|
Saturday, 10 June 2006 |
|
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி வீரச்சாவடைந்துள்ளார்.வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக லெப். கேணல் மகேந்தி செயற்பட்டார்.இதனிடையே விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மன்னார் மாவட்டம் பாலமடு பகுதியில் நேற்று இரவு 7.25 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. சேத விவரம் தெரியவில்லை. |
|
|
Saturday, 10 June 2006 |
|
இலங்கையில் எழுந்திருக்கும் மிக மோசமான சூழ்நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் நோர்வே அரசாங்கம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமும் ஐந்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இந்தக் கேள்விகளுக்கு இரு தரப்பினரும் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நோர்வே அரசாங்கமும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமென்று அறிவித்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 10 June 2006 |
|
ஏறக்குறைய 20 வருடங்களாக தமிழீழ தேசத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடுதலைப்போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற் படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். சிறிலங்காவில் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட சில குழுக்கள் தமிழீழத்தில் செயற்படுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழீழ த்தில் நீதி, நிர்வாகம் என்று அனைத்தும் விடுதலை ப்புலிகளாலேயே நடத்தப் படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை விடுதலைப்புலிகள் எந்த ஒரு தேர்தலிலும் நேரடியாக பங்குபற்றியதில்லை. இவைகள் யாரும் மறுக்க முடியாத, அனைவருமே அறிந்த உண்மைகள் ஆகும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
தனி நாடாக இருக்காத இலங்கையைப் பலவந்தமாக ஒன்றுபடுத்தி, 1833 இல் அப்போதைய காலனித்துவ ஆதிக்க நாடான பிரிட்டன் செய்த திருகுதாளமே இன்றைய இலங்கையின் அவல நிலைக்குக் காரணம் என்பதை நேற்று இப்பத்தியில் பார்த்தோம். தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் தன் நிர்வாக வச திக்காகத் தான் திணித்த வலோற்கார இணைப்பு நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாதது என்பதை "வெள் ளைக் கனவான்களான' பிரிட்டிஷாருக்கு ஆரம்பத்திலேயே உறைப்பாகப் புரியத் தொடங்கி விட்டது என்பதுதான் உண்மை. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை `இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக் கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் உருவாக முழு மூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி. சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட போது, இனப் படுகொலை என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
நோர்வேயின் ஒஸ்லோவில் விடுதலைப்புலிகளுக்கும் நோர்வே அனுசரணை யாளர்களுக்கும் கண்காணிப்புக் குழுவின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் விடுதலைப்புலிகளையும் சிறிலங்கா அரச தரப்பையும் பேச வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் விடுதலைப்புலிகளின் உறுதியான நிலைப்பாட்டால் தோல்வி அடைந்தன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒஸ்லோவில்நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தடைபட்டது குறித்து இந்தியாகவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
கண்காணிப்புக் குழுவிலிருந்து சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளியேறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தடை காரணியாக அமைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் கருத்துரைத்த தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளால் மேலெழுந்த வாரியாக எடுக்கவில்லை என சுட்டிக்காட்யுள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
சமாதான முன்னெடுப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அடிப்படைக் காரணியாக அமைந்ததென நோர்வே தெரிவித்துள்ளது.இன்று AFP செய்தி நிறுவனத்திற்கு செவ்வி வழங்கியிருக்கும் நோர்வேயின் சர்வசேத அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவிக்கையில் ... |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 09 June 2006 |
|
சிறீலங்கா அரசாங்கம் தமிழர் மீதான யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்க 60 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை பாகிஸ்தானிடமிருந்து அவசர அவசரமான கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.T 55 டாக்கிகள், C-130 துருப்புக் காவிகள் விமானங்களுக்கான தொழில்நுட்ப உதவிகள், ஏவுகணைகள் போன்றவற்றை பாகிஸ்தானிடமிருந்து கோரியுள்ளது. |
|
|
Friday, 09 June 2006 |
|
மன்னார் வங்காலை தோம்ஸ்புர்pயில்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இருபிள்ளைகள் உட்பட்ட நால்வர் வெட்டிக் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். |
|
|
|
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>
|