பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னாரில் கிளைமோர்த் தாக்குதல்: போராளி பலி- பொதுமகன் காயம்
Thursday, 25 May 2006

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார் மடுப்பகுதியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் போராளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.மடு உயிலங்குளம் பகுதியிலிருந்து மடு தேவாலயம் நோக்கிய திசையில் பயணித்த உழவு இயந்திரத்தை இலக்கு வைத்து நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் வீரவேங்கை கயல்வெற்றி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகவும் வெள்ளாங்குளம் சந்தியை தற்காலிக முகவரியாக கொண்ட மருதலிங்கம் சிவலிங்கம் என்ற போராளி வீரச்சாவடைதுள்ளதுடன், மன்னார் முட்கொம்பனைச் சேர்ந்த செல்லத்துரை விஜயபாலன் (வயது 22) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த இளைஞர் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதி என்று மன்னார் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
வீரமணியின் வித்துடலுக்கு பெருமளவு மக்கள் வணக்கம் செலுத்தினர்
Thursday, 25 May 2006

லெப். கேணல் வீரமணியின் வித்துடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நினைவு மண்டபத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மக்கள் எனப் பெருமளவிலானோர் வணக்கம் செலுத்தியதை அடுத்து வித்துடல் அவருடைய இல்லத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.வட்டக்கச்சியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும், கண்டாவளையில் முற்பகல் 11 மணிக்கும்இ தொடர்ந்து விசுவமடுவிலும் பிற்பகல் 3 மணிக்கு புதுக்குடியிருப்பிலும் லெப். கேணல் வீரமணியின் வித்துடல் மக்கள் வணக்கதிற்காக வைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெறும்.புனித விதைகுழியில் நாளை மறுதினம் சனிக்கிழமை வித்துடல் விதைக்கப்படும்.

மேலும் படிக்க…
 
தென்னிலங்கையின் வலையில் மேற்குலகம்
Thursday, 25 May 2006

சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான தடைகளை விதிக்கச் செய்யும் தென்னிலங்கையின் முயற்சி, "பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை' போலாகப் போகின்றது போலும். முதல் சுற்றுஜெனிவாப் பேச்சில் எட்டப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்தாமல்-அதற்கு முரணாகச் செயற்பட்டதன் மூலம்-அடுத்த சுற்று அமைதிப் பேச்சுகளுக்கான வாய்ப்பை சிதறடித்திருக்கும் தென்னிலங்கை அரசு, பேச்சுத் தடைப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டை மட்டும் புலிகள் மீது சுமத்தித் தான் தப்பப் பார்க்கின்றது. ஒரு நாட்டின் அரசு என்ற தகைமை, ஒரு தனிநாட்டுக்கான பிரசார பலம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, அமைதி முயற்சிகள் தடைப்பட்டுத் தேங்கியிருப்பதற்கான குற்றச்சாட்டை புலிகள் மீது "வெற்றிகரமாகச்' சுமத்திய தென்னிலங்கை அரசு, அதன் மூலம் "ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த' எத்தனித்தது.

மேலும் படிக்க…
 
தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு: தமிழ்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தல்
Thursday, 25 May 2006

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழித் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான முதலாவது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை இந்திய மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் தொடங்கியது.அந்த உரையில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு கொள்கை விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.அதில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
ரமணன் படைத்துறை புலனாய்வாளாராக தனித்துவமாக செயற்பட்டார்
Thursday, 25 May 2006

கேணல் ரமணனின் சிறந்த செயற்பாடுகள் காரணமாக அவரை எமது புலனாய்வுத்துறையிலே இணைத்துப் புலனாய்வுச் செயற்பாட்டாளராக இணைக்க நான் விரும்பினேன். ஆனால் மாவட்ட தேவை கருதி அங்கொரு படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாட்டாளராகத் தனித்துவமாகச் செயற்பட்டு வந்தார் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் வீரச்சாவு தொடர்பாக தமிழீழத் தேசியத் தொலைக் காட்சிக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மேலும் படிக்க…
 
