|
Saturday, 21 October 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய் கள் மூவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசு செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழுவிடம் கோரியுள்ளது.அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் இந்தச் சிப்பாய்கள் விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டிருக்கின்றனர். கடந்த ஒக்ரோபர் 6, 11, 14 ஆகிய திகதி களில் வாகரை, மாங்கேணி, முகமாலை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த மூன்று படையினரும் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 21 October 2006 |
|
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பு எதிர்பாராதது என்று இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்து ள்ளார். தனது இருநாள் இலங்கை பயணத்தை நிறைவு செய்த பின்னர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரிச்சர்ட் பௌச்சர் கூறியதாவது:
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 21 October 2006 |
|
கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.மகரகம பகுதியில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வந்த டேவிட் விக்னேஸ்வரன்(வயது 35) மற்றும் அவரது மனைவி திருக்கேஸ்வரி விக்னேஸ்வரன் (வயது 30) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் காலை 6 மணிய ளவில் இருவரது உடல்களும் பிலியந்தல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களு டன் மீட்கப்பட்டன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தன்னுடைய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானியா அறிவித்துள்ளது. கிடைக்கக் கூடிய முதல் வாய்ப்பிலேயே அங்கிருந்து வெளியேறுமாறு அது அறிவுறுத்தியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக படையினரின் உடல்கள் வீதிகளில் வெடித்துச் சிதறும் இச்சந்தர்ப்பத்தில், அரசு புலிகளுடன் பேச்சு நடத்த முனைவது சரிதானா? பேச்சை நிறுத்திப் படையினரைப் பலப்படுத்திப் புலிகளை இல்லாதொழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
வட பகுதியில் இருந்து தென்இலங்கை பகுதிகளிற்கு செல்லும் பயணிகள் இனி வரும் காலங்களில் சிறீலங்கா காவல்துறையினரிடம் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந் நடைமுறையானது புரிந்துணர்வு ஒப்பந்த த்திற்கு முன்னர் பின்பற்றப்பட்டது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இந்த பாஸ் நடைமுறை கைவிடப்பட்டது ஆனால் இப்போது மீண்டும் பாஸ் நடை முறைக்கு வந்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
சம்பூரை கைப்பற்றி புலிகளை தோற்கடித்து விட்டதாக சில கட்சிகள் கடந்த காலங்களில் மார்தட்டிக் கொண்டன. அப்படியானால் முகமாலையிலும் காலியிலும் புலிகளின் ஆவிகளா தாக்குதலை மேற்கொண்டன? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
இனப்பிரச்சனைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் ஈடுபாட் டுடன் உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமியில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: பேச்சுக்கள் தான் இறுதி இலக்கு. அதற்காக நாம் நாட்டை காட்டிக்கொடுக்க முடியாது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 20 October 2006 |
|
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதியில் உள்ள தரவை, இறால்குளம் ஆகிய இடங்களில் சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.நேற்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடந்த தாக்குதலிலேயே விநாயகர் ஆலயம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கட்டடம் உட்பட 13 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 19 October 2006 |
|
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக அலோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய உத்தியோகபூர்வ செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியத் தூதுவராக இருந்த நிரூபமா ராவின் இலங்கைக்கான பதவிக் காலம் முடிந்ததையடுத்தே இவர் இப் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். முன்னாள் தூதுவர் நிரூபமா ராவ் சீனாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
|
Thursday, 19 October 2006 |
|
காலித்துறைமுகம் மற்றும் கடற்படைத்தளம் மீதான தாக்குலைத் தொடர்ந்து அப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட படையினர் சந்தேகத்தின் பெயரில் 16பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 பேர் காலி நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனைய இருவரும் வத்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
|
<< முதல் < முந்தைய 151 152 153 154 155 156 157 158 159 160 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2386 - 2400 / 3349 |