பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
உலகச் செய்திகள்

கையடக்க செல்போன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 16 September 2005

உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்கு, மிகச்சிறிய செல்போன் ஒன்றை தென்கொரிய நிறுவனம் தயாரித்துள்ளது. நவீன உலகத்தின் தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்றாக செல்போன் உள்ளது. தற்போது செல்போன்களில் இணையதள இணைப்பு, கேமிரா, படக்காட்சி, தொலைக்காட்சி மற்றும் வானொலி என பல்வேறு பயன்பாடுகள் விருப்பத்திற்கேற்றபடி இணைக்கப்படுகின்றன. நுகர்வோரின் தேவைகளை நிறைவேற்றி விற்பனையை பெருக்கிக்கொள்வதற்காக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், நாளுக்குநாள் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வருகின்றன. அவ்வகையில், தென்கொரியாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று 49 கிராம் எடையுள்ள செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிம்கார்டு அளவுக்கு காட்சியளிக்கும் இந்த செல்போன், அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட 100 நாடுகளில் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
சீனப் பொருளாதாரம் பற்றிய ஒரு ஆய்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 16 September 2005

கம்யூனிஸ நாடான சீனாவைப் பொறுத்தவரை அதன் பொருளாதாரத்தை தற்போது தனியாரினால் நடத்தப்படும் வணிக நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நாட்டுக்கு தேவையான அநேகமான தொழில்வாய்ப்புக்களை இந்த தனியார் வணிக முயற்சிகளே உருவாக்கிவருவதாகவும், சீனாவில் முதன் முதலாக நடத்தப்பட்ட பொருளாதார கணிப்பீடு ஒன்று கூறுகிறது.

மேலும் படிக்க…
 
பல்வேறு நாடுகளில் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தியில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 15 September 2005

பல்வேறு நாடுகளில் ஆட்சி மீது மக்களுக்கு திருப்தியில்லை - பிபிசி கருத்துகணிப்பு முடிவு

பல்வேறு நாடுகளில் மக்கள் தம்மீது நடக்கும் ஆட்சி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி உலக அளவில் மிகப்பெரிய கருத்துகணிப்பு ஒன்றை பிபிசி நடத்தியுள்ளது. மக்களின் விருப்பத்திற்கேற்ப தமது நாடுகள் ஆட்சிசெய்யப்படுகின்றன என்பதை வெறும் 30 சதவீத மக்கள்தான் ஆமோதிக்கிறார்கள் என்பதாக இந்த சுற்றாய்வின் முடிவுகள் அமைந்துள்ளன.

மேலும் படிக்க…
 
டென்மார்க் இளவரசி வைத்தியசாலையில் அனுமதி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 15 September 2005

 டென்மார்க்  இளவரசி மரிய பிரடறிக் மகப்பேற்றுக்காக நேற்று செவ்வாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறப்பதற்கு சுமார் ஆறு வாரங்கள் முன்னதாகவே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. மகப்பேறு காரணமாக இளவரசியின் ஆறு வாரகால கடமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


 
டென்மார்க்கில் பண வீக்கம் 2.2 வீதம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005
டென்மார்க்கில் பண வீக்கம் 2.2 வீதம். காற்றாடி 625 பேருக்கு வேலை நீக்கம்.

 டென்மார்க்கில் பண வீக்கம் 2.2 வீதமாக அதிகரித்துள்ளது. பல இடங்களில் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எரி பொருள் விலையேற்றம், கற்றினா சூறாவளியால் உண்டான பொருளாதாரப் பின்னடைவு போன்றன இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பல் வைத்திய செலவு 4.4 வீதம் அதிகரித்துள்ளது, வீட்டு வாடகை 3.3 வீதம் கூடியுள்ளது. எனினும் சேவைத் துறையில் அதிகரிப்பு ஏற்படவில்லையென நோர்டியா கூறுகிறது. பொருளாதாரப் பின்னடைவு காரணமாக வெஸ்ராஸ் காற்றாடி தொழிற்சாலை 625 பேருக்கு கல்தா வழங்கியது. ஸ்வன்போ வெஸ்ராஸ் மூடப்படுவதால் 170 பேர் வேலை இழக்கிறார்கள். அமெரிக்க பகாசுர கணினி உருவாக்க நிறுவனமான எச்.பீ ஐரோப்பாவில் மட்டும் 6000 பேருக்கு வேலை நீக்கக் கடிதத்தை வழங்குகிறது.


