பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மருத்துவ சேவைகள் வாகனம் மீது கிளைமோர்தாக்குதல்
Thursday, 08 June 2006
இன்று காலை சிறிலங்கா இராணுவ ஆழ ஊடுருவும் அணி மருத்துவ சேவைகள் வாகனத்தை இலக்குவைத்து நடத்திய தாக்குதலில் வாகன ஓட்டுனரும் மருத்துவ சேவைப்  பணியாளர் ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இச் சம்பவம் அக்கராயன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீண்டும் மனிதப் புதை குழி?
Thursday, 08 June 2006

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மீண்டும் மனிதப் புதை குழிகளைத் தோண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில், படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன 600 க்கும் மேற்பட்டோரில் பலரது எழும்புக் கூடுகள் பின்னர் செம்மணிப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்டன.

மேலும் படிக்க…
 
மகிந்தவின் கொடூரமான செயற்பாடுகளுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்
Thursday, 08 June 2006

மகிந்த ராஜபக்சவின் இந்த கொடூரமான இந்த செயற்பாடுகளை நாங்கள் மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவருகிற நிலைக்குள் தள்ளப்படும் நிலையை நோக்கி விரைவதையே நான் உணர்கின்றேன் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பில் சிறீலங்கா ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி 10 பொதுமக்கள் பலியான சம்பவம் தொடர்பில் ரிரிஎன் தொலைக்காட்சி இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இதனை அவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க…
 
கிளைமோர் தாக்குதலில் இராணுவ அதிகாரி பலி
Thursday, 08 June 2006

வட தமிழீழத்தில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் ஒன்றில் ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப்பகுதியில் ஊர்தி ஒன்றில் சென்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் அதிகாரி ஒருவர் கொல்லப்பட மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

 
நடவடிக்கை 'சிங்கக் கர்ஜனை"
Thursday, 08 June 2006

சிறிலங்கா ஆயுதப்படைக் கட்டமைப்புகளிலுள்ள தமிழ் அதிகாரிகளை கொலை செய்யத் திட்டம். அச்சத்தில் தமிழ் அதிகாரிகள்
இரு உயர் அதிகாரிகள் முதலில் இலக்கு வைக்கப்பட்டுள்வர்களில் அடங்குகின்றனர்
சிறிலங்காவின் ஆயுதப்படைகட்டமைப்புகளின் பல பிரிவுகளிலும் செயற்படும் தமிழ் அதிகாரிகளை படுகொலை செய்து அதன் பழியை புலிகள் மீது சுமத்துவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க…
 
ஜரேப்பிய ஓன்றியம் இதற்கு என்ன செய்ய போகிறது.?
Wednesday, 07 June 2006

பொது மக்களை கொலை செய்து விட்டு வன்னிபுலிகள் மீது தாக்குதல் என உரிமை கோரியுள்ள நெருப்பு என்ற இiயைத்தளம். இராணுவ துணைக்குழுவான கருணாகுழு டென்மார்க் இiயைத்தளம்

 
புலிகளின் பகுதியில் கண்ணிவெடித் தாக்குதல்
Wednesday, 07 June 2006

5 அப்பாவி பொதுமக்கள் பலி-14 பேர் படுகாயம்

சிறிலங்கா படையினர் ஊடுருவி நடத்திய ஊர்திக் கண்ணிவெடித் தாக்குதலில் 5 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 14 பேர் படு காயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பின் கிரான் வடமுனை மியாங்குளம் நெலுகலில்; உழவு இயந்திரத்தில் பயணம் செய்த மக்கள் மீது இன்று முற்கபல் 10.30 மணிக்கு இத்தாக்குதல் நடந்துள்ளது.

 
பாதுகாப்பு அமைச்சின் பிரதிச் செயலாளராக தயா சந்தகிரி
Wednesday, 07 June 2006

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பிரதிச் செயலாளராக முப்படைத் தளபதியாக உள்ள தயா சந்தகிரி நியமிக்கப்பட உள்ளார்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் கீழ் அவர் பணிபுரியக்கூடும். இதற்கான பரிந்துரை இன்று புதன்கிழமை நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது. இம்மாதம் முதலே இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்படக் கூடும்.தற்போதைய கடற்படை தளபதியான வசந்த கரன்னகொடவிடம் தனது பொறுப்புகளை தயா சந்தகிரி ஒப்படைக்கக் கூடும். புதிய முப்படைத் தளபதியாக விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேரா நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

 
தலைமைப் பீடத்தின் நிலைப்பாட்டை விளக்கவுள்ளோம்
Wednesday, 07 June 2006

அனுசரணையாளர்கள் என்ற வகையில் நோர்வே அரசசோடும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நோட்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து தற்பொழுது ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சூழ்நிலைகள் தொடர்பாக எமது தலைமைப் பீடத்தின் நிலைப்பாட்டை நேரடியாக உறுதியாக எடுத்து விளக்கும் நோக்கோடு நாங்கள் வந்திருக்கின்றோம் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழச்செல்வன் அவர்கள் ஒஸ்லோ விமான நிலையத்தில் வைத்து ஊடவியாளரிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும் படிக்க…
 
கருணா நிதியின் மௌனம் ஏன்?
Wednesday, 07 June 2006
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா தமது அனுதாபத்தைக் காட்ட வேண்டியது காலத்தின் கடமை.சமகாலத்தில் ஈழத்தமிழர்களை சிறிலங்கா இராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்து வருகின்றது.தினமும் ஐந்து பத்துப் பேர் எனப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பெண்கள், வயோதிபர்கள் எனச் சிங்கள இராணுவம் படுகொலை செய்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அச்சம் காரணமாக தமிழகத்தை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் அணுகுமுறைகள் ஈழத்தமிழினத்தின் அவலங்களைத் தீர்ப்பதற்கான பார்வையைச் செலுத்த வேண்டும். ஆனால், தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருக்கும் கருத்து ஈழத்தமிழினத்தை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
மேலும் படிக்க…
 
எரிக் சொல்ஹெய்முடன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு
Wednesday, 07 June 2006

நோர்வே சென்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள், அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான தூதுவருமான எரிக்ச் சொல்ஹெய்மை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..