பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

வேலை இழந்தவருக்கு வழங்கும் பணத்தில் இறுக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 22 September 2005

 டென்மார்க்கில் வேலை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த ஊதியப்பணத்தில் மேலும் இறுக்கம் கொண்டுவர வேண்டுமென சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் ஜொகான் சுனகோட் கேட்டுள்ளார். இன்றுள்ள நிலையில் வேலையிழந்த ஒருவர் மறுபடியும் 26 வாரங்கள் வேலை செய்தால் மீண்டும் நான்கு வருடங்கள் வேலை இல்லாது உதவிபெற முடியும். ஒவ்வொரு தடவையும் 26 வாரங்கள் வேலை செய்துவிட்டு நான்கு வருடங்கள் வேலையில்லாது தத்திச் செல்லும் முறை மீதும் இறுக்கம் வேண்டுமெனக் கூறியுள்ளார். எனினும் எவ்வாறு இறுக்கத்தைக் கொண்டுவருவதென அவர் உரைக்கவில்லை.

 
கடலில் மூழ்கி உல்லாசப் பயணி மரணம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 22 September 2005
 ஜேர்மனியில் இருந்து உல்லாசப் பயணியாக டென்மார்க் வந்த 69 வயதுடைய ஜேர்மனியர் ஒருவர் நேற்று கடலில் வீழ்ந்து மரணமடைந்தார். டென்மார்க் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எஸ்புய் கடற்கரைப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. பொழுது போக்காக துர்ண்டில் போட்டுக் கொண்டிருந்த இவருடைய துர்ண்டில் கடலடியில் மாட்டியதால் அதை எடுக்க கடலில் குதித்தபோது குளிர் காரணமாக மரணித்துள்ளார். இவர் கடலில் பாய்ந்த நேரம் குளிர் 15 பாகை பரனைற்றாக இருந்தது. மீட்புப் படகுகள் விரைந்தாலும் இவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று கூறுகிறது ஓகூஸ் கிறேனோ போலீஸ்.
 
அமெரிக்காவைத் தாக்கவுள்ள அடுத்த புயலும் பலமானதே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 September 2005

அமெரிக்காவின் தென்பகுதியை தாக்க அச்சுறுத்தும் ரிடா என்ற புயல்காற்று வலுப்பெறும் சூழலில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தென்பகுதியின் சில பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க…
 
டெனிஸ் மக்கள் கட்சியின் பத்தாவது வருட விழா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 September 2005

டெனிஸ் மக்கள் கட்சியின் பத்தாவது வருட விழாவும் புதிய பாதையும் ஒரு பார்வை.

டெனிஸ் மக்கள் கட்சியின் பத்தாவது வருட விழா கடந்த வாரம் ஊதின்ஸ்ச கொங்கிரஸ் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இது ஒரு விழாவாக இல்லாமால் ஒரு கட்சி மாநாடு என்று கூறும் அளவிற்கு பல முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டன

மேலும் படிக்க…
 
மறுபடியும் சந்திரனுக்கு மனிதன் அமெரிக்கா முயற்சி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005
 நாஸா விண்வெளிக் கழகம் எதிர்வரும் 2020 ம் ஆண்டில் மறுபடியும் மனிதர்களுடனான விண்வெளிக் கலத்தை சந்திரனுக்கு அனுப்பவுள்ளது. மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் இந்தப் பயணத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் சுமார் ஒரு வாரகாலம் சந்திரத் தரையில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்வார்கள்.
மேலும் படிக்க…
 
சதாம் உசேனின் மருமகனுக்கு ஆயுள் தண்டனை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005
 சதாம் உசேனின் மருமகன் அஸ்மன் சபாலி என்பவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பண உதவி செய்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும். இதேபோல இவருடைய மகனும் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் மரணதண்டனையை எதிர் நோக்கியுள்ளனர். இதேவேளை கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் இருக்கும் ஈராக்கிய முன்னாள் பிரதமர் தாரிக் அஸீசை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது நோய்வாய்ப்பட்டு 15 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார். இவரை சிறையில் வைத்திருக்க யாதொரு முகாந்திரமும் இல்லை என்று செய்திகள் கூறுகின்றன.