 
உலகின் முதலீட்டுக்கு சிறந்த நாடுகள் எவை பட்டியல் வெளியானது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005

உலகின் சிறந்த முதலீட்டுக்கு உரிய நாடு எது என்ற விவகாரத்தில் இலங்கைக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. டென்மார்க் எட்டாவது இடம் பிடித்துள்ளது. உலகின் முதலீடு செய்ய இலகுவான நாடு என்ற பட்டியலில் முதலிடம் நியூசிலாந்து, 2. சிங்கப்பூர் 3. அமெரிக்கா 4. கனடா 6. அவுஸ்திரேலியா 7. கொங்கொங் 8. டென்மார்க் 9. இங்கிலாந்து 10. ஜப்பான் 17. சுவிஸ் 19. ஜேர்மனி 20 தாய்லாந்தும் வந்துள்ளன. வரும் 2015 ம் ஆண்டு மூன்றாம் உலக நாடுகளில் 115 மில்லியன் மக்கள் ஏதிலிகளாக வறுமையில் வாட உள்ளனர். மத்திய கிழக்கு வட்டகையில் 18 - 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பெரும் வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் புத்திசாதுரியமாக செயற்பட, முதலிட வில்லங்கமில்லாத நாடுகள் என்று இவை தேர்வாகியுள்ளன.

 
பாக்தாத் தொடர் குண்டு வெடிப்பில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் நூற்று ஐம்பதிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், குறைந்த பட்சம் இருநூறு பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு நடைபெற்றதில் இருந்து பாக்தாத்தில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்களில் இன்றைய தாக்குதல்கள் அடங்கும்.

மேலும் படிக்க…
 
ஐ.நாவில் அதிபர் புஷ் உரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005

ஐ.நா மன்றம், அதனை நிறுவியவர்களின் லட்சியஙகளுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்றும் , நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ள அதற்கு உதவக்கூடிய அர்த்தமுள்ள சீர்திருத்தத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் புஷ் ஐ.நாவை வலியுறுத்தியுள்ளார்.

170க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் ஐ.நாவின் எதிர்காலத்தைப்பற்றி விவாதிக்க கூடியிருக்கும் நியூயோர்க் கூட்டத்தில் பேசிய புஷ், ஐ.நா மன்றம் பலமானதாகவும், திறமையானதாகவும், ஊழலற்றதாகவும், அது பணிபுரியும் மக்களுக்கு பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க…
 
கால எல்லை நிர்ணயிக்கப்படமாட்டாது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005

அமெ.படைகள் வெளியேற கால எல்லை நிர்ணயிக்கப்படமாட்டாது வாஷிங்டனில் ஈராக் ஜனாதிபதி

ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறுவதற்கான கால எல்லை தற்போதைக்கு நிர்ணயிக்கப்படமாட்டாது என ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி , வாஷிங்டனில் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ள்யூ புஷ்ஷை அவர் சந்தித்தார், இச்சந்திப்பை அடுத்து , இவ்விருவரும், கூட்டுப் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தினர்.

மேலும் படிக்க…
 
விஜயகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 September 2005
மாநாடு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநாட்டில் ரசிகர்கள் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர். எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மாநாட்டு மேடையில் காமராஜர், அண்ணா, விஜயகாந்த் படங்கள் காணப்பட்டது. மேடைக்கு காந்தி- காமராஜர் பெயர் சு10ட்டப்பட்டு இருந்தது. மேடையின் ஓரத்தில் விஜயகாந்த் கும்பிட்டபடியும், இடது ஓரத்தில் கட்டை விரலை உயர்த்தி சவால் விடுவது போன்ற படங்கள் இருந்தது. மாநாட்டில் பேசிய கட்சியின் நிர்வாகிகள் விஜயகாந்தை இதய தெய்வமே, வருங்கால முதல்வர், வாஞ்சி நாதன், கரிபால்டி என அழைத்தனர். அவ்வாறு அழைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
மேலும் படிக்க…
 
காஸா- எகிப்து எல்லை மூடப்படும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 13 September 2005

மத்தியக்கிழக்கில் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படையினர் விலகியதை அடுத்து இரண்டு நாட்களாக இருந்துவரும் குழப்ப நிலையை அடுத்து, காஸா பகுதி - எகிப்து இடையிலான எல்லை இன்று நள்ளிரவு மூடப்பட இருக்கிறது. அதற்குள் மக்கள் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று தெற்கு காஸா பகுதி பாலஸ்தீனத் தளபதி ஜமால் கையித் எச்சரித்திருக்கிறார்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 21 22 23 24 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 331 - 345 / 359

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..