|
Thursday, 20 April 2006 |
|
ஜெனீவாப் பேச்சுக்களைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் தற்பொழுது இடம்பெறும் போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினை ~அற்பத்தனமான பிரச்சினை என்பது போன்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பேச்சாளரின் கூற்றுக்கள் மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் மிகவும் சரியான தொன்றாகவே இருக்கும். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 April 2006 |
|
லண்டனில் தொழில் கட்சியுடன் தொடர்புகள் இருப்பதாக பலபேரை லண்டனிலும் தாயகத்திலும் ஏமாற்றிவந்த ஜெயதேவன் தனது சொந்த வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகவும், இடம்மாறியும் வாழவேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. லண்டனில் பலகாலமாக பெரிகாடினரின் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதிக்குள் வாழ்ந்துவந்த ஜெயதேவன் கோவில் பணமோசடி காரணமாக பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயருக்கு தமிழ் ஆர்வலர் சிலர் முறையிட்டதால், பிரித்தானிய உளவுத்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பிரதேச பாராளுமன்ற உறுப்பினரான பெரிகாடினரும் தற்போது இவரை கைவிட்டுள்ள நிலையில் தனது இருப்பிடத்தை தற்போது பானெட் பவுன்சில் பகுதிக்கு மாற்றியுள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 April 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சீற்றம் கொள்ளாமல் தமிழர்களது நம்பிக்கையை மேற்குலகம் பெறுவது அவசியமானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.சிறிலங்கா அரச தலைவர் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணிப்பு செய்தமையை மேற்குலகம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 April 2006 |
|
நேற்று மட்டக்களிப்பு கிரான் பகுதியில் உள்ள பெண்டகள் சேனை கிராமத்தில் கருணாகுழு மேற்கொண்ட தாக்குதல் முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் விசேட உந்துருளிப் படையணி மேற்கொண்ட இத் தாக்குதலில் மூன்று கருணா குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐந்து தினங்களுக்கு முன்னர் வாகனேரிப் பகுதியில் இதே குழுவினரே விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை மேற்கொணடனர்.இத் தாக்குதலில் ஒரு போராளி வீரச் சாவடைந்தார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 April 2006 |
|
'நாட்டின் தலைவரென்ற ரீதியில் பெருமையுடன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் வெட்கமும் அவமானமும் வேதனையும் கொண்டவனாக இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறேன்" என அண்மையில் ஒரு நிகழ்வில் சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறினார். அதாவது 1983 ஆம் ஆண்டு ஜுலை இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 April 2006 |
|
சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொடூரப் படுகொலைக்கு பழி வாங்கியே தீருவோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 18 April 2006 |
|
மனிதம் பேசும் மானிடனே!
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 17 April 2006 |
|
யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் இன்று காலை மேற்கௌ;ளப்பட்ட கிளைமோர் தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தால் பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் மேற்கௌ;ளப்பட்ட ஓர் தாக்குதல் என யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கெண்ட இத்தாக்குதலுக்கு பழிவாங்கும் பதில்தாக்குதல் தம்மால் நடத்தப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 16 April 2006 |
|
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்வதற்கான சூழலை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் உங்களது நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 16 April 2006 |
|
மட்டக்களப்பில் துணைப்படைகளைப் பயன்படுத்தி போராட்டத்தை நசுக்க முற்படும் அதேவேளை, திருமலையில் காடையர்களைப் பயன்படுத்தி தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தமிழர்களுக்கெதிராக மீண்டுமொரு முறை திட்டமிடப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. திருகோணமலையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தாக்குதல்களின் பின்னணியிலேயே கடந்த புதன்கிழமை மாலை இனப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு செய்திகள் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 16 April 2006 |
|
...மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>
|