பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

படையினரின் அடாவடி; மக்களின் கிளர்ச்சி
Monday, 31 October 2005

புத்தூர்ப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இரவில் தனித்திருந்த பெண்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம், அதனையடுத்து பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட கடும்மோதல், இதன்போது அப்பாவி இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, பலர் காயமடைந்தமை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலை யாழ். குடாநாட்டில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க…
 
சிங்கள ஊடகங்களின் `கொலை'ச் செய்திகள்
Monday, 31 October 2005

சிங்கள நாளேடான `சத்தின'வின் காரண காரிய விளக்கங்கள்இலங்கையில் கிழக்கில் இன்று மினி யுத்தம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை என்று கூறலாம்.கிழக்கில் இன்று சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ தினம் ஒரு படுகொலை நிகழ்ந்த வண்ணமேயுள்ளது.

மேலும் படிக்க…
 
ஜனாதிபதி வேட்பாளர்களின் மீது அதிகரித்துள்ள பாதுகாப்பு அக்கறை
Sunday, 30 October 2005

தேசிய பாதுகாப்புச் சபையின் ஆலோசனை பெறப்பட்டே பிரசார நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க…
 
நடிகர் கார்த்திக் புதிய கட்சி துவங்குகிறார்
Saturday, 29 October 2005

70களில் குறிப்பிடத்தக்க கதாநாயகர்களில் ஒருவரான முத்ராமனின் மகன் கார்த்திக் அடுத்த ஆண்டு ஜனவரியில் தன் இனத்தவருக்கும், பொதுவாக அடித்தட்டு மக்களுக்கும் தொண்டு புரியவென புதியதொரு கட்சியை துவக்கவிருப்பதாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
உளவாளிகள் அவதானம் (பாகம் 2)
Friday, 28 October 2005
இவ்வேளையில் மன்னார் மடுவில் உள்ள பண்ணை முகாமொன்றில் தேசியத் தலைவர் அவர்கள் இருக்கின்றார் என்ற தகவல் பஸ்தியாம்பிள்ளைக்கு கிடைத்தது. உடனடியாக பஸ்தியாம்பிள்ளை மற்றய பொலிஸ் அதிகாரிகளுடன் ஜீப்பில் பறந்தார். முகாம் பொலிஸ்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த போராளிகளுள் இயக்க மூத்த உறுப்பினரான கள்ளியங்காட்டைச் சேர்ந்த செல்லக்கிளியம்மானால் பஸ்தியாம்பிள்ளையும் மற்றய பொலிஸ் அதிகாரிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் பஸ்தியாம்பிள்ளையின் புலனாய்வு நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வீழ்ந்தது. பஸ்தியாம்பிள்ளையின் சாவு ஜே. ஆர் அரசுக்கு பெரும் அதிர்ச்சியும் பின்னடைவும் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க…
 
சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்கு முன்னர் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தார்
Thursday, 27 October 2005
நான் தலைவரைச் சந்தித்து சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்கு முன்னர் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தார். இயக்கத்தின் அனைத்துத் துறையினருக்கும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குரிய ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார். இயக்கத்தின் அனைத்து வளங்களையும் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார். தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த போராளிகளிலிருந்தும் கூட மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆளணிகளை அனுப்புவதிலேயே குறியாகயிருந்தார். யுத்தம் செய்து மீட்ட முல்லைத்தீவை நாங்கள் பார்க்கின்ற பொழுது பெரும் ஆக்கிரமிப்பை வென்ற நிலையில் பெரும் நகரத்தைக் கைப்பற்றிய வெற்றிக்களிப்பில் தான் எங்களது பார்வை இருந்தது. அதனால் அழிவுகள் எங்களைத் தாக்கவில்லை. எங்களை மீறிய இயற்கையின் சக்தி இப்படிப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருப்பது பெரும் சோகமான நிகழ்வு என சுனாமி களமுனையில் நின்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்ததளபதியும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றை இந்தப் பகுதியிலும் தருகிறோம்.
மேலும் படிக்க…
 
