|
Friday, 21 October 2005 |
|
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் அண்மித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் சிங்களப் படைப்புலனாய்வும், ஒட்டுப்படையும் தமிழ் மக்கள் மீதான தமது புலனாய்வு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போர் நிறுத்தம் பலவீனப்பட்டு அது வலுவிழந்து, செயலிழந்து போவதற்கு ஒட்டுப்படைகளும் சிறிலங்கா புலனாய்வுப் படைப் பிரிவினருமே காரணம். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 21 October 2005 |
|
எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சமாதானமோ பொருளாதார சுபிட்சமோ ஏற்படப் போவதில்லை'கடந்த இருபத்தியேழு வருட கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ் இந்த நாடு எதிர்நோக்கிய எந்தவொரு பாரிய பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. இன்றைய பிரதான பிரச்சினையான யுத்தமாக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினைக்கோ அன்றி மக்கள் அனைவரும் எதிர்நோக்கி நிற்கும் அன்றாட வாழ்வுக்குரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கோ உரிய தீர்வும் பரிகாரங்களும் தேடப்படவில்லை. இத்தனைக்கும் தொடர்ந்து ஜனாதிபதிக் கதிரையில் இருந்து ஆட்சி அதிகாரம் புரிந்து வந்த கட்சிகளே இன்றும் போட்டியில் இறங்கி நிற்கும் இரண்டு பிரதான கட்சிகளாகும். ஆட்கள் மாற்றப்பட்டு நிற்கிறார்களே தவிர, கட்சிகளும் கொள்கைகளும் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகவே உள்ளன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
|
புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ய+னியன் எடுத்திருக்கும் முடிவு தமக்குக் கிடைத்த ஒரு ராஜீய வெற்றியாக சிங்களத்து ராஜதந்திர வட்டாரங்களில் கொண்டாடப்படுகிறது. கொழும்பில் உள்ள அநேகமான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலும் இது கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மத்தியில் சில வட்டாரங்களில் அது ஒரு ராஜதந்திர வீழ்ச்சியாக அல்லது பின்னடைவாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு மதிப்பீடுகளுமே மிகையானவை. உண்மையில் ஐரோப்பிய யூனியனின் முடிவு எனப்படுவது |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 20 October 2005 |
|
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான செயற்பாடுகள் எந்தக் கட்டத்தில் உள்ளன? இதில் முன்னேற்றம் காணக்கூடியதான எத்தகைய சமிக்கைகளும் தென்படுகின்றனவா? அதாவது யுத்த நிறுத்த உடன்பாடு எந்தளவிற்கு உறுதியானதாகவுள்ளது? சமாதானப் பேச்சுவார்த்தைகளும்- அரசியல் தீர்வு முயற்சிகளும் எந்தளவில் உள்ளன? என்பதே இங்கு எழுப்பப்படும் வினாவாகும். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 19 October 2005 |
|
உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள் தமது தாய் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப் பலம் வாய்ந்த ஒன்றாகும். தங்களது தார்மீக கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும் புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள். ஆகவே புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீக கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன்வரவில்லை! மாறாக புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.! |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 15 October 2005 |
|
தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த பகுதியிலும் வலுவடைந்து வரும் துணைப் படை சொல்லும் அரசியல் செய்தி என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏடு விளக்கியுள்ளது.விடுதலைப் புலிகள் ஏட்டின் புரட்டாதி-ஐப்பாசி மாதத்தின் 126 ஆவது குரல் இன்று சனிக்கிழமை வெளியானது.
அதில் 'அமைதி வழியிலான அரசியலில் விரக்தியடையும் தமிழ் மக்கள்' என்ற முகப்புப் பக்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:மூன்றரை வருடத்திற்கு முன்னர் போர்நிறுத்த உடன்பாடு காணப்பட்டபோது போருக்கு முடிவு நெருங்கிவிட்டது! சமாதானம் தளைத்தோங்கப்போகின்றது! என்று தமிழ் மக்கள் குதூகலித்தனர். சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்பில் மூன்றாந்தரப்பு நாடொன்றின் மத்தியத்துவப் பணியின் கீழ் நடைபெறுகின்ற சமாதான முயற்சிகள் வெற்றிகரமாக முன்னேற்றம் காணும் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 15 October 2005 |
|
புலிகள் மீதான ஐரோப்பிய பயணத்தடை குறித்து இதுவரை வரவேண்டிய எல்லாப் பக்கங்களின் ஆய்வுக் கண்ணோட்டங்களும் வெளியாகிவிட்டன. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அரசியலாளர் என்று பல தரப்பினரும் தமது பக்க கருத்துக்களை வைத்துள்ளனர். இந்தத் தடை குறித்து சிங்களத் தரப்பு மகிழ்வும், தமிழ் தரப்பு கவலையும் வெளியிட்டுள்ளன. வெளிவந்த அனைத்துவிதமான கருத்துக்களையும் அவ்வவ் கருத்துக்களாகவே வைத்துக் கொண்டு இக்கட்டுரை மற்றைய பக்கங்களிலும் ஒளி வீசிப் பார்க்கிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 October 2005 |
|
இலங்கையின் இனப் பிரச்சினையானது நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஓர் அரசியல் பிரச்சினையாகும். அதாவது 1921ம் ஆண்டிலிருந்து 80 வருடங்களுக்கு மேலாக நிலவி வருகின்றது. ஆனால், இப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வு சிறிலங்காவின் சிங்கள அரசியல்வாதிகளால் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஆனால், தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாகப் பல ஒப்பந்தங்கள், வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களும், வட்ட மேசை மாநாடுகளும் சிங்கள இனவாதிகளின் எதிர்ப்பால் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டது. மாநாடுகள் கலைக்கப்பட்டன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 October 2005 |
|
கார்த்திகை மாதம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் அந்த மாதத்தின் நினைவுகளையும் அசைவுகளையும் இன்று சர்வதேச சமூகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. ஏனெனில் ஜனாதிபதித் தேர்தல் அதில் பெறும் வெற்றி, அதனைத் தொடர்ந்து மாவீரர் தின உரையில் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் ஆற்றவிருக்கும் மாவீரர்தின உரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக நோக்கப்படுகின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 October 2005 |
|
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடைகளில் இப்போது விசித்திரமான ஒரு காட்சியைக் காணக் கூடியதாக இருக்கிறது. இதுகாலவரை எதிரும் புதிருமாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனை( ஜே.வி.பி.)யின் தலைவர்களும் ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவர் வாசுதேவ நாணயக்கார போன்ற பழைய இடதுசாரிக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் அருகருகே அமர்ந்திருந்து அந்நியோன்யமாக அளவளாவி ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆதரவைக் கோருகிறார்கள். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 12 October 2005 |
|
இந்தியாவிலிருந்து நீங்கள் பயன்படுத்திய கணனிக்குள் வைரஸ் வந்துவிட்டதாமே ! காரணம் என்னவோ? அதுதான் ஆபாசப்படங்களைக் கணனிக்குள் பார்க்கக்கூடாது என்று. இணையத் தளங்களை பார்க்க விரும்புகிறாயாமே ஆனால் எப்படி அதை தட்டச்சு செய்வது என்பது தங்களுக்குச் சற்றுச் சிக்கலாக இருப்பதாகக் கிரான் மக்கள் அறிந்தார்கள். அக்கா நிராவுக்குத் தெரியாத தட்டெழுத்து விளையாட்டா |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 331 - 345 / 411 |