|
வந்தார்கள்; வெருட்டினார்கள்; வென் றார்கள்' ஜெனீவாப் பேச்சுக்காக விடு தலைப் புலிகளின் பிரதிநிதிகள் மேற் கொண்ட விஜயத்தை இப்படித்தான் கூற வேண்டும்.
சர்வதேச சமரசப் பேச்சு விவகாரங்களில் துறை தோய்ந்த அமெரிக்க ஹவார்ட் பல் கலைக்கழக விற்பன்னர்களின் ஆலோ சனைகள், உபதேசங்கள், வழிகாட்டல்கள் என்பவற்றைப் பெற்றுக்கொண்டு நான்கு, ஐந்து நாள்கள் விரிவுரைகள், வகுப்புகள் என்பவற்றை முடித்துக் கொண்டு பெரிய ஆரவாரங்கள், அறிவிப்புகள், பிர கடனங்கள், முன்னறிவிப்புகள் என்பவற் றோடு ஜெனீவாவுக்கு வந்த அரச பிரதிநிதி கள் குழு இரண்டு நாள்களாகப் புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் ஜெனீவாவில் நடத்திய விரிவுரைப் பாடங்களைக் கேட்ட தோடு, அவருடன் விவாதிக்க முயன்று வாங்கியும் கட்டிக்கொண்டு, கொண்ட கொள்கையையும் கோட்டை விட்டு விட்டு வெறுங்கையோடு இலங்கை மீண்டிருக் கின்றது. ஜெனீவா நகரிலிருந்து சுமார் பதி னைந்து கிலோ மீற்றருக்கு அப்பால் மத இயல் சம்பந்தமான அமைப்பு ஒன்று இயங்கு கின்ற ஒரு கட்டடத் தொகுதிக்குள் பேச்சுக் குழுக்கள் இரண்டினதும் பிரதி நிதிகள் தங்கவைக்கப்பட்டனர். வனமும் அல்லாமல் வயலுமல்லாமல் எங்கோ ஒரு மூலைக்குள் ஏகாந்தமாக அமைந்திருந்த அந்த இடம் துறவறம் பூண்டவர்கள் தியா னம் செய்து அமைதி பேண உகந்த மைய மாக இருக்கலாம். ஆனால், ஆயுதப் போரில் உச்சத்தில் நிற்கும் விடுதலைப் போராளி களுக்கோ அல்லது மறுபுறத்தில் ஆர்ப் பாட்ட அரசியலில் கைதேர்ந்த அரசியல் வாதிகளுக்கோ அமர்ந்து பேச உகந்த இட மாக அது படவில்லை. மாறாக, இருதரப் பினரையும் காட்டுக்குள் சிறை வைத்தமை போன்ற ஒழுங்குதான் அது. போதாக்குறைக்கு பேச்சுக்குழுவின ருக்கு வழங்கப்பட்ட வசதிகளும் வெகு கம்மிதான். முதல் நாள் பேச்சுத் தொடங்க வேண்டிய வேளை நெருங்கியும் பேச்சுக் குழுப் பிரதிநிதிகள் தங்கியிருந்த அறை களின் குளியலறைகளுக்கு வெந்நீர் விநி யோகம் கிட்டவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கடும் குளிருக்கு மத்தி யில் பச்சைத் தண்ணீரில் ஐஸ் நீரில் குளித்த கடுப்போடு பேச்சு மேசைக்கு வந்த புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம், அந்த வெறுப்பிலோ என்னவோ, பேச்சின் ஆரம்பத்திலேயே அரச குழுவினர் மீது சீறி விழவேண்டியவரானார். கிழக்கு இலங்கையில் கருணாவுடன் அணிதிரண்டு, பின்னர் புலிகளின் தாக்கு தலுக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓட்டம் பிடித்த சில பிரகிருதிகள் சுவிஸிலும் தஞ் சம் புகுந்திருக்கின்றார்கள் என்று கூறப்படு கின்றது. தவிரவும், சுவிஸில் புலிகளுக்கு தமிழர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பௌத்த, சிங்களத் தீவிர அமைப்புகளைச் சேர்ந்த சில டசின் கணக் கானோர் திட்டமிடுகின்றார்கள் என்ற செய் தியும் சுவிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தாகக் கூறப்படுகின்றது. பேச்சு நடைபெறும் இடத்துக்கு இந்தக் கூட்டம் கொடி, பதாகை பிடித்துக்கொண்டு ஊர்வலம் செல்ல முயன்றால், பதிலுக்கு சுவிஸில் பல்லாயி ரக்கணக்கில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் கொதித்துக் கிளம்பி நிலைமை விபரீதமா