|
Wednesday, 27 September 2006 |
|
யாழ்ப்பாணம் தாவடி குளப்பிட்டிப் பகுதியில், இன்று காலை படைத்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கச்சேரி நல்லூர் வீதிப் பகுதியிலும், படையினர் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
|