வவுணதீவில் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது தாக்குதல் நடத்தியமை பாரதூரமான விடயமாகும் என்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹொக்லண்டின் அறிவிப்பு ஒரு அபாய எச்சரிக்கை மணி போன்றதாகும்.
இரண்டில் ஒன்று முடிவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இலங்கை அரசு. இனிமேலும் விலாங்கு போல பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டுவது மாதிரி இரட்டை வேடம் போடும்போக்கை அரசு தொடரமுடியாது