பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

வலிகாமத்தில் மூன்று மணி நேர இடைவெளியில் மூவர் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

வலிகாமத்தில் நேற்று மூன்று மணிநேர இடைவெளியில், சிறீலங்கா படைகளால் மூன்று பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.நேற்று காலை 7:00 மணியளவில், சுதுமலை வடக்கில் இருபத்து மூன்று அகவையுடைய யோகேந்திரன் கஜேந்திரன் என்ற இளைஞர், சிறீலங்கா படைகளால் கடத்தப்பட்டார்.

மேலும் படிக்க…
 
வடமராட்சி கிழக்கு நோக்கி துருப்புக்களும் தளபாடங்களும் நகர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

வடமராட்சி கிழக்கின் கரையோரப் பகுதிகளை நோக்கி,பெருமெடுப்பில் சிறீலங்கா துருப்புக்களும், யுத்த தளபாடங்களும் நகர்த்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.வடமராட்சி கடற்பரப்பில் இடம்பெற்ற உக்கிர சமரை தொடர்ந்து, கரையோரப் பகுதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ள னர்.குறிப்பாக வலிகாமத்தில் உள்ள படை முகாம்களில் இருந்து பெரும் எண்ணிக்கை யிலான சிறீலங்கா துருப்புக்கள், வடமராட்சி கிழக்கு கரையோரப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.

 
கடத்தப்பட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலமாக கொழும்பில் மீட்பு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

கொழும்பில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் கடத்தி செல்லபட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலாமாக இன்று இராணுவ புலனாய்வு பிரிவினா ல் வீசப்பட்டுள்ளார்.  கொழும்பு 15 மட்டக்குளியில் வாழ்ந்துவரும் பொலிஸ் அத்தியட்சகரின் மகனான றெஜினோல்ட் யேசுதாசன்  நேற்றையதினம் இலங்கை  இராணுவத்தால் கடத்தப்பட்டார். இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனமான யூனியன் அசுறன்ஸ் காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்

 
தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கிக்கணக்குகள் முடக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

இலங்கையில் தமது வங்கிக்கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கி கணக்குகள் அனைத்தும் இலங்கையில் முடக்கப்பட்டதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை தாம் எதிர்நோக்கியிருப்பதாக தமிழர் புனர்வாழ்வுக்கழக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முற்பட்ட போதே வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டமை தமக்கு தெரியவந்ததாகவும் மேற்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
தியத்தலாவ இராணுவ முகாம் முன்பாக சயனைட் அருந்திய இளைஞர் மரணம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

தியத்தலாவ பிரதேச இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக நேற்றுக் காலை சந்தேகத்திற்கிடமாக நடமாடிய தமிழ் இளைஞரை இராணுவத்தினர் கைது செய்ய முற்பட்ட போது அந்த இளைஞர் சயனைட் அருந்தி உயிரிழந்தார். 21வயதான சிவசுப்பிரமணியம் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் என்று தியத்தலாவ இராணுவத்தினர் தெரிவித்தனர். நேற்றுக் காலை 8.30 மணியளவில் இளை ஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக தியத்தலாவ பிரதேச இராணுவ முகாம் அருகில் நடமாடுவதை இராணுவ அதிகாரிகள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞரை கைது செய்ய முயற்சித்த போது அவ்விளைஞர் சயனைட்டை உட்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை 2.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 
புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு நேற்று அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் நேற்று தெரிவித்தது. 

 
கடற்சமரில் 8 போராளிகள் வீரச்சாவு: விடுதலைப் புலிகள் அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006
வடபகுதி கடற்மரில் எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேலும் படிக்க…
 
பருத்தித்துறை சமரில் 2 டோராப் படகுகள் மூழ்கடிப்பு: 30 கடற்படையினர் கதி என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 03 September 2006
யாழ். வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் 2 டோராப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 30 கடற்படையினர் தேடப்படுகின்றனர் என்று தமிழ்நெட் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நெட்டின் செய்தி விவரம்:
மேலும் படிக்க…
 
பருத்தித்துறையின் கிழக்கே பாரிய கடற்சமர். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 September 2006

வடமராட்சி கிழக்குப் பகுதி கடற்பரப்பில் தமிழீழ கடற்படையினருக்கும் சிறீலங்கா கடற் படையினருக்கும் இடையில் பாரிய கடற்சமர் ஒன்று வெடித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறையின் கிழக்கு கடற்பரப்பில் இருதரப்பினருக்குமான மோதல் இன்றிரவு வெடித்துள்ளது. இம் மோதல் தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

 
உள் விவாகாரங்களில் நோர்வே அத்துமீறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 September 2006

சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தி யிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க…
 
யுவதி வெள்ளை வான் கும்பலால் கடத்தல். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 01 September 2006

வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார்.இன்று முற்பகல் வெள்ளை வத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார்.

 
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2731 - 2745 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..