பிரதான பக்கம் arrow கட்டுரைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
கட்டுரைகள்

'ஒரு தேர்தல் இரண்டு தீர்ப்புகள்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 22 November 2005

நடைபெற்று முடிந்துள்ள இலங்கை அரச அதிபர் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். சிங்கள மக்கள் தாங்கள் வாக்களித்ததன் மூலம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதேவேளை தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பதற்கு ஒட்டு மொத்தமாக மறுத்ததன் மூலம் தங்களுடைய தீர்ப்பை ஏகமனதாக வழங்கியிருக்கின்றார்கள்.

மேலும் படிக்க…
 
புதிய சனாதிபதி யாராகிலும் தமிழரின் எதிர்பார்ப்பு ஒன்றே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 17 November 2005

சிறிலங்கா சனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. நாளை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இடம்பெற்று நாளை மறுதினம் பெரும்பாலும் யார் சிறிலங்காவின் புதிய சனாதிபதி என்பது தெரியவந்துவிடும்.

மேலும் படிக்க…
 
வாழைச்சேனையில் இருந்து நேரடி ரிப்போர்ட் - தமிழ் மீடியா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 November 2005
சு.குணலிங்கம் (வாழைச்சேனை நிருபர்)
 
எத்தனை நிறுவனங்கள் வந்தலும் இலங்கையை பொறுத்தவரையி;ல் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது. இருந்தாலும் நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். குறைவாக காணப்படும் வளங்களை கொண்டு நிறைவான விருத்தினை செய்ய முடியும் அது மாத்திரமல்ல திறமையாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 
உலகமகா யுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பானில் அணு குண்டு போட்ட போது புல் கூட தளைக்காது என்று கூறிய நாடு இன்று உலக சந்தையில் ஜப்பானின் பொருள் தான் தரமான பொருள் என்று மக்கள் முண்டியடித்துக் கொண்டுள்ளார்கள். காரணம் கடின உழைப்புஇ வினைத்திறனுடன் செயலாற்றலஇ நாட்டின் வளத்தினை முழுமையாக பயன்படுத்தலஇ மற்றும் சுறுசுறுப்பு போன்றவையே இன்று எதிரி நாட்டுக்கு சமமாக போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இது போன்று பல நாடுகளை குறிப்பிடலாம் இருந்;தாலும் எனது தலைப்பின் கீழ் பார்ப்பது பொருத்தமற்றது.
மேலும் படிக்க…
 
மட்டக்களப்பின் தற்போதைய நிலவரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 November 2005
தமிழ் மீடியாவுக்காக மட்டக்களப்பில் இருந்து சு.குணலிங்கம்
கடந்த வருடம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதிப்புக்குள்ளாக்கியது. அதிலும் வடகிழக்கின் கரையோரப் பிரதேசம் மிகவும் படுமோசமாக அழிவுகளை எதிர் நோக்கியது. என்பது யாவரும் அறிந்த விடயம்.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் வாகரை தொடக்கம் துரைநீலாவனை வரையிலான கரையோரப் பிரதேசம் தற்போதும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்புக்களை எதிர் நோக்கிய மக்களை அரசஇ அரச சார்பற்ற பல நிறுவனங்கள் புனருத்தான பணிகளை ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க…
 
மெல்ல வெளிப்படும் பூதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 08 November 2005

பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை அள்ளிக் குவிப்பதற்காகப் பௌத்த சிங்களப் பேரினவாதிகளுடன் அணி சேர்ந்திருக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தான். எப்படியும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற குறுகிய அரசியல் லாப நோக்கத்துக்காகத் தமது கட்சியினதும், கட்சித் தலைவியினதும் கொள்கைகளையும் பேரினவாதிகளிடம் அடமானம் வைத்தார் பிரதமர்.

மேலும் படிக்க…
 
சிங்கள அரசு மீது விசனப்படும் மனித உரிமை அமைப்புக்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 04 November 2005

சிறிலங்கா அரசின் உண்மைக்குப் புறம்பான பிரசார நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தற்காலிக பயணத்தடை விதிக்க நேர்ந்தது. அந்தப்; பயணத்தடை விவகாரம் சிறிலங்கா அரசுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தொடர் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டு செல்வது சிங்கள அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க…
 
டென்மார்க்கில் பயங்கரவாதத் தாக்கதல் நபர்கள் தொடர்கைது எங்கு எப்படி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 03 November 2005

உளவறியும் திகைப்புக் கட்டுரை.