கும் வாய்ப்புகளும் இருந்தன. இவற்றை யெல்லாம் கருத்திற்கொண்டே யாரும் நெருங்க முடியாத உச்ச ஒதுக்குப் புறமான நகரை விட்டு வெகு தொலைவில் உள்ள காட்டுப் புறம் போன்ற பகுதியில் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் பேச்சு மையத்தை அமைக்க சுவிஸ் அரசு திட்டமிட்டது என்று தெரிகின்றது. ஏகக் கெடுபிடிகளுக்கு மத்தியில் பேச்சு நிகழ்வின் ஆரம்ப வைபவம் பற் றிய செய்திகளைச் சேகரிக்கச் செய்தியா ளர்கள் கூட்டிச்செல்லப்பட்டனர். ஆரம்ப நிகழ்வின் ஆரம்பத்துடன் அங்கிருந்து கூட்டியும் செல்லப்பட்டனர். முதல்நாள் பேச்சு முதல் நாள் கடந்த புதனன்று வைபவ ரீதியான ஆரம்ப நிகழ்வை அடுத்து மதி யுரைஞர் பாலாவின் உரை இடம்பெற்றது. "அடைந்தால் மகாதேவி; இல்லை யேல் மரணதேவி' என்ற மாதிரியில் பேசு வதானால் அது யுத்த நிறுத்த உடன்பாடு பற்றியதாக இருக்க வேண்டும், இல்லை யேல் பேச்சே இல்லை என்பதுபோல அடித் துக் கூறினார் பாலா. அவரின் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு பாணிப் பேச்சி னால் பேச்சு மேசை ஆரம்பத்திலேயே சூடு பிடித்தது. அதைத் தொடர்ந்து அரசுத் தரப்புப் பேச்சுக்குழுத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உரையாற்றினார். பாலாவின் பேச் சுக்குப் பதிலடி தருகிறேன் என்று அவர் எண்ணிக்கொண்டு வாங்கு வாங்கென்று வாங்கினார். ஆனால், அதுதான் அரசுத் தரப் பின் மானத்தையே வாங்கிவிட்டது என் பதுதான் பின்னர் ஏற்பட்ட நிலையானது. ""நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த உடன்பாடு ஏற்றுக்கொள்ளமுடியாது. அது இலங்கை அரசமைப்புக்கு முரணானது. நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப் பாட்டுக்கும் வேட்டு வைப்பது, தேசியப் பாதுகாப்புக்குப் பெரிதும் பங்கமானது. எனவே, அதை மாற்றியமைத்தே தீரவேண் டும்'' என்றெல்லாம் முழங்கினார் நிமால் சிறிபால டி சில்வா. பௌத்த, சிங்களப் பேரின வாதிகளினது ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றைச் சேர்ந்த இனவாதிகளினது கருத்தை அப்படியே பிரதிபலித்தார் அவர். ஆனால், அதை அடியோடு மறுத்து ரைத்து ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அடித்துக் கூறினார் மதியுரைஞர் பாலா. இலங்கை அரசும் புலிகளும் நோர்வே அனுசரணைத் தரப்பின் உதவியோடு நீண்ட நெடுங்காலமாக ஆராய்ந்து ஒவ் வொரு ஏற்பாடாகப் பரிசீலித்து ஒவ்வொரு வசனமாகத் துருவித்துருவிக் கவனித்து தயாரித்தது இந்த யுத்த நிறுத்த உடன்பாடு. இது வெறுமனே இரண்டு தரப்புகளுக்கு இடையில் அரசு, புலிகள் ஆகிய இரு தரப் பினருக்கு மத்தியில் ஒப்பமிடப்பட்ட ஆவ ணமல்ல. நோர்வே அனுசரணையாளர் களால் அங்கீகரிக்கப்பட்டு, அந்த ஆவணத் தின் அடிப்படையில் கண்காணிப்புக் குழு வுக்குத் தமது பிரதிநிதிகளை நியமித்த ஐந்து ஸ்கண்டிநேவிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச சமூகத் தினால் விதந்துரைக்கப்பட்ட ஓர் உடன் படிக்கை இது என்று தெளிவுபடுத்தினார் பாலா. சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட் டுள்ள இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கை அரசுத் தரப் புக் கூறுமானால் அந்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு விலகுகின்றது என்றே அர்த்தம். அத்தகைய நிலையில் இந்த ஒப் பந்தத்திலிருந்து விலகுவதற்கு கொடுக்க வேண்டிய பதினான்கு நாள் முன்னறிவித் தலை அரசுத் தரப்பு இப்போது கொடுத் திருக்கின்றது என்றே கருதவேண்டும் என்றார் பாலா. ""நோர்வே அனுசரணைக் குழுவின் பிரதி நிதியாக நோர்வே அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் வன்னிக்கு வந்து எமது தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அப்போது, யுத்த நிறுத்த உடன்படிக்கையை செம்மையாக அமுல்செய்வது குறித்து பேசுவதானால் அதற்குத் தனது பிரதிநிதிகள் குழுவை அனுப்பமுடியும் என்று தலைவர் பிரபா கரன் தெளிவாகச் சொன்னார். அவ்வாறே யுத்த நிறுத்த உடன்படிக்கையைச் செம் மையாக நடைமுறைப்படுத்துவது குறித் துப் பேசுவதற்கே எம்மை அவர் அனுப்பி வைத்துள்ளார். எனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆணை அதுதான். யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மட் டுமே பேச தனது பேச்சுக்குழுவை அனுப்ப முடியும் என்று எமது தலைவர் கூறிய போது அதனை நோர்வே அமைச்சர் சொல் ஹெய்மும் ஏற்றுக்கொண்டார். எனவே, அந்த விடயத்துக்கு அப்பால் எம்மால் எது வும் பேசமுடியாது. அதை மீறி, யுத்த நிறுத்த உடன்படிக்கையை மாற்றியமைப்பது குறித்து அரசுத் தரப்பு பேசுமானால் எமது பிரதிநிதிகள் (புலிகள்) பேச்சு மேசையி லிருந்து வெளிநடப்புச் செய்துவிடுவார் கள்'' என்று எச்சரித்தார் பாலா. யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மட் டுமே பேசுவதற்குத் தனது பிரதிநிதி களைத் தான் அனுப்புகின்றார் என்ற பிரபா வின் முடிவை ஏற்றே இந்தப் பேச்சுக்குத் தாங்கள் ஏற்பாடு செய்தார்கள் என்பதை நோர்வே அனுசரணையாளர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த விடயத்தை எற்றுக்கொள்ளும் அனுசரணையாளர்கள், அதனடிப்படை யில் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயா ரித்து இரு தரப்பு இணக்கத்தை ஏற்படுத்தி, பேச்சை நடத்துவதை விடுத்து, பேச்சின் ஆரம்பத்தில் வந்திருந்து, பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இருதரப்பும் பேசி இழுபட விடுவது அழகன்று என்று அனுசர ணைத் தரப்பைக் குறை கூறினார் புலிகளின் பேச்சுக் குழுத்தலைவர் அன்ரன் பாலசிங்கம். யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக் கம் குறித்து அல்லாமல் வேறு விடயங்கள் குறித்தும் பேசினால் வெளிநடப்பு என்ற மதியுரைஞர் பாலாவின் வெருட்டல் பாச்சா பலித்தது. இறங்கி வந்தது அரசுத் தரப்பு. கொழும்பில் பௌத்த, சிங்களப் பேரின வாதம் உசுப்பேற்றிவிட, அந்தக் கொதிப் பில் ஜெனீவா பறந்து வந்த அரசுப் பிரதி நிதிகளின் உஷார், பாலாவின் வெருட்ட லில் அடங்கிப்போக யுத்த நிறுத்த உடன் பாட்டை அப்படியே ஏற்று நடைமுறைப் படுத்துவது குறித்து ஆராய்வது என்ற உடன்பாடு எட்டப்பட்டது. இது முதல்நாள் காலை அமர்வின் முதல் நகர்வு. பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் என்ன வென்பது, மொத்தம் நான்கு அமர்வுகளைக் கொண்ட இரண்டு நாள் பேச்சுக்களின் முதல் நாள் முதல் அமர்வின் முடிவில்தான் இறுதி செய்யப்பட்டது; எட்டப்பட்டது. uthayan
|