மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை
காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில்
இருக்கும் என சிறீலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை
இந்திய மத்திய அரசாங்கம் நீக்காது என இந்திய வட்டாரங்களை மேற்கோள்காட்டி
செய்திச்சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களாகப் பெய்துவரும் சுழற்காற்றுடன் கூடிய தொடர் மழையினால்சுமார் 55 ஆயிரம் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்கும் மும்பையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 9 இடங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 100 பேர் பலியானார்கள். மேலும் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு சுதந்திரத் தமிழீழமே ஒரே யொரு தீர்வு என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையில் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 4 விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் மேலும் ஒருவர் காயமடைந்தார்.
வவுனியா அரச உணவுக் களஞ்சியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு காத்துக்கிடந்த 20 லொறிகளும், இன்று கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தாளங்குடாவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட இவரது சடலமும், வாகரையில் சுடப்பட்ட மற்றயவரது சடலமும் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.