|
சூப