|
Tuesday, 20 September 2005 |
|
சிறிலங்கா அரசுடன் உயர்மட்டப்பேச்சுக்களை நடத்த நோர்வேத்தரப்பிடம் விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நோர்வேத்தரப்பின் தகவலின்படி கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கம் குறித்துப் பேசுவதற்கு விடுதலைப்புலிகள்இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 20 September 2005 |
|
சிறிலங்காவின் முக்கிய நகரங்களிலுள்ள மதிற்சுவர்களில் ரணில் விக்கிரமசிங்காவினதும் மகிந்த ராஐபக்சவினதும் உருவப்படங்களுடன் கூடிய தேர்தல் பிரச்சார சுவரெட்டிகள் நிறைந்து காண்ப்பட்ட போதும் ஜனாதிபதி சந்திரிக்கா தொடர்ந்து மகிந்த ராஐபக்சவை விமர்சிப்பதும் அவர்பற்றி பேட்டியளிப்பதும் கடந்த வாரங்களில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களாகியுள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 20 September 2005 |
|
சமாதானப் பேச்சுக்களில் இருந்து போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதற்கான நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும் விடயத்தில் அரசு அசமந்தத்தனமாக செயற்பட்டு வருவதையே அண்மைக் கால நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. கடந்த மூன்றரை வருட காலமாக போர் நிறுத்தம் அமுலிலிருந்த போதும் சமாதானத்துக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.தற்போது தமிழர் தாயகத்தின் இயல்பு நிலை சீர்குலைந்துள்ளது. சிறிலங்காவின் இனவாத சக்திகள் எல்லாம் ஓரணி திரண்டு சமாதானத்துக்கு எதிராக கோசமெழுப்புகின்றன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 20 September 2005 |
|
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாலியல் உறவுக்கான இணக்க உரிமை வயதெல்லையை (Age of consent) 16 இலிருந்து 13 ஆகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் இந்தக் குறைப்பை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்காக நியதிச் சட்டப்படி பாலியல் வல்லுறவு (Statutory Rape) என்று கருதப்படும் குற்றச் செயல்களைக் கையாளும் தண்டனைச் சட்டக் கோவையின் குறிப்பிட்ட பிரிவில் விரைவில் திருத்தம் செய்யப்படவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 19 September 2005 |
|
முடிவுகளை எடுக்கும் முன்னர் நன்றாக, நன்றாக, நன்றாக சிந்திப்போம் ... விடுதலைப் புலிகளுடன் எவ்வாறு சமாதானம் செய்துகொள்வது, நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்ற இரண்டு விடயங்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான கருப்பொருளாக இருக்கப் போகின்றன, என்று செய்தி விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சிறீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உருமய ஆகிய இரு சிங்கள உதிரிக் கட்சிகளுடன் செய்துகொண்ட தேர்தல் ஒப்பந்தங்களின் மூலம் பௌத்த சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கவர எதிர்பார்க்கின்றார். சமஷ்டியை நிராகரித்து, ஒற்றையாட்சி அடிப்படையில் தான் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு என்றும்,
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 19 September 2005 |
|
நாட்டில் இன்று அமைதி நிலவுவதற்கும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் யுத்தநிறுத்தம் நடைமுறையிலிருப்பதே பிரதான காரணமாகும். எவ்வாறெனினும் அண்மைக் காலமாக தொடரும் வன்முறைகள் காரணமாக எங்கே யுத்தநிறுத்த சூழல் சீர்குலைந்து அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
எந்தவகையிலும் நாட்டில் மீண்டும் போர் வெடித்து விடக்கூடாது என்பதில் சமாதான விரும்பிகள் மிகுந்த அக்கறையுடன் உள்ளனர். மீண்டும் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை மேற்கொண்டு யுத்தநிறுத்தத்தை தக்க வைத்துக் கொள்வதில் அரசாங்கம் கடந்த சில வாரங்களாக சற்று முனைப்பு காட்டி வருவதையும் அவதானிக்க முடிகிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 18 September 2005 |
|
சிங்கள நாளேடுகள் சிலவற்றின் சிந்தை மழுங்கடிப்புச் செய்திகள்இலங்கையின் இனவாத ஊடகங்கள் மீண்டும் தமது வக்கிர கருத்துகளை சிங்கள சமூகத்தினருக்கு வழங்குவதற்கு ஆரம்பித்து விட்டன.80 சதவீதம் பக்கச்சார்பானவையென மக்கள் கருதுகிறார்களென சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிலிருந்து தெரிவித்துள்ளது. அந்த வகையில் சில சிங்கள இனவாத ஊடகங்களின் செயற்பாடுகள் எந்த வகையிலும் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு பொருத்தமானதாக இல்லை.இனப்பிரச்சினைக்கான தீர்வு கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழ்நிலையில் பொதுவாக இலங்கையின் ஊடகங்கள் |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 18 September 2005 |
|
மன்னார் முசலிப் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த மூன்று சிறிலங்காப் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தற்போது விடுதலைப்புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தது பாரிய குற்றம். அதேவேளை இவர்கள் சென்றதற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 18 September 2005 |
|
'மகிந்தவின் ஆட்சியைவிட ரணிலின் ஆட்சியில் சந்திரிகாவிற்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்" உக்கிய கயிற்றை கொடுப்பதும் அதை விழுங்கி ஐPரணிப்பதும் அரசியல் நாடக அரங்கேற்றங்களில் வழமையாக நடைபெறுவது ஒன்றாகும். விசேடமாக தேர்தல் காலங்களில் உக்கிய கயிற்றை கொடுப்பதும் அதை விழுங்குவதற்கும் நாட்டின் நன்மைக்காக அல்ல. தமது நலன்களை பாதுகாப்பதற்காகவே இன்று இரு பிரதான கட்சி வேட்பாளர்களும் கயிறுகளை கிலோகணக்கில் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 18 September 2005 |
|
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மூலம் சிங்கள தேசத்தில் தமிழ் இனத்திற் கெதிரான தமிழ் மக்களின் உரிமைக்கெதிரான பேரினவாத சந்ததியொன்று அணிதிரளுகிறது, ஒன்று சேருகிறது. இந்த நிலையால் இலங்கை முழுவதற் குமே ஆபத்து ஏற்படப் போகிறது. மீண்டும் போர் ஏற்படக் கூடிய அபாயம் தோன்றுகிறது. பிரதம மந்திரிக்கும் ஜே.வி.பி.க்கும் மற்றும் பேரினவாதக் கட்சிகளுக்கிடையில் இடம் பெற்ற ஒப்பந்தங்கள் சமாதானத்திற்குச் சாவுமணி அடிக்கிறது |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 17 September 2005 |
|
மரபுவழித்தாயகம், தேசிய இனம், தன்னாட்சி அடிப்படையில் தமிழினத்தின் இறைமைக்கான போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் இன்று தமிழர் தாயகமெங்கும் ஓங்கி ஒலிக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுகளின் அற்பசொற்ப அரசியல் சலுகைகள் தமிழினத்தின் உரிமையை வழங்காது இதுவரை காலமும் தமிழினம் சிங்கள ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் தமிழினம் ஏமாறுமா? இது நிச்சயம் நிறைவேறாது. |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 21 22 23 24 25 26 27 28 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 391 - 405 / 411 |