பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சமாதானமா? ஒட்டுப் படைகளா? தெற்குத் தீர்மானிக்க வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 07 March 2006

இரண்டில் ஒன்று முடிவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இலங்கை அரசு.
இனிமேலும் விலாங்கு போல பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டுவது மாதிரி இரட்டை வேடம் போடும்போக்கை அரசு தொடரமுடியாது

ஒருபுறம் சமாதானப் பிரியர்கள் போல சர்வதேச சமூ கத்துக்கும், இலங்கைத் தீவு மக்களுக்கும் கதைவிடுவது. மறுபுறம் ஒட்டுப் படைகளையும் புலனாய்வுப் பிரிவுகளை யும் வைத்துக்கொண்டு அந்த அரூபக் கரங்கள் மூலம் அழிவு, நாச வேலைகளை முன்னெடுப்பது. இந்த இரட்டை வேடம் அம்பலமாகும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
சமாதானமா? துணைப்படைகளா?ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இக்கட்டுக்குள் வந்து சிக்கி நிற் கிறது தென்னிலங்கை நிர்வாகம்.
ஜெனிவாப் பேச்சுகளை வசமாகப் பயன்படுத்தி தென்னிலங்கை அரசின் சுயரூபத்தை - உண்மைச் சொரூபத்தை - சர்வதேசச் சமூகத்துக்கு வெளிப்படுத்தியிருக்கின்றது புலிகள் அமைப்பு.
அரசு தனது புலனாய்வுப் பிரிவுகள் மூலம் ஒட்டுப் படைகள், துணைப்படைகள் போன்றவற்றை இயக்கிவரு வதை துல்லியமான விவரங்களோடு அறிக்கையாக ஜெனிவாப் பேச்சுகளில் சமர்ப்பித்து, அரசின் முகத்திரை யைக் கிழித்து நிஜத்தை நிரூபித்திருக்கிறது புலிகள் இயக்கம்.
இதனால் அமைதிப் பேச்சுகள் தொடர்பான விடயங் களில் புலிகளின் தார்மீகப் பலம் சர்வதேச சமூகத்தின்முன் இன்று உயர்ந்து நிற்கின்றது.
யுத்த நிறுத்த உடன்பாடு, கடந்த ஜனவரி 25ஆம் திகதி கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனை நோர்வே அனுசரணைப் பணியின் பொறுப்பாளரும் அந்த நாட்டு அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் சந்தித்தபோது எட் டப்பட்ட இணக்கம், ஜெனிவாப் பேச்சின் பெறுபேறாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஆகியவற்றுக்கு மதிப் பளித்து, வன்முறைகள் இடம்பெறாமல் தவிர்த்து அமைதிபேணி வருகின்றனர் புலிகள்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்பின் நியாயம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்கப் பட்டு, தார்மீகப் பலம் அதிகரித்து, அவர்களின் கைகள் ஓங்கியிருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத தென்னி லங்கைத் தரப்பு அதை வீழ்த்துவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து பார்க்கிறது.
அதன் ஓர் அங்கமே புலிகளைச் சீண்டும் விவகாரம்.
அமைதி பேணி, வன்முறைகளை விட்டு ஒதுங்கி, சமாதானத் தீர்வுக்கு நியாயமான வாய்ப்பை அளித்து அடங்கி இருக்கும் புலிகள் மீது அவ்வப்போது தாக்குதல் களைத் தொடுத்து, அவர்களை ஆத்திரமுற வைத்து, வன் முறைக் களத்துக்குள் இழுத்து வீழ்த்துவதுதான் தென்னி லங்கையின் தந்திரம் போலத்தென்படுகின்றது.
வவுணதீவுத் தாக்குதல், மூதூரில் மீனவர் மீதான சூடு என்ற வரிசையில் தமிழர் தரப்பு மீது நடத்தப்படும் தாக் குதல்களும், வன்முறைகளும் இந்தத் தந்திரப்போக்கின் சில வெளிப்பாடுகளே.
ஆனால், இவற்றுக்காக நிலை குலைந்து, தமது சம நிலையை ("பலன்ஸை') தவறவிட்டு, கிடைத்த வாய்ப் பைக் கோட்டைவிட்டு, பெயரைக் கெடுத்துக் கொள்ளப் புலிகள் ஒன்றும் அறிவற்றவர்கள் அல்லர்.
இத்தகைய சீண்டும் தாக்குதல் சம்பவங்கள் அரசுத் தரப்பின் பெயரைத்தான் - போக்கைத்தான்- மென் மேலும் கெடுத்துக் கொள்ளவும், களங்கப்படுத்தவும் உதவப் போகின்றன.
ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்யும் நீதியான தீர்வு ஒன்றை அமைதி வழி யில் - சமாதான முறையில் - தென்னிலங்கை ஆட்சி யாளர்கள் தமிழர்களுக்கு வழங்கவே மாட்டார்கள் என்றும்
ஆயுத முனையில் தமிழர்களை அடக்கி இராணுவத் தீர்வு ஒன்றை அவர்கள் மீது திணிப்பதே தென்னிலங் கையின் திட்டம் என்றும் -
அதனால்தான் தமக்குரிய நியாயத் தீர்வை ஆயுத முனையில் போராடிப் பெற்றுக் கொள்ளவேண்டிய கட்டா யத்துக்குத் தமிழர்கள் வேறு வழியின்றித் தள்ளப்பட்டார் கள் என்றும்-
தமிழர் தரப்பிலிருந்து திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வரும் உண்மைகளை நிரூபிக்குமாற் போலவே இந்த அமைதிக்கான இணக்கத்தின் பின்னரும் தமிழர்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கெடுபிடிகள் என்பன அமைந் திருக்கின்றன.
ஜெனிவாப் பேச்சில் புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியைச் சகிக்க முடியாமல் துவண்டு போயி ருக்கும் தென்னிலங்கை அரசு, எப்படியேனும் தனக்குத் தோல்வியாக முடிந்த ஜெனிவா இணக்கப்பாட்டைக் குழப்பி, அதன்மூலம் தனக்கு ஏற்பட்ட இராஜதந்திரச் சரிவை சரிக்கட்டிவிட எத்தனிக்கின்றது.
வன்முறை வழிக்குத் தூண்டி, சீண்டி இழுக்கும் தென் னிலங்கையின் சதி முயற்சிகளுக்குப் பலியாகாமல் - பொறுமை காத்து-
தென்னிலங்கையில் குரூரக் கரங்களை மேலும் அம்பலப்படுத்தி, பகிரங்கப்படுத்தி, அதன் அந்தரங்கங்களை சர்வதேச சமூகத்தின் முன்னால் மேலும் பகிரங்கப்படுத்து வதே தமிழர்களின் தற்போதைய உபாயமாக - உத்தியாக- இருக்க வேண்டும்; இருக்கும்.


uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..