருக்கு தமிழர்களாகிய நாம் எப்போதிருந்தே ஈடுகொடுத்தோம். இனியும் ஈடுகொடுக்கவேண்டிய கட்டாய சூழலில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்த பன்முகப்போரில் முக்கியமானதுதான் எதிரியின் புலனாய்வு நகர்வுக்கான நிழல்யுத்தமாகும். இன்று நேற்றல்ல எமது விடுதலைப்போரை முனைப்புடன் வழிநடத்திச் செல்லும் எமது தேசியத் தலைவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் நம்பிக்கைத்துரோக நடவடிக்கைகளும் நீங்கள் அறிந்த உண்மையே! |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 10 October 2005 |
|

"முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது." புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள். ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின் முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு. |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 10 October 2005 |
|
* வெள்ளவத்தை குண்டுவெடிப்பு கிளப்பியிருக்கும் கேள்விகள்
விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடையானது சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களுக்கு மிகவும் வாய்ப்பாகிவிட்டது. புலிகளுக்கு எதிரான பிரசாரத்தை உச்சமடையச் செய்வதுடன் சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்வதே இவர்களது நோக்கமாகும். அத்துடன், புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் எனப் பிரசாரம் செய்யும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அதற்கான பழியும் புலிகள் மீதே சுமத்தப்பட்டும் வருகிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>
|