உளவாளிகளின் அடையாளத்தை கசியச் செய்தவர் யார்?
Friday, 28 October 2005

அமெரிக்க அதிபர் புஷ் அவர்களின் இரண்டு உயர் அதிகாரிகள், அமெரிக்க உளவுப்படை பிரதிநிதி ஒருவரின் அடையாளத்தை கசியச் செய்தனரா என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக, அதிபரின் ஆலோசகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த விவகாரத்தை புலனாய்வு செய்துவரும் சிறப்பு அரச சட்டவாதி, சிறிது நேரத்தில் இது தொடர்பாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் வரும் ஞானம்
Thursday, 27 October 2005

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துச் சென்றுள்ளன. இதனால் மக்கள் சொல்லொணா கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மக்களின் வருமானம் எந்த வகையிலும், அதிகரித்துச் செல்லும் விலைவாசிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையாததன் காரணமாக வறிய மற்றும் சாதாரண தர மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
பூனையெண்டெல்லோ நினைச்சன்....?
Thursday, 27 October 2005
ம்... அப்ப நீர் ஆரையோ போடப் போறீர் எண்டு சொல்லும்.
      
கீழ பாக்கிறபடியால் மேல எங்கயோ ஏறி நிக்கிறீர் எண்டு
தெரியுது.
      
ஆனால் அங்கால என்ன கிடக்குது எண்டு தெரியேல்லயே...
சுவிம்மிங் பூலோ?
      
ஆராவது பெட்டைகளோட கூத்து அடிக்கினமோ? மண்ணாங்கட்டி!
     
உம்மைப் பாத்தாப் பூனை மாதிரி
எல்லோ கிடக்குது.
      
என்னடாப்பா ஒரு மண்ணும்
விளங்கேல்ல. . .
மேலும் படிக்க…
 
கவிதை: கும்மியடி பெண்ணே... கும்மியடி..
Thursday, 27 October 2005
கும்மியடி பெண்ணே, கும்மியடி
- பெருங்
கூட்டத்துடன் வந்து கும்மியடி!
நம்முடை மண்ணில் ஜனாதிபதி தேர்தல்
நாடகமே என்று கும்மியடி!
தென்னிலங்கை என்னும் தீவினிலே
- எங்கள்
செந்தமிழர் இன்னும் தீயினிலே!
முன்னிருந்தே இந்தத் தீயை மூட்டுவ(து) இம்
மூடர் தேர்தலென்று கும்மியடி!
அள்ளி வீசிடுவர் வாக்குறுதி
- இங்கு
ஆயிரம் பேசுவர் காப்புறுதி!
நள்ளிரவு வரை நா சலிக்காமல்
நடிப்பர் என்று சொல்லி கும்மியடி!
மேலும் படிக்க…
 
எனது தேசத்தை நோக்கி...
Thursday, 27 October 2005
ஐரோப்பியர்கள் தமிழர்களுக்குத் தஞ்சம் கொடுத்ததற்காக அவர்கள் போடும், கூறும் யாவற்றுக்கும் தமிழர் தரப்பு செவிசாய்த்து வாலாட்டுவது நமது கடமையாக இருக்க முடியாது. எமது வாழ்வையும், வளர்ச்சியையும்- எதிர்கால அரசியலை முன்னெடுப்பதையும் நாமே தீர்மானிப்பது நமது ஜீவாதாரவுரிமை. இதையெந்தக் கொம்புவைத்த இனங்களும் எம்மிடமிருந்து பறித்தெடுக்க முடியாது. ஐரோப்பாவானது தனது கடந்த காலத்தை மறைத்துவிட்டு மற்றவர்களுக்கு ஆலோசனை செய்கிறது.  இங்கே, இதே கடந்தகாலமானது புதிய பாணியிலான பொருளாதார வாதிக்கத்தோடு - பின்காலனித்துவப்  பண்போடு, புதியதொரு பொருளாதார வியூகத்தை எம்மீது திணிக்கிறது. இதன் புட்சியானது ஈராக், அவ்கானிஸ்தான் படையெடுப்பாகவும்- அரசியல் வியூகமாகவும் பரிணாமிக்கின்றது.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 151 152 153 154 155 156 157 158 159 160 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..