|
Monday, 12 September 2005 |
 இதர ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டால் டென்மார்க்கில் உள்ள மக்கள் நித்திரை கொள்ளும் நேர அளவு குறைவானதாக இருப்பதாக புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் நாடளாவிய hPதியில் சராசரியாக ஒரு பெண் உறங்கும் நேரம் 6 மணி 55 நிமிடங்களாக உள்ளது. ஆண் ஒருவரின் ஒரு நாளைய சாராசரி உறக்கம் 6 மணி 36 நிமிடங்களாகும். இங்கிலாந்தில் இது 7 மணி 23 நிமிடங்களாகவும், நோர்வேயில் 7 மணித்தியாலங்களாகவும், சுவீடனில் 7 மணி 12 நிமிடங்களாகவும், ஸ்பானியாவில் 8 மணித்தியாலங்கள், அமெரிக்கா 6 மணி 48 நிமிடங்களாகவும் உள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 12 September 2005 |
|
டென்மார்க்கில் உள்ள அரசியல் கட்சிகளில் வெளிநாட்டுப் பின்னணி கொண்ட இளைஞர்கள் அங்கத்தவராகச் சேரும் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இன்று இத்தொகை இரட்டிப்பாக உள்ளதாகவும் nதிரிவிக்கப்படுகிறது. சிறிய நகரங்களை விட பெரிய நகரங்களில் இந்தத் தொகை அதிகமாக இருக்கிறது. டி.எஸ்.யூ, வி.யூ போன்ற பிரதான கட்சிகளின் இளைஞர் அணிகளில் வெளிநாட்டு இளைஞர்கள் வரவு 2 முதல் 4 வீதம்வரை அதிகரித்துள்ளது. இவ்விதம் அரசியல் கட்சிகளில் இணைவோர் கூடுதலாக உயர் கல்வி, சமூகநலன் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தும் விவாதங்களில் அதிக அக்கறை கொள்கிறார்கள். ஆனால் முதன்மை கொடுத்து பேச வேண்டிய வெளிநாட்டவர் டேனிஸ் சமுதாயத்துடன் இணைதல் என்ற இணைவாக்க விவகாரத்தை இவர்களில் பலர் தொடவிரும்பாதவராக இருப்பதும் ஆச்சரியம் தருவதாயுள்ளது என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் டேனிஸ் அரசியலில் புதிய வெளிநாட்டு இளைஞர் இணைவதும், ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவான செயற்பாடுகளை பாPட்சார்த்தமாக அறிவதும் ஆரோக்கியமான விடயங்கள் என்று முக்கிய கட்சிகளின் இளைஞர் அணிகள் கருத்துத் தெரிவித்துள்ளன. |
|
|
Monday, 12 September 2005 |
ஒரு கிலோ வெடிமருந்தைக் காவியபடி உல்லாசப்பயண பஸ்வண்டி யொன்று டென்மார்க்கினு}டாக சுவீடன் தலைநகர் போகும் வழியில் பிடிக்கப்பட்டது. ஜேர்மனியில் இருந்து றொஸ்ரொக் கடல்வழியை கப்பல் மூலமாகக் கடக்கும் போது போலீசாரின் சம்பிரதாய பூர்வமான சோதனையின் போது இந்த வெடிமருந்தை ஜேர்மன் போலீசார் கண்டறிந்தனர். மேற்படி பஸ் வண்டி கப்பல் மூலம் டென்மார்க் கரைக்குவர வெடிமருந்து கண்டு பிடிக்கும் நாய்களின் உதவியுடன் பஸ் வண்டி சல்லடை போட்டுத் தேடப்பட்டது. ஆனால் வெடி மருந்து கிடைக்கவில்லை. இந்த வெடிமருந்து கொண்டு வந்தது தொடர்பாக 44 வயதுடைய பொஸ்னியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது குற்றத்தை மறுத்துள்ளார். இவரை மட்டும் தடுத்து வைத்த போலீசார் மற்றப் பயணிகளுடன் பஸ்வண்டியை போக அனுமதித்தனர். இவர் ஏன் வெடிமருந்தை எடுத்துச் சென்றார், இதன் தேவை என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பஸ்வண்டி பொஸ்னியாவில் இருந்து ஸ்ரொக்கோம் வரை செல்கிறது. |
