|
வைகோவை மீண்டும் ஏமாற்ற முனையும் கலைஞர்! |
|
|
|
Friday, 03 March 2006 |
|
வைகோவின் மதிமுக கட்சிக்கு கலைஞர் கருணாநிதி கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் மீண்டும் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கலைஞர் தருவதாக கூறிய தொகுதிகளின் எண்ணிக்கை வைகோவுக்கு ஓரளவு திருப்தியை ஏற்படுத்தினாலும், எந்த தொகுதிகள் என்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது ம.திமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கலைஞர் கருணாநிதி ஒதுக்காமல், வேறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இது மதிமுகவிருக்குள் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்றுதான் சென்ற முறையும் கலைஞர் கருணாநிதி நடந்து கொண்டதால் வைகோ தனித்து நின்றார். இதனால் திமுக தேர்தலில் தோற்றுப் போனது. ஆனால் கருணாநிதி பாடம் படித்ததாக தெரியவில்லை. மதிமுக - திமுக கட்சிகளுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஜெயலலிதா மீண்டும் வைகோவுக்கு தூது விட்டுள்ளார். இவைகளை அடுத்து வைகோ திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில் 5ஆம் திகதி கலந்து கொள்வாரா எனும் கேள்வி மிகப் பெரிதாய் எழுந்துள்ளது.
webeelam
|