பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் விடுவிப்பு - டென்மார்க் ஊடகங்கள் காரணம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட புனர்வாழ்வுக்கழகப் பணியாளர் கிருஸ்ணபிள்ளை கமலநாதன் நேற்று முந்தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலைக்கு டென்மார்க் ஊடகங்கள் முக்கிய பணியை ஆற்றியுள்ளன. கிருஸ்ணபிள்ளை கமலநாதன் டென்மார்க் வாழ் தமிழ் மக்களால் பராமரிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் இணைப்பாளராக செயற்படுபவர். இவர் கடந்த சனிக்கிழமை வாழைச்சேனையில் வைத்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்டார். "ஜிகாத்" குழுவினரால் கடத்தப்பட்ட கமலநாதன் பின்பு சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறிலங்கா இராணுவம் கமலநாதனை கருணா குழுவிடம் ஒப்படைத்தது.இப்படிப் பந்தாடப்பட்ட கமலநாதன் கடைசியில் கருணா குழுவால் பொலநறுவையில் உள்ள தீவுச்சேனையில் அடைத்து வைக்கப்பட்டார்.

மேலும் படிக்க…
 
தனிநபர் விபரங்களை சேகரித்து கணனி மயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை களை அதிகரிக்கும் நோக்குடன் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வசிப் பவர்களின் தனிநபர் விபரங்களை சேகரித்து கணனி மயப்படுத்தும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாரஹென்பிட்டி பொலிஸ்நிலையத்தில் நேற்று காலை 9 மணியளவில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி செய லகத்தின் சிரேஷ்ட அதிகாரி, அரசாங்க அதிபர், கிராமசேவகர்கள், பொலிஸ் அதி காரிகள், நாரஹேன்பிட்டி சிவில் சமூக அமைப்பினர் ஆகியோர் இந்நிகழ்வில் கல ந்து கொண்டு பொது மக்களுக்கு தனிநபர் பதிவுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

 
நடுக்கடலில் இறக்க வேண்டும் சபையில் மகேஸ்வரன் எம்.பி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

வட கிழக்கை பிரிப்பதற்கான பிரேரணை ஒன்றினை சபையில் முன் வைக்க காவி உடை தரித்தவர்கள் முயன்று வருகின்றனர். அத்த கைய பிரேரணை கொண்டு வரப்படுமானால் புலிகளுடன் இணையும் தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அரசாங்கம் எனும் படகை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காப்பாற்ற வேண்டுமானால் காவி உடை தரித்தவர்களையும் 38 எலிகளையும் நடுக்கடலில் இறக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
புலிகளின் பதில் எறிகணைத் தாக்குதலில் படைச்சிப்பாய் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

திருமலையில்  விடுதலைப் புலிகளின் மூதூர் கிழக்குப் பகுதிகளை நோக்கி முதூர் 6ம் கட்டை இராணுவ முகாமிலிருந்த படையினரால் இன்று மாலை 5.30 மணியளவில் எறிக ணை மற்றும் நெடுந்தூர துப்பாக்கிகளால் தாக்குதலைத் தொடுக்கப்பட்டுள்ளது. படையின ரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ள னர். விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒரு வர் படுகாயமடைந்துள்ளார்.  படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் திருமலை பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 35 சிறார்கள் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

மட்டக்களப்பு மாவட்டம் தீவுச்சேனை, கறுப்பணை, சொருவில், சேவலப்பட்டி போன்ற கிராம ங்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட சிறார்களை துணை இராணுவத்தினர் நேற்று வியாழ க்கிழமை கடத்திச் சென்றுள்ளனர். இக்கடத்தல் சம்பவத்தால் மட்டக்களப்பின் பல கிராமங்   களிலும் பதட்டம் நிலவுகின்ற போதிலும், துணை இராணுவக்குழுவினரின் மிரட்டல் மற்று ம் மிருகத்தனமான கொலை அச்சுறுத்தலுக்குப் பயந்து, அப்பகுதி மக்கள் சிறிலங்கா காவல் துறையில் அல்லது இராணுவத்தினரிடம் முறையிடாது உள்ளனர்.

மேலும் படிக்க…
 
லண்டனில் இருந்து செயற்படும் அரச உளவாளிக்கு மாரடைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 07 July 2006

லண்டன் கரோ மற்றும் றேனஸ்லேன் பகுதியில் இவரைக் கண்டால் அவதானமாக இருக்க வுமென அண்மையில் நிதர்சனம் அரச உளவாளி ஒருவரை இனங்காட்டியிருந்தது. இலங் கை அரச உளவாளியாகச் செயற்படுகின்றார் என்பதை இவர் இறுதிவரை வெளியே தெரிய க்கூடாது என ஒரு முதியவர் வேடத்தில் உலாவி வந்தார்.

மேலும் படிக்க…
 
தொலைபேசி மிரட்டல் விடுத்தவரை அறிய தீவிர புலன் விசாரணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 July 2006

உங்களுடைய இராணுவத்தின் தலைவர் ஒருவர் இங்கே வரப்போகிறார். தயாராக இருங்கடா, இத்துடன் உங்கள் ஆட்டம் எல்லாம் முடிந்துவிடும்"பிரதி இராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் பாரமி குலதுங்க மீதான தற்கொலைக் குண்டுதாரியின் கொலைத் தாக்குதல் நடத் தப்படுவதற்குச் சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்

மேலும் படிக்க…
 
இராணுவத் தீர்வு கூடாது: அமெரிக்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 July 2006

இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க சுதந்திர நாளையொட்டி பதவி விலகிச் செல்லும் சிறிலங்காவுக்கான அமெரிக்க த் தூதுவர் ஜெஃப்ரி லுன்ஸ்டட் வெளியிட்ட அறிக்கை:

மேலும் படிக்க…
 
இலங்கைப் பிரச்சினையிலிருந்து முற்றாகவும் இந்தியா விலகி நின்று விட முடியாது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 July 2006

இலங்கைப் பிரச்சினையிலிருந்து முற்றாகவும் இந்தியா விலகி நின்று விட முடியாது என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தின மணி நாளேட்டின் தலையங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலையங் க விவரம் வருமாறு:

மேலும் படிக்க…
 
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம் என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 July 2006

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் எதிர்காலம் என்ன என்பது குறி த்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் விள க்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணல்:

மேலும் படிக்க…
 
கரும்புலிகள் நினைவுநாள்: தமிழீழத் தேசியத் தலைவர் அகவணக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 06 July 2006

தமிழீழத்தின் விடுதலைக்காக உயிராயுதங்களாக தற்கொடையாக்கிக் கொண்ட கரும்புலிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரன் அகவணக்கம் செலுத்தினார்.ஈகச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து தேசியத் தலைவர் அகவணக்கம் செலுத்தினார்.இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள்,தளபதிகள், போராளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2821 - 2835 / 3187

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..