டென்மார்க்கில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரு சோமாலிய தம்பதியர் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கைது செய்யப்பட பொஸ்னிய சரஜீவா நகரில் நடைபெற்ற இரண்டு கைதுகளே காரணமாக இருந்துள்ளன. இந்த கைதுகளின் பின்னணியில் நடைபெற்றது என்ன பொஸ்னிய தலைநகர் சரஜீவாவில் இருந்து இந்தத் தேடல் பயணத்தை ஆரம்பிப்போம்.

மேலும் படிக்க…
 
`நான் கண்காணிக்கப்பட்டு முடக்கப்பட்டு இருக்கிறேன்'` அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 02 November 2005

அம்மா மரணமான போதுகூட ஈழம் செல்ல அனுமதி மறுப்பு'

"நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை `தமிழ் பள்ளோ' என்று தான் சிங்களவர்கள் அழைப்பார்கள். `பள்ளோ' என்றால் `நாயே' என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை `கொட்டியா' என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், `புலி' என்று பொருள்!" - கவிஞர் காசி ஆனந்தன்

"ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!" என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன்.தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை இராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ...துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது `கட் - அவுட்'களை நிற்க வைத்து, சிங்கள இராணுவத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒரு காலத்தில் சொல்வார்கள்.

மேலும் படிக்க…
 
படையினரின் அடாவடி; மக்களின் கிளர்ச்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 31 October 2005

புத்தூர்ப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இரவில் தனித்திருந்த பெண்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம், அதனையடுத்து பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மூண்ட கடும்மோதல், இதன்போது அப்பாவி இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, பலர் காயமடைந்தமை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றநிலை யாழ். குடாநாட்டில் இன்னமும் தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க…
 
சிங்கள ஊடகங்களின் `கொலை'ச் செய்திகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 31 October 2005

சிங்கள நாளேடான `சத்தின'வின் காரண காரிய விளக்கங்கள்இலங்கையில் கிழக்கில் இன்று மினி யுத்தம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை என்று கூறலாம்.கிழக்கில் இன்று சூரியன் உதிக்கின்றதோ இல்லையோ தினம் ஒரு படுகொலை நிகழ்ந்த வண்ணமேயுள்ளது.

மேலும் படிக்க…
 
சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்கு முன்னர் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 27 October 2005
நான் தலைவரைச் சந்தித்து சுனாமி பற்றிய செய்தியைக் கூறுவதற்கு முன்னர் தலைவர் எல்லா விடயங்களையும் அறிந்திருந்தார். இயக்கத்தின் அனைத்துத் துறையினருக்கும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்குரிய ஆலோசனைகளைக் கூறிக்கொண்டிருந்தார். இயக்கத்தின் அனைத்து வளங்களையும் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்கான உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார். தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த போராளிகளிலிருந்தும் கூட மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆளணிகளை அனுப்புவதிலேயே குறியாகயிருந்தார். யுத்தம் செய்து மீட்ட முல்லைத்தீவை நாங்கள் பார்க்கின்ற பொழுது பெரும் ஆக்கிரமிப்பை வென்ற நிலையில் பெரும் நகரத்தைக் கைப்பற்றிய வெற்றிக்களிப்பில் தான் எங்களது பார்வை இருந்தது. அதனால் அழிவுகள் எங்களைத் தாக்கவில்லை. எங்களை மீறிய இயற்கையின் சக்தி இப்படிப் பெரும் அழிவை ஏற்படுத்தியிருப்பது பெரும் சோகமான நிகழ்வு என சுனாமி களமுனையில் நின்று நிலைமைகளை நேரடியாக அவதானித்துச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்ததளபதியும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான் அவர்கள் பகிர்ந்துகொண்டவற்றை இந்தப் பகுதியிலும் தருகிறோம்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 316 - 330 / 411

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..