 
கோ. சி ஆனர்சன் பற்றி புதிய ஆய்வு நூல். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005

அயர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியரான மிக்கேல் பிளிற்ஸ் காறல்ட் என்பவர் புகழ் பெற்ற டேனிஸ் எழுத்தாளர் கன்ஸ் கிறிஸ்டியான் ஆனர்சன் பற்றி புதிய ஆய்வு நுர்லொன்றை வெளியீடு செய்துள்ளார்.
மேலும் படிக்க…
 
வைத்தியருடன் விரைவாக தொடர்பு கொள்ள வழி செய்க. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005

டென்மார்க்கில் உள்ள நோயாளிகள் வைத்தியர்களுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு உரிய நேரத்தைப் பெற்று வைத்தியரிடம் செல்வதில் தொடர்ந்து சிரமம் உண்டாகி வருகிறது.  வருத்தத்துடன் நீண்ட நேரம் தொலைபேசியில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பலர் குறைப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்க புதிய பயிற்சி வைத்தியர்களை பயன்படுத்தலாம், மின்னஞ்சல் உட்பட புது வழிமுறைகளை அறிமுகம் செய்யலாம் என்று பலதரப்பட்ட யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன

 
ஆப்கான் தேர்தலுக்கு டேனிஸ் அதிகாரிகள் பூச்செண்டு வீச்சு ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005

தமிழில் பூமாரி பொழிந்தார் என்பதை டேனிசில் ரோஜாச் செண்டை வீசினார் என்று கூறுகிறார்கள். ஆப்கானில் நடைபெற்ற தேர்தலில் புல்லரித்துப் போன டேனிஸ் ஆப்கான் அதிகாரிகள் தேர்தல் மீது ரோஜாச் செண்டு வீசினர். பல சிக்கல்கள் இருந்தாலும் ஆப்கான் ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கியிருப்பது பெரும் மகிழ்வுக்குரிய விடயம் என்று டேனிஸ் உதவித்திட்ட அதிகாரி கோம்ஸ் பீட்டர்சன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஆப்கானில் இருந்து டேனிஸ் படைகளை விலத்தும் காலம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 
புதிய நூற்றாண்டின் இணைய வழிக்கல்வி முறை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005
டென்மார்க் யூலன்ட் போஸ்டன் பத்திரிகை ஜே.பி எக்ஸ்புளோர் என்ற பெயரிட்டு இணையவழிக் கல்வி முறைக்கான தளம் ஒன்றை கட்டமைத்துள்ளது. றறற.குசநனஅளைளழைநெn.னம என்ற இந்த இணையத்தளம் வழியாக புதிய வழியில் இணையக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. ஆபிரிக்கா பற்றிய தகவல்கள், உள்நாட்டுப் போர் பற்றிய விபரங்கள், அங்கு நடைபெறும் ஐ.நாவின் செயற்பாடுகள் பற்றிய புத்தகங்கள் படிப்பதற்காக இலவசமாக இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க…
 
கிளிப்பக் கோட்டிற்கான பயம் மெல்ல மறைகிறது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 September 2005

டென்மார்க்கில் சாரதி அனுமதிப்பத்திரத்தில் கிளிப்ப கோட் என்னும் வெட்டு முறை அறிமுகமானதும் பக்குவமாக கார்களை ஓடியவர்கள் இப்போது மறுபடியும் பழைய குருடி கதவைத்திறவடி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஐந்து கார்கள் வீதியால் போனால் ஒரு கார் அதிக வேகமாகப் பறக்கிறது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 21 22 23 24 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 301 - 315 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..