காத்தான்குடியில் கிளைமோர்த் தாக்குதல்: 4 காவல்துறையினர் பலி
Thursday, 25 May 2006

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்று கொண்டிருந்த காவல்துறையினரே தாக்குதலுக்கு இலக்காகி பலியானதாக கிழக்கு மாகாண காவல்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

 
வவுனியாவில் கிளைமோர்: பொலிஸ், 2 படை பலி
Wednesday, 24 May 2006
இரண்டு சிறிலங்கா இராணுவத்தினரும் பொலிசார் ஒருவரும் வவுனியாவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தாண்டிக்குளத்தில் உழவியந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கல்மடுவில் உள்ள சிறிலங்கா படையினருக்கு உணவு எடுத்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
வவுணதீவு முகாம் மீது ஷெல் தாக்குதல் 4 படை பலி!
Wednesday, 24 May 2006
வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மீது இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் நான்கு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காலை வவுணதீவு முகாமில் இருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி படையினரால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இதனை தொடர்ந்தே வவுணதீவு முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் சம்பவம் காலை 6:30 மணிக்கு இடம்பெற்றிருக்கின்றது.
 
மகிந்தவின் அழைப்பை நிராகரித்தோம்: சு.ப.தமிழ்ச்செல்வன்
Wednesday, 24 May 2006

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தை விடுத்து இருதரப்பு நேரடியாகப் பேச்சு நடத்துவோம் என்று எம்மிடம் மகிந்த ராஜபக்ச தென்னிலங்கை மதகுருமாரின் ஊடாக அழைப்பு விடுத்திருந்தார். இதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவரின் இந்த முயற்சி அமைதி நடவடிக்கையைச் சீர்குலைக்கும் ஒரு சதி நடவடிக்கை.தென்னிலங்கை மதகுருமாரின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த இந்தக் கோரிக்கையை அனுப்பியிருந்தார் என்றும், இதற்குப் பதிலளிக்கையிலேயே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மேலும் படிக்க…
 
எனது வருகையால் முன்னேற்றம் ஏற்படாது: எரிக் சொல்ஹெய்ம்
Wednesday, 24 May 2006

இலங்கைக்கான தனது வருகையால் தற்போதைய நிலைமைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படக் கூடிய சாத்தியமில்லை என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதித் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.எரிக் சொல்ஹெய்மின் ஊடக அலுவலர் எஸ்பென் குல்லிக்ஸ்டன் இது தொடர்பில் கூறுகையில்,

மேலும் படிக்க…
 
 துரோகி கருணாவின் மறுபக்கம் -பாகம் 10
Tuesday, 23 May 2006

மேஜர் கண்ணனின் மர்மக் கொலையும் கருணா, றெஜி கூட்டுச்சதியும்

உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை!
உறங்கினாலும் அவை மறைந்தோ புதைந்தோ போவதில்லை!
அந்த வீரமகன் வீழ்ந்தது எதிரியால் அல்ல!
நம்பிக்கைத் துரோகியால்.....

'மறைகின்ற சூரியன் இரத்தம் சிந்துவதால்தான் மறுநாளும் வாழ்கிறது ஒரு விடுதலைப் போராளிபோல"
 என்ற இரும்பொறையின் கவிதைகளாக என்றும் எப்போதும் இப்போதும் எம் மனதில் அம்மாவீரன் வாழந்து கொண்டிருக்கிறான்.உயர்ந்த உருவம், ஆரவாரமில்லா அமைதியான அழகான தோற்றம், பல தடவை புன்னகையை விரும்பும் வதனம், எந்தப் பிரச்சனையையும் சமாளித்து நிலமையை சரி செய்யும் இயல்பு! வீரமும் துணிவும் இவனுக்கு சாமரம் வீச ஈழவிடுதலைப் போராட்ட பாதையில் இவன் பாதங்கள் நகர்ந்தன. ஆம்! அவன்தான் விலைபேச முடியாத வீரத்தளபதிகளிலொருவன் மேஜர் கண்ணன்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..