|
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுகளின்போது புலிகள் கையாண்ட தந்தி ரோபாய உத்தி காரணமாகத் தென்னிலங்கையில் பெரும் அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
புதிய அரசுடன் நடந்த முதல் பேச்சிலேயே- ஆரம்ப அடியிலேயே - தென்னிலங்கையில் இவ்வாறு குழப்பம் என்றால், இனிவரும் பேச் சுகளின்போது புலிகள் எடுக்கப்போகும் தந்திர நகர்வுகளால் தென் னிலங்கையில் பூகம்பம் வெடிக்கும் நிலைமை ஏற்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. அனுசரணைப் பொறுப்பிலிருந்து நோர்வேயை விரட்டுவோம் என்றார்கள்; எந்தப் பேச்சும் ஆசிய நாட்டில்தான் என்று அறிவித் தார்கள்; தற்போதைய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்து புதிய ஒப்பந்தம் செய்வோம் என்றார்கள். ஆனால், அவை எவையும் நடக்கவேயில்லை. அனுசரணைப் பணியைத் தொடரும்படி நோர்வேக்கு வெற் றிலை வைத்து அழைக்க வேண்டியவர்களானார்கள்; புலிகள் குறிப்பிட்ட மாதிரி ஐரோப்பிய நாடு ஒன்றில்- ஐரோப்பாவின் மத்தி யில் - விடுதலைப் புலிகளோடு சமதையாக இருந்து பேச வேண்டி யவர்களானார்கள்; பேச்சின் முடிவில் தற்போதுள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டை அப்படியே பேணிக் கடைப்பிடிப்பதற்கான முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று எழுத்தில் - கூட்ட றிக்கை மூலம் - உறுதி கொடுக்க வேண்டியவர்களானார்கள். யதார்த்தம் புரியாமல் பேசியதால்- யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் - தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.- அதனால்தான் தெற்கில் இந்த அரசியல் நெருக்கடிகள். தற்போதைய சமாதான முயற்சிகள் 2002 இல் ஆரம்பமான போது, அதனை ஆரம்பித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும், அனுசரணைப் பணியாற்றும் எரிக் சொல்ஹெய்மும் அந்த ஆரம்பக் கட்டத்திலேயே சுட்டிக் காட்டியமை போன்று சமாதான முயற்சிகள் என்ற வழித்தடம் மிகவும் கரடு முரடானது. பல நெருக்கடிகளை - சவால்களை - தரக் கூடியது. அவற்றை யெல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு தாண்டித்தான் அமை தித் தீர்வை எட்டியாக வேண்டும். அந்தக் கூற்று இப்போதும் பொருத்தமானதே. புதிய அரசுக்கு முதல் சுற்றுப் பேச்சிலேயே புலிகள் வைத்த "செக்- மேட்' இவ்வளவு குழப்பங்களை தெற்கில் உருவாக்கும் என்றால் இனி வரப்போகும் பேச்சுகளில் புலிகளின் தந்திர நகர்வை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்பதே கேள்வி. அப் போது தெற்கில் நெருக்கடி மேலும் தீவிரமாகலாம் என எதிர் பார்க்க முடியும். இப்போதுதான் யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாக நடை முறைப்படுத்துவதற்கு புதிய இலங்கை அரசு இணங்கியிருக்கிறது. துணைப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து, அவற்றை அப்புறப்படுத்துவது அதில் ஓர் அம்சம் மட்டுமே. அதற்கு அப்பால் இன்னும் பல உள்ளன. யுத்த நிறுத்த உடன்பாட்டைச் செம்மையாக நடைமுறைப் படுத்துவது