பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

யாழில் 4 தாக்குதல்கள்: இருவர் பலி- மூவர் படுகாயம்
Wednesday, 14 June 2006

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட நான்கு தாக்குதல்களில் இருவர் கொல் லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.யாழ். பெரியவிளான்- பண்டத்தரிப்பு வீதியில் இன்று காலை 10.40 மணியளவில் சிறிலங்கா காவல்துறையினரின் பிக்கப் வாகனம் கிளை மோரில சிக்கியது. இதில் இளவாலை சிறிலங்கா காவல்துறையினர் இருவர் படுகாய  மடைந்தனர்.

மேலும் படிக்க…
 
மாங்கேணியில் கருணா குழுவினரால் 15 இளைஞர்கள் கடத்தல்.
Wednesday, 14 June 2006

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட் மாங்கேணி பகுதியில் கருணா குழுவினரால் 15 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். கடத்தப் பட்டவாகள் அனைவரும் 19 வயதுக்குட்பட்டவாகள் என தெரியவருகின்றது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   இதுதொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இவர்களின் உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
இருதரப்பு சமநிலையை ஏற்காவிட்டால் அந்நிலையை உருவாக்குவோம்
Wednesday, 14 June 2006

இருதரப்பு சமநிலையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்காவிட்டால் அந்நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
வாகனேரியில் கருணா கும்பலால் இளைஞர் ஒருவர் கடத்தல்
Wednesday, 14 June 2006

மட்டக்களப்பு வாகனேரியில் இளைஞர் ஒருவர் கருணா கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் கே.கோபி எனத் தெரிவிக்கப்படுகிறது. வாகனேரிப் பகுதியிலுள்ள அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்த போது அங்குவந்த கருணா கும்பல் குறிப்பிட்ட இளைஞரை கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.

 
கொழும்பு நகரினுள் 8 தற்கொலைத் தாக்குதலாளிகள்.
Wednesday, 14 June 2006

திருமலை சம்பூரிலிருந்து கொழும்பு நகருக்குள் 8தற்கொலைத் தாக்குதலாளிகள் ஊடுருவியுள்ளதாக சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
உரைப்பை எடுத்துச் சென்றவர் ஓமந்தையில் கைது.
Wednesday, 14 June 2006

ஓமந்தை சோதனைச் சாவடி ஊடாக உரைப்பை எடுத்துச் சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டள்ளார். கடந்த திங்கட்கிழமை 76 ஆயிரம் உரப்பைகளை வன்னியில் நெல்,தானியங்கள்,விதைகளைப் பொதியிடுவதற்காகச் பாரவூர்த்தி ஒன்றில் எடுத்துச் சென்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். கைது செய்யப்பட்ட வர்த்தகர் இராணுவத்தினரின் கடும் விசாரணைகளுக்குள் உட்படுத்தப்பட்டதோடு பாரவூர்த்தியும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 
கிளைமோர்த் தாக்குதல் முயற்சி முறியடிப்பு
Wednesday, 14 June 2006

நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கிளைமோர்த் தாக்குதலை நடத்துவதற்குத் விடுதலைப் புலிகளின் சீருடை யில் தயாராக இருந்த சிறிலங்கா இராணுவ அணியினர் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் நடத்திய தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர்கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
புதிய சமாதான முன்னெடுப்புகள் இல்லை: நோர்வே
Wednesday, 14 June 2006

ஓஸ்லோப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் நோர்வே புதிய சமாதான முன்னெடுப் புகளை அனுசரணைப் பணிகளையோ மேற்கொள்ளாது என்று நோர்வே அரசாங்கம் அறிவி த்துள்ளது.சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நோர்வே வெளி விவகார அமைச்சர் ஜோனஸ் கர் ஸ்டோர் கடந்த திங்கட்கிழமை சந்தித்த போது இது தெரிவிக்கப்பட்டதாக நோர்வே போஸ்ட் ஊடகம் நேற்று செவ்வாய்க்கிழமை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.இனப்பிரச்சனையில் தங்களுக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும் அனுசரணையாளர்கள் மட்டுமே தாங்கள் என்றும் மங்கள சமரவீரவிடம் நோர்வே வெளி விவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
மட்டக்களப்பு மாமாங்கத்தில் வாலிபர் சுட்டுக்கொலை
Wednesday, 14 June 2006

மட்டக்களப்பு, மாமாங்கம் சேமக்காலை வீதியில் வைத்து தமிழ் வாலிபர் ஒருவர் நேற்று இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கே .ரஞ்சன் என்ப வரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சேமக்காலை வீதியில் உள்ள தேனீர்க் கடையொன்றுக்கு அருகில் இந்த வாலிபர் நின்று கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் அங்கு வந்த இனந் தெரியாத நபர்கள் இவர் மீது கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளனர்.

 
வவுனியாவில் ஊர்காவல் படைவீரர் ஒருவர் சுட்டுக்கொலை
Wednesday, 14 June 2006

வவுனியாவிற்கு வடமேற்கேயுள்ள கிரமமடு குடாகச்சக்கொடி என்ற இடத்தில் ஊர்காவல் படைவீரர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரவு கடமையை முடித்து கொண்டு; வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இவர் சுடப்பட்டதுடன் அவரிட மிருந்த ஆயுதமும் அபகரிக்கப்பட்டுள்ளது.

 
வவுனியா பகுதியில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரியை காணவில்லை
Wednesday, 14 June 2006

வவுனியா பகுதியில் கல்மடு,கிடாச்சூரி இராணுவ முகாமில் கடமையாற்றிய லெப்டினன்ற் தரத்தைச் சோந்த புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் காணாமல் போயிருப்பதாகவவுனியா காவல்துறையினரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் திகதி விடுமுறை நிமித்தம் குருநாககலில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றவர் கடமைக்குத் திரும்பி வர வில்லை.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..