பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஆஸ்கர் விருதுகள்: சிறந்த படம் 'கிராஷ்' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 07 March 2006

புரோக் பேக் மவுண்டென் படம்தான் சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் செல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஆஸ்கர் தேர்வுக் குழு நினைத்ததோ வேறு. சுயாதீனமாக, குறைந்த பொருட்செலவில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இனத் துவேஷம் பற்றிய கதைக்கரு கொண்ட கிராஷ் என்ற படம் விருதைத் தட்டிச் சென்றது.

புரோக் பேக் மவுண்டெனை இயக்கிய அங் லீ, சிறந்த இயக்குநர் விருதை வாங்கினார். கவ்பாய்ஸ் அதாவது மாடு மேய்க்கும் ஆண்கள் இருவர் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்படுவது. அந்த ஓரினக் காதலோடு சமூகத்தை அவர்கள் எதிர்கொள்வது பற்றியது இப்படம்.

எழுத்தாளர் ட்ரூமன் கபோடெயாக கபோடெ என்ற படத்தில் வாழ்ந்து காட்டியிருந்த பிலிப் செய்மோர் ஹொஃப்மேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்த ஜார்ஜ் குலூனி பெற்றார்.

வாக் த லைன் படத்தில் மேற்குலக நாட்டுப்புற இசைப் பாடகி ஜூன் கார்ட்டராக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ரீஸ் விதர்ஸ்பூன். தி கொன்ஸ்டண்ட் கார்ட்னர் படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதை ரேச்சல் வெய்ஸ் தட்டிச் சென்றார்.

இந்த முறை ஆஸ்கரில் மேலும் ஒரு அரிய சாதனை நிகழ்த்தப்பட்டது. வால்லெஸ் அண்ட் குரோமிட் த கர்ஸ் ஒப் த வேர் ரேப்பிட் படத்துக்காக சிறந்த அனிமேடட் பீக்சர் விருதை நான்காவது முறையாக நிக் பார்க்கர் வாங்கினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..