என்பதில் இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளன. ஒன்று மோதல் தணிப்பு (De-Escalation) மற்றது இயல்பு நிலை ஏற்படுத்துதல் (Normalisation) இதில் முதலாவதான மோதல் தவிர்ப்பின் ஓர் அங்கமே இரா ணுவத் துணைப் படைகளின் ஆயுதங்களைக் களைந்து அவற்றை வடக்கு, கிழக்கிலிருந்து அப்புறப்படுத்துவதாகும். அதைச் செய்வதற்கே இவ்வளவு பின்னடித்து ஆரவாரம் செய்து பிகு பண்ணும் அரசுத் தரப்பு, அடுத்த விடயங்களைப் புலிகள் முன்வைக்கும்போது என்ன பிரதிபலிப்பை வெளிப் படுத்தப் போகின் றது? இயல்பு நிலையை ஏற்படுத்தல் என்பதில் தமிழ் மக்களின் அன்றாட- அத்தியாவசிய - மனிதாபிமானத் தேவைகள் சம்பந்தப் பட்ட விடயங்கள் தொடர்புபட்டிருக்கின்றன. அரச இராணுவம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிர மித்திருக்கும் பொது மக்களின் வாழிடங்களை விட்டு வெளி யேறி, அந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனு மதியளித்தல் கடற்றொழிலாளர்கள் கட்டுப்பாடின்றித் தமது தொழிலைச் செய்வதற்கு இடமளிப்பதன் மூலம் அவர்களின் அன்றாட ஜீவனோபாயத் துக்கு வழி செய்தல்- அரசுப் படைகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொதுக் கட்டடங்கள், மத வழிபாட்டு மையங்கள் போன்றவற்றிலிருந் தும் படை களை அகற்றுதல்- ஆகியவை பற்றியெல்லாம் புலிகள் அடுத்த சுற்றுப் பேச்சுகளில் வலியுறுத்துவார்கள்; வற்புறுத்துவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது. அவை பற்றியெல்லாம் பேசித் தீர்வு கண்டு, நடைமுறைப் படுத்திய பின்னரே இடைக்காலத் தீர்வு குறித்தோ, இறுதித் தீர்வு குறித்தோ, அரசியல் விவகாரங்கள் குறித்தோ பேசப்படும் நிலைமை வரும். அப்படியாயின், இந்த ஆரம்ப விடயத்துக்கே இப்போது துள் ளிக் குதிக்கும் மஹிந்தவின் அரசு, மோதல் நிலையைத் தணித்து, இயல்பு நிலையை ஏற்படுத்துவது தொடர்பான ஏனைய விட யங்கள் வரும்போது எப்படி சமாளிக்கப் போகின்றது? அவ்விட யங்களில் தனது கடப்பாட்டை பொறுப்பை எப்படி நிறைவு செய்யப் போகின்றது? அதுவும் ரணில் அரசோடு விடுதலைப் புலிகள் பேச்சு நடத்திய சமயத்தில் "போர் நெருக்கடியைத் தணித்து இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்காக' அரசும், புலிகளும் சேர்ந்து அமைத்த உப குழு தொடர்பான நடவடிக்கைகளில் அப்போது பங்குபற்றி அக்குழுவில் தனது பௌத்த-சிங்கள மேலாண் மைப் போக்கை வெளிப்படுத்தி, அதன் மூலம் அந்தக் குழுவே செயலிழந்து செத்துப்போக வழி செய்த அப்போதைய யாழ். படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவைத்தான் இப்போதைய அரசு இராணுவத் தளபதியாக நியமித்து வைத்திருக்கிறது. அப்படியானவர் இராணுவத் தளபதியாக இருக்கும்போது இத்தகைய சிக்கலான விடயங்களைத் தென்னிலங்கை சிங்கள அரசு எப்படிக் கையாளும் என்பது ஊகிக்கத்தக்கதே. அமைதி முயற்சிகளில் அரைக் கால் கிணறு தாண்ட முன்னரே இப்போது குழம்பிப் போய் நிற்கும் தென்னிலங்கைத் தரப்பு இனி மேல் அரைக் கிணறு கூடத் தாண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அபத்தமே.
uthayan
|