|
|
Monday, 12 September 2005 |
பெற்றோலுக்கு பதிலாக நைதரசன் மாத்திரைகளை பாவித்து கார்களை ஓடலாம் என்ற விடயத்தை டென்மார்க்கில் உள்ள ஐந்து விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மிகவும் இரகசியமான இந்த விடயத்தை கடந்த புதன் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இவர்கள் விளக்கினார்கள். இதைப் பாவித்து கார்களை ஓடினால் சத்தம் ஏற்படாது, சூழல் மாசுபடாது, பற்றரி தேவையில்லை, எரிபொருள் செலவு குறையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஓடக்கூடிய மாதிரி வாகனங்களும் இப்போது தயாராகியுள்ளன. எரிபொருளின் பிரதான இடத்தில் இருக்கும் பெற்றோலை இது சுமார் பத்தாண்டுகளில் கடந்து செல்லும் என்று கருதப்படுகிறது. |
|
|
Monday, 12 September 2005 |
|
இலங்கையில் சுனாமினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.தங்களின் பெற்றோரையும்,உறவினர்களையும் இழந்து,தங்கள் நாளைய வாழ்க்கை என்ன?என்ற பயத்தில் வாழும் எண்ணற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காக நம்மால் இயன்ற நிதியுதவியை வழங்கிடும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கும் ஓவ்வொரு டிக்கட்டும் ஆதரவற்ற ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவிடும். இயற்கையின் சீற்றத்தில் கேள்விக்குறியான குழந்தைகளின் வாழ்வில் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்திட உதவி பு??வோம். இடம் - டென்மார்க் (Norregade skole Hering) நேரம் - மாலை 4 மணிக்கு தேதி -17 செப்டம்பர் 2005ல் |
|
|
Monday, 12 September 2005 |
|
டென்மார்க்கில் உள்ள வெளிநாட்டவர் பற்றி டேனிஸ் சமுதாயத்திற்கு விளக்க ஒரு சஞ்சிகை ! டென்மார்க்கில் இப்போது கொதி நிலையில் உள்ள பிரச்சனை அகதிகள் வெளிநாட்டவர் தொடர்பான பிரச்சனைதான். தமது பக்க நியாயங்களை எடுத்துரைக்க ஊடகங்களில் போதிய இடமில்லாத சூழலில் அகதிகள் வெளிநாட்டவர் குறித்து அரசியல்கட்சிகள் சகட்டு மேனிக்கு புகுந்து விளையாடி கைதட்டல் வாங்கி வருகின்றன. இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம், டேனிஸ் சமுதாயத்தில் ஓர் அங்கமாகவிட்ட வெளிநாட்டு பின்னணி கொண்ட மக்களின் நல்ல பக்கங்களை எடுத்துரைப்பது எப்படி ? என்ற கேள்விகளுக்கு பதிலாக வந்திருக்கிறது இந்த மலர். நீண்டகாலமாகவே சரிவரச் செய்யப்படாமல் காத்துக்கிடந்த இப்பணியைக் கருத்தில் கொண்டு டேனிஸ் மொழியில் நு}லை வெளிக் கொண்டுவந்து அதை டேனிஸ் மக்களுடைய வீடுகளுக்கே வழங்கியுள்ளார் தமிழரான ஜெயராஜ் ராசையா என்ற இளைஞர். இவர் கிறீன்ஸ்ரட் நகரசபையின் உறுப்பினரும் கூட. ஒவ்வொரு தமிழரும் தாம் வாழும் நகரங்களில் தமது சக்திக்கேற்ப ஒவ்வொரு விளக்கை ஏற்றி வைத்தாலே போதும், நாடு முழுவதும் அகதிகளுக்கு