|
Saturday, 03 June 2006 |
|
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமுலையில் இன்று முற்பகல் இராணுவ காவலரண் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை செய்து விட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.முகமாலையின் வடக்கு சோதனைச் சாவடியில் சிறிலங்கா இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் படையினரின் வாகனத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 03 June 2006 |
|
வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். கருவான்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய பாடசாலை மைதானத்திலிருந்து புறப்பட்ட இக்கும்பல் சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களைப் படுகொலை செய்துள்ளது.வாழைச்சேனை சிறிலங்கா காவல் நிலையத்திலிருந்து 500 மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது.கருவான்கேணியைச் சேர்ந்த டி. விமலேந்திரன்(வயது 34), எம். சித்திரவேல்(வயது 38) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது |
|
|
Friday, 02 June 2006 |
|
ஐரோப்பிய ஒன்றியத் தடை மற்றும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கை தடுக்க முடியாது என்று இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி கூறியுள்ளார்.இனையத்தளம் ஒன்றில் வெளியான அவரது கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கையாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக சிறிலங்கா மகிழ்வாகக் கொண்டாடலாம். ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இலக்கான தமிழீழ அரசு என்பதை அடைவதை தடுகக் முடியாது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்து கலந்துரை யாடவுள்ளதாக தெரியவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்த பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தையில் புலிகள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தநிறுத்த உடன்படிக்கையை உரிய முறையில் தொடர்ந்தும் கடைப்பிடிப்பது தொடர்பாகவே இராஜதந்திரிகள் தமிழ்ச் செல்வனுடன் கலந்துரையாடவுள்ளதாக அறிய முடிகின்றது. எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்பாக இராஜதந்திரிகள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வார்களெனவும் தெரியவருகின்றது. |
|
|
Friday, 02 June 2006 |
|
வந்தாறுமூலை களுவன்கேணி தொடரூந்து நிலையத்துக்கு பின்புறம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஓய்வில் இருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மரத்தில் இக்கிளைமோர் பொருத்தப்பட்டிருந்தது.இக்கிளைமோர் வெடித்ததில் திலக்ரட்ண (வயது 24) என்ற படைத்தரப்பைச் சேர்ந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஏறாவூர் சிறிலங்கா காவல்நிலைய பிரதேசத்தில் பணியை முடித்து ஓய்வெடுப்பதற்காக களுவன்கேணி தொடரூந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மாமர நிழலில் நின்றபோது போது இக்கிளைமோர் வெடித்தது.மட்டக்களப்பு நகரிலிருந்து 25 கிலோ மீற்றர் வடபகுதியில் களுவன்கேணி அமைந்துள்ளது. |
|
|
Friday, 02 June 2006 |
|
மன்னார் வங்காலை நானாட்டான் வீதியில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மூவர் படுகாயமடைந்தனர். சிறிலங்காப்படை முகாமை அண்மித்த பஸ்திபுரியில் சிறிலங்காப்படையினரின் இரு சக்கர உழவூர்தியை இலக்குவைத்து நேற்று வியாழக்கிழமை இரவு 7.35மணியளவில் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் லோரென்சியா (வயது 12) என்ற சிறுமியும் அவரது தந்தை ஏ. அருள்நேசனும் (வயது 42) படுகாயமடைந்தனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
வவுனியா மாவட்டம் காயங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்காப் படையினர் நடத்திய திடீர்த் தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.கப்டன் தமிழ்மதி என்றழைக்கப்படும் வைரவர் கோவில் அருகாமை பரந்தன் கிளிநொச்சியைச் சொந்த முகவரியாகவும், உதயநகர் கிழக்கு உதயநகர் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட இராசரத்தினம் ஆதவன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.இம்மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தினை தெரிவித்துள்ளனர். |
|
|
Friday, 02 June 2006 |
|
அடுத்த 8, 9 ஆம் திகதிகளில் நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக விடுதலைப் புலிகளின் உயர்மட்டக் குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியிலிருந்து கட்டுநாயக்கா வழியாக நோர்வே புறப்படும் எனக் கொழும்பில் நேற்று தகவல்கள் வெளியாகின. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மொழி பெயர்ப் பாளர் ஜோர்ஜ் ஆகியோர் உட்பட புலிகளின் அணி ஒன்று நாளை மறுதினம் நோர்வே புறப்படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
ஒரு நாட்டோடு சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா என்பதை மொண்டிநீக்ரோ நாட்டு மக்கள் தீர்மானிக்கிற உரிமை உள்ளபோது ஈழத் தமிழர்களுக்கு இல்லையா என்று பாவலர் அறிவுமதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பாவலர் அறிவுமதி பேசியதாவது:அய்யாவின் (தந்தை பெரியாரின்) கடைசி கனவை (அனைத்து சாதி அர்ச்சகராதல்) நனவாக்கிய மகிழ்ச்சியில் இருக்கிறது பெரியார் திடல். தம்பியின் முதல் கனவையும் நனவாக்கும் மகிழ்ச்சியைத் தரும் நம்பிக்கையும் இருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 02 June 2006 |
|
சிறிலங்காவில் பாரிய அரசியல் மாற்றத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உருவாக்காவிட்டால் சர்வதேச நாடுகளின் இராணுவ உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான டொச் தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான ஐரோப்பிய பிரதிநிதியாக உள்ள வன் டிஜிக் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்: அமைதி முயற்சிகளை மீண்டும் தொடங்க மறுத்தால் சிறிலங்கா அரசாங்கமும் போராளிகள் குழுவும் சர்வதேச ரீதியாக ஓரங்கட்டுப்படுகிற நிலை உருவாகி உள்ளது. நாம் வெறும் இராஜதந்திர மொழியில் மட்டும் கேட்டுக்கொள்ளவில்லை. பேச்சுக்களைத் தொடங்க மறுத்தால் சர்வதேச சமூகத்தினது ஆதரவு கைவிடப்படும். இதுதான் இருதரப்பினருக்குமான ஒரு கடும் நிலையாக நாம் கருதுகிறோம். |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2446 - 2460 / 2644 |