|
Saturday, 03 June 2006 |
சர்வதேசத்திற்கு கடைசி செய்தியை எடுத்துச் செல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோவுக்கு செல்கின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
இலங்கையின் வெலி ஓயா எனப்படும் மணலாறு பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையை முடித்துக்கொண்டு தமது தளத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இராணுவத்தினர் மீது இன்று பிற்பகல் 12.30 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கைக்குண்டுத் தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இன்னுமொருவர் காயமடைந்ததாகவும் இராணுவத்தின் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமுலையில் இன்று முற்பகல் இராணுவ காவலரண் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.முகமாலையின் வடக்கு சோதனைச் சாவடியில் சிறிலங்கா இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் படையினரின் வாகனத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். கருவான்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய பாடசாலை மைதானத்திலிருந்து புறப்பட்ட இக்கும்பல் சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களைப் படுகொலை செய்துள்ளது.வாழைச்சேனை சிறிலங்கா காவல் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.கருவான்கேணியைச் சேர்ந்த டி. விமலேந்திரன்(வயது 34), எம். சித்திரவேல்(வயது 38) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது |
|
|
Friday, 02 June 2006 |
|
போர்நிறுத்த உடன்பாடு அமுல்படுத்தப்பட்டு சமாதான நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகவுள்ளது. சிங்கள அரசு சமாதானம் எனக் கூறிக்கொண்டு போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய கெடுபிடிகள், ஆட்கொலைகள், யுத்த திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய சூழலில் போர்நிறுத்தம் என்ற போலியான கட்டுக்குள் தமிழ் மக்கள் எத்தனை நாட்களுக்கு முடங்கிக் கிடப்பது என்பது இன்றைய கேள்வியாகும்.இந்த நிலை தமிழீழ விடுத லைப் புலிகள் தீர்க்கமான முடிவினை எடுக்கின்ற ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். போர்நிறுத்தமுமில்லை, சமாதானமுமில்லை என்ற சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை விடுத்து உக்கிரப் போரை ஆரம்பிப்பதுவே விடுதலைப் புலிகளின் அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய நிலையாகும் என்பதை நிலவரங்கள் காட்டுகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
ஐரோப்பிய ஒன்றியத் தடை மற்றும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கை தடுக்க முடியாது என்று இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி கூறியுள்ளார்.இனையத்தளம் ஒன்றில் வெளியான அவரது கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கையாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக சிறிலங்கா மகிழ்வாகக் கொண்டாடலாம். ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இலக்கான தமிழீழ அரசு என்பதை அடைவதை தடுகக் முடியாது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரை யாடவுள்ளதாக தெரியவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தையில் புலிகள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தநிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது தொடர்பாகவே இராஜதந்திரிகள் தமிழ்ச் செல்வனுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகின்றது. எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்பாக இராஜதந்திரிகள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வார்களெனவும் தெரியவருகின்றது. |
|
|
Friday, 02 June 2006 |
|
வந்தாறுமூலை களுவன்கேணி தொடரூந்து நிலையத்துக்கு பின்புறம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஓய்வில் இருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மரத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது.இக்கிளைமோர் வெடித்ததில் திலக்ரட்ண (வயது 24) என்ற படைத்தரப்பைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஏறாவூர் சிறிலங்கா காவல்நிலைய பிரதேசத்தில் பணியை முடித்து ஓய்வெடுப்பதற்காக களுவன்கேணி தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மாமர நிழலில் நின்றபோது போது இக்கிளைமோர் வெடித்தது.மட்டக்களப்பு நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் வடபகுதியில் களுவன்கேணி அமைந்துள்ளது. |
|
|
Friday, 02 June 2006 |
|
மன்னார் வங்காலை நானாட்டான் வீதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் படுகாயமடைந்தனர். சிறிலங்காப்படை முகாமை அண்மித்த பஸ்திபுரியில் சிறிலங்காப்படையினரின் இரு சக்கர உழவூர்தியை இலக்குவைத்து நேற்று வியாழக்கிழமை இரவு 7.35மணியளவில் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் லோரென்சியா (வயது 12) என்ற சிறுமியும் அவரது தந்தை ஏ. அருள்நேசனும் (வயது 42) படுகாயமடைந்தனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
வவுனியா மாவட்டம் காயங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.கப்டன் தமிழ்மதி என்றழைக்கப்படும் வைரவர் கோவில் அருகாமை பரந்தன் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகவும், உதயநகர் கிழக்கு உதயநகர் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட இராசரத்தினம் ஆதவன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.இம்மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தினை தெரிவித்துள்ளனர். |
|
|
|
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>
|