எதிராகச் சூழ்ந்து வரும் இருள் விலகிவிடும். அகதிகள் வெளிநாட்டவரால் டேனிஸ் மக்களுக்கு துன்பம் என்ற எண்ணங்களைத் தகர்த்து, நல்லதோர் உறவை வளர்க்க இது பாலமாக அமைந்துள்ளது. அப்படியோர் முயற்சியாக இதைச் செய்து தான் வாழும் நகரத்தில் உள்ள 14.000 வீடுகளையும் இந்த நு}லால் தட்டியிருக்கிறார் ஜெயராஜ். புத்தகங்களை அச்சிட்டு டேனிஸ் தபால் திணைக்கள மூலமாக கிறீன்ஸ்ரட், பிலுண்ட் நகரசபைகளுக்குட்பட்ட சகல வீடுகளுக்கும் வழங்கச் செய்துள்ளார். இவருடைய இந்த முயற்சி இருண்ட வீட்டில் ஒரு விளக்குப் போல அமைந்திருக்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 11 September 2005 |
|
அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோர் திருப்பி அனுப்படவுள்ளனர் அரசியல் தஞ்சம் கோரிரீ நிராகாரீக்கப்பட்ட பல அகதிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.இவ்வாறு நிராகாரீக்கப்பட்டோர் மனாருதியான பாதிப்பிற்கு உள்ளானதோடு மட்டுமல்லாது தற்கொலை முயற்சியிலும் இறங்குகின்றனர்.நிராகாரீக்கப்பட்டோர் மட்டுமல்லாது விண்ணப்பித்து நீண்டக்காலம் காத்திருப்போரும் இவ்வாறான மனஅழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் இவர்களை பராமாரீப்பதற்கான வைத்தியசெலவு அதிகாரீக்கின்றன.அரசின் செலவுகளை குறைப்பதென்றால் இவர்களை திருப்பி அனுப்புவதே சிறந்த திட்டம் என அரசு தொரீவித்துள்ளது.
|
|
|
Sunday, 11 September 2005 |
|
தூக்கமாத்திரை போட்டு விட்டு 150 கி.மீ வேகத்தில் காரோடியவருக்கு 12.000 குறோணர் அபராதமும், மூன்று ஆண்டுகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்யவும் தலைநகரில் உள்ள கொப்பன்கேகன் நீதிமன்று உத்தரவிட்டது. இவர் காரை வேகமாக ஓடி, சிலுப்பி ஆட்டி, பின்புற இருக்கையில் பாய்ந்து உறங்கியபோது போலீஸ் மடக்கிப் பிடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
Saturday, 10 September 2005 |
|
உங்களுக்கு என்ன பொருள் வேண்டும்? எந்த நாட்டு பெயர் போட்டு, என்ன வர்த்தகக் குறியீட்டுடன் வேண்டும். அத்தனை குறியீடுகளும் போட்டு பொருட்களை சீனாவில் இருந்து அந்தப் பொருட்களை மலிவு விலையில் பெற முடியும். சீன ஆடைகள் மட்டும் இப்போது ஐரோப்பாவின் பிரச்சனையல்ல தளவாடங்கள், இயந்திரங்கள், லீகோ விளையாட்டுப் பொருட்கள், சலவை இயந்திரம், வானொலிப் பெட்டிகளென சகல விதமான பொருட்களையும் போலி முத்திரைகளுடன் தயாரித்து அனுப்புகிறது சீனா. கடந்த 2003 ம் ஆண்டு மட்டும் 100 மில்லியன் போலியான பொருட்கள், போலி வியாபார சின்னங்களுடன் ( றேட்மார்க் ) ஐரோப்பா வந்துள்ளன. இப்பொருட்கள் 100 கோடி யூரோ பெறுமதியானவை. 2002 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் சீனாவின் போலி முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் வரவு 18 விதத்தால் அதிகரித்துள்ளது. |
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 346 - 354 / 354 |