பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

காதல் பொறாமை இரு இளம் மாணவர் உயிர்களைக் குடித்தது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 06 March 2006

பழைய காதலாலும் அதனால் உண்டான தாங்க முடியாத பொறாமையாலும் கடந்த வெள்ளியன்று ஒல்போ கிம்நாசியம் உயர்நிலைப் பள்ளியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் அவருடைய 23 வயதுடைய முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இவருடைய கொலையைத் தடுக்க வந்த 17 வயது மாணவன் ஒருவர் கறுத்து அறுபட்ட நிலையிலும் இன்னொருவர் காயமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாஜி காதலியை கொலை செய்த 23 வயது நபர் அங்கிருந்து சென்று தமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள மரமொன்றில் தூக்குப் போட்டு மரணமடைந்தார்.


இந்த மரணங்கள் ஒல்போ கிம்நாசிய வட்டகையில் பாரிய பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. சனி, ஞாயிறு இரு தினங்களும் கிம்நாசியம் திறக்கப்பட்டு மலர்கள் வைத்து இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடந்த சனியன்று பெற்றோர்களுடன் இது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இந்தப்பாடசாலை மாணவர்கள் இதுவரை இப்படுகொலை அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இவர்களுக்கு உளவியல் ரீதியான விசேட ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்த நபர் மாஜி காதலியை தற்செயலாக கத்தியால் குத்தவில்லை அவர் நன்கு திட்டமிட்டே அதைச் செய்துள்ளார் என்று இப்போது போலீஸ் கூறியுள்ளது. சுமார் ஆறு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதமொன்றை இறந்தவர் தமது பெற்றோருக்கு எழுதியுள்ளார். இதை போலீசார் படித்துள்ளனர், ஆனால் அதனுடைய உள்ளடக்கத்தை வெளியிட மறுத்துள்ளனர். ஆனால் அந்தக் கடிதம் கொலையை திட்டமிட்ட கொலையாகக் காட்டியுள்ளது.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..