பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

புத்தல - கதிர்காமம் வீதியில் துப்பாக்கிச் சூடு - ஒரு படையினன் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 23 November 2008
புத்தல - கதிர்காமம் வீதியில் 136வது மைல் கல் பகுதியில் நேற்று 22ம் திகதி சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தமிழீழ விடுதலை புலிகள்நடாத்திய நேரடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு சிறிலங்கா படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்ததாக அம்பாறை மாவட்ட விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 23 November 2008
இந்திய றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாகவும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க…
 
நாவற்காடு வைத்தியரை கொலைப் பிண்ணனியில் ரி.எம்.வி.பி (கருணா குழு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 23 November 2008
வவுணதீவு நாவற்காடு கிராமிய வைத்தியசாலை வைத்தியராக கடமையாற்றிய சிங்களவரான பாலித பத்மகுமாரவை கொலை செய்யுமாறு வவுணதீவு மணிக்காட்டில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (கருணா குழு)  அலுவலகப் பொறுப்பாளர் வர்ணனே உத்தரவிட்டார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக லக்பிம நாளேடு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
முறிகண்டி முன்னேற்ற முயற்சி முறியடிப்பு : படையினர் 6 பேர் பலி, உலடம் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

கிளிநொச்சி, முறிகண்டிக்கு அருகிலுள்ள அறிவியல் நகரில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படைகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
வரலாற்றில் தனிச்சிறப்புப் பெறும் தமிழீழ மாவீரர் நாள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க…
 
வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் விடுவிக்கப்பட்டார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட வெற்றி வானொலியின் முகாமையாளர் வாமலோஷனன் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க…
 
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் 2 சடலங்கள் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
கோப்பாவெளி மகிழவெட்டுவான் பகுதியில் விஷேட அதிரடிப் படையினர் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கோப்பாவெளி மகிழவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் விஷேட அதிரடிப் படையினர் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
வன்னி மீது இதுவரை 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன - மங்கள சமரவீர அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

வன்னி மீது இதுவரையில் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இது ஐப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமாவில் அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைக்கு ஒப்பானது எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பு கடத்தல்களின் பின்னணியில் கருணாகுழு உறுப்பினர் ரஞ்சன்..!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
பரந்தனில் முன்னேறிய படைக்கு என்ன நடந்தது? இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 22 November 2008

பரந்தனில் 270 பேரை கொண்ட சிறிலங்கா இராணுவக் குழுவிற்கு என்ன ஆனது. அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 211 - 225 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..