|
Friday, 21 October 2005 |
|
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் சிங்களப் படைப்புலனாய்வும், ஒட்டுப்படையும் தமிழ் மக்கள் மீதான தமது புலனாய்வு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போர் நிறுத்தம் பலவீனப்பட்டு அது வலுவிழந்து, செயலிழந்து போவதற்கு ஒட்டுப்படைகளும் சிறிலங்கா புலனாய்வுப் படைப் பிரிவினருமே காரணம். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 October 2005 |
|
எழுவோம் தமிழின உரிமைக்காக" எனும் பொங்குதமிழ் தீப்பந்த எழுச்சிப்பேரணி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.1,500-க்கும் மேற்பட்ட நோர்வே வாழ் தமிழ் மக்கள் இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு, தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டின் பலத்தினையும் உணர்வெழுச்சியினையும் வெளிப்படுத்தினார்கள். தமிழீழத் தாயக மக்களின் நீதியானதும் உண்மையானதுமான விடுதலைக்காக தமது ஒருமித்த குரலை புதிய நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் வலியுறுத்தினார்கள்.
|
|
|
Friday, 21 October 2005 |
 Newcastle என்ற நோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால் இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடத்தைச் சுற்றியுள்ள 10கிலோ மீற்றர் பகுதி தற்காலிகத்தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இநத நோய் இருப்பதற்கான அறிகுறிகள் 2002 ஆண்டில் இருந்து இருக்கவில்லை. ஆனால் இநத கோழிகளுக்கான நோய் எந்த விதத்திலும் மனிதர்களுக்கு ஆபத்தில்லாதது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
Friday, 21 October 2005 |
 Nibe என்ற இடத்தில் 20வயது இளைஞர் ஒருவர் ஆரம்பத்தில் அதிவேகமாகமும், முன்னே செல்லும் வண்டிக்கு மிகநெருக்கமாக காரைச் செலுத்தியும் உள்ளார். இளைய வயதினராக இருப்பதால் இந்த இரண்டு குற்றங்களுமே அவருடை சாரதி பத்திரத்தை இழக்கப் போதுமானதாகும். ஆனால் இது மட்டுமல்லாது அனுமதிக்கப்படாத இரண்டு இடங்களில் மற்ற கார்களை முந்தியுள்ளார். தனது பணிக்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியால் இவர் கண்காணிக்கப்பட்டுள்ளார். சட்டப்படி இவர் இரண்டு தடவைகள் தண்டனை பெறலாம். அதாவது இரண்டு மடங்கு காலத்துக்குச் சாரதி பத்திரத்தை இழக்கலாம். ஆனால் பொலிசாரின் கருத்துப்படி அவர் இரண்டு முறை தண்டிக்கப்படாமல், அதற்கு பதிலாக அவர் மிகப்பெரிய அளவிலான தண்டனைப் பணத்தைத் செலுத்த வேண்டும்;. |
|
|
Friday, 21 October 2005 |
|
எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை'கடந்த இருபத்தியேழு வருட கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் இந்த நாடு எதிர்நோக்கிய எந்தவொரு பாரிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. இன்றைய பிரதான பிரச்சினையான யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினைக்கோ அன்றி மக்கள் அனைவரும் எதிர்நோக்கி நிற்கும் அன்றாட வாழ்வுக்குரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கோ உரிய தீர்வும் பரிகாரங்களும் தேடப்படவில்லை. இத்தனைக்கும் தொடர்ந்து ஜனாதிபதிக் கதிரையில் இருந்து ஆட்சி அதிகாரம் புரிந்து வந்த கட்சிகளே இன்றும் போட்டியில் இறங்கி நிற்கும் இரண்டு பிரதான கட்சிகளாகும். ஆட்கள் மாற்றப்பட்டு நிற்கிறார்களே தவிர, கட்சிகளும் கொள்கைகளும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் போபால் நகருக்கு 200 கி.மீ தொலைவில் சிறிய நகரத்தில் வாழ்ந்து வந்த குஞ்சிலால் மாளவியா என்ற 75 வயதுடைய சோதிடர் இன்று தான் இறக்கப் போவதாக குறித்து வைத்திருந்தார். அவர் குறித்தபடியே இன்று இறந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி மரணித்துள்ளார். இது போல தன்னுடைய பாட்டன் இறக்கும் திகதியை இந்தச் சோதிடர் 15 வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டதாக இறந்த சோதிடருடைய மகன் தெரிவித்தார். |
|
|
Thursday, 20 October 2005 |
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
|
சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை.
அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்... |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
இதில் கூகிள் ஏர்த் என்ற மென்பொருள் மூலம் உலகின் எந்த ஒரு இடத்தையும் செய்மதியில் இருந்து பார்ப்பதுபோல துல்லியமாக பார்த்து விடலாம். இலவசமாக பயன்படுத்த கூடிய இந்த மென்பொருளை ( http://earth.google.com/download-earth.html ) இந்த இணைப்பில் பெற்று கொள்ளலாம். இந்தசேவையால் இந்திய இலங்கை ராணுவம் சற்று விசனம் அடைததாக எங்கோ படித்த நினைவு இருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் எல்லா இடங்களையும் தெளிவாக பார்வை இடக்கூடியதாக இருப்பது தான் காரணம். கூகிள் உலகத்தில் இருந்து பெறப்பட்ட படங்கள் சில கீழே... |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>
|