பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

565 மில்லியன் லொத்தர் பரிசு ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005

பிரான்சைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 565 மில்லியன் குறோணர் லொத்தரில் விழுந்துள்ளது. இது பிரான்சின் விழுந்த லொத்தர் சாதனைத் தொகையாகும். ஈரோ மில்லியன் லொத்தர் என்ற இந்த லொத்தர் இப்போது பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, லக்சம்பேக், பெல்ஜியம், சுவிஸ், போத்துக்கல் ஆகிய நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளதால் பெரும் தொகை பரிசாகக் கிடைக்கிறது. சென்ற யூலை மாதம் ஒர் அயர்லாந்துப் பெண்மணிக்கு 860 மில்லியன் குறோணர்   பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 
சுவிஸ் உதைபந்தாட்ட ஆதரவாளர் சிறையில் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005

டென்மார்க் புறொண்புய் வி.கவிற்கும் சுவிஸ்சைச் சேர்ந்த எப்.சி.சூறிச்ற்கும் இடையே நடைபெற்ற உதைபந்தாட்டத்தில் சுவிஸ் உதைபந்தாட்ட இரசிகர்கள் கலவரங்களை ஏற்படுத்தி போலீசாரையும் தாக்கியுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் மூவருக்கு 12 தினங்கள் தடுப்புக்காவலும் ஒருவருக்கு ஏழு தினங்கள் தடுப்புக் காவலும் விதிக்கப்பட்டுள்ளது.

 
போலந்து கின்பியா பழங்களினால் சுகயீனம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005

போலந்தில் இருந்து இறக்கப்பட்ட கின்பியா பழங்களின் சாறை சாப்பிட்ட காரணத்தால் ஸ்கனபோ நகரில் உள்ள தையல் நிலையத்தில் பணி புரிந்த 30 பேர் பாதிக்கப்பட்டமை தெரிந்ததே. இப்போது இந்த போலந்து கின்பியா பழங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தரக்கட்டுப்பாட்டு சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
உண்மையைக் கசிய விட்ட டேனிஸ் மொழிபெயர்ப்பாளர் சிறையில் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005

ஆப்கானில் உள்ள டேனிஸ் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தானறிந்த உண்மைகளை கசிய விட்ட காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள அமெரிக்க சிறைகளில் உள்ள ஆப்கான் கைதிகளின் நிலைபற்றிய தகவல்களை இவர் வெளிவிட்டார் என்று கூறப்படுகிறது. இன்னொரு உளவாளியுடன் இணைத்து சிறையிடப்பட்டுள்ள இவருடைய பெயரை வெளியிட வேண்டுமென டேனிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 
கார்களுக்கு மதுபானத்தடைப் பூட்டு ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005
 எதிர்வரும் 2012 ல் இருந்து எல்லா வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள கார்களுக்கு மதுபானத்தடைப் ப10ட்டு போடப்படவுள்ளது. இது குறித்த முக்கிய உரையாடல்கள் சென்ற வாரம் சுவீடனில் நடைபெற்றது. இதன்படி மது போதையில் வந்து கார்களை ஸ்ராட் செய்தால் அவை ஸ்ராட் செய்யாது.2012 ல் இதற்கான விசேட கருவிகளை சகல கார்களும் கண்டிப்பாக இணைக்க வேண்டும். போதையில் கார் ஓடக்கூடாது என்று எவ்வளவு சட்டமியற்றியும் போதிய பயன் இல்லாத நிலையில் இப்போது இந்தப் புதிய சட்டம் வருகிறது. ஏற்னெவே கிளிப் கோட் முறையால் நொந்து போயுள்ளவர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக இறங்கும் என்பது தெரிந்ததே.
 
கடல்கன்னிக்கு சகோதரிகள் அமைக்கப்படுகிறது ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005

டென்மார்க் பிரபல எழுத்தாளர் கோ.சி.ஆனர்சனின் பிரபல கதையாகிய கடற்கன்னியை நினைவுபடுத்துவதாக ஒரு கடற்கன்னி சிலை டென்மார்க்கில் நுர்று ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இதற்கு சகோதரிகள் போல மேலும் இரண்டு கடற்கன்னி சிலைகள் அமைக்கப்படுகின்றன.

மேலும் படிக்க…
 
ஆறு போருக்கு ஒருவர் சமுதாய உதவிப் பணித்தில் வாழ்க்கை ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005
 டென்மார்க்கில் உள்ள ஒவ்வொரு ஆறு பேருக்கு ஒருவர் வேலையின்றி சமுதாய உதவிப் பணத்தில் வாழ்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 1.34.188 பேர் சமுதாய உதவிப் பணத்தில் வாழ்க்கையோட்டுகிறார்கள். இவர்களில் சுமார் 10.000 பேர் ஏழு வருடங்களுக்கு மேலாக சமுதாய உதவிப்பணத்தில் காலமோட்டி வருகிறார்கள்.
மேலும் படிக்க…
 
ஜேர்மனியத் தேர்தல் வெற்றி குழப்பமான நிலையில். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 19 September 2005
ஜேர்மனியத் தேர்தலில் எதிர்கட்சியைச் சேர்ந்த அஞ்சலீனா பெரிய வெற்றியைப் பெறுவார் என்று முன்னைய கருத்துக்கள் கூறியிருந்தன. ஆனால் இப்போதுள்ள நிலையில் கெர்காட்ஸ் ஸ்கோடர் எதிர் பார்த்த பின்னடைவை சந்திக்க வில்லை. இரு வேட்பாளரும் நானே வெற்றி இல்லை நானே வெற்றி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி தோல்வியற்ற நிலையில் இருவருக்கும் இடையில கடும் போட்டி நிலவுகிறது. இப்போது இரு கட்சிகளும் வெற்றி என்று கூறியுள்னன.
 
அத்வானி இராஜினாமா அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 September 2005

இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி, எதிர்வரும் டிசம்பர் மாதம் தான் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.  சென்னையில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அத்வானியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க…
 
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துக்கு இரான் எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 September 2005

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் இரானின் அணுத்திட்டம் குறித்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கு எதிராக, இரான் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தை எச்சரித்திருக்கிறது. அப்படியான ஒரு நகர்வு தற்போதைய யுரேனிய மாற்றியமைப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக அணு ஆயுதங்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் அணுச்செறிவாக்கலிலும் ஈடுபட இரானை நிர்ப்பந்திக்கும் என்று இரானின் வெளியுறவு அமைச்சு சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க…
 
ஜெர்மனியில் பொதுத்தேர்தல்; கடும் போட்டி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 18 September 2005

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுத்தேர்தலில் நாட்டின் 6 கோடி 20 லட்சம் வாக்காளர்கள் ஒரு புதிய அரசைத் தேர்தெடுப்பதற்காக வாக்களித்தனர். தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 21 22 23 24 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 316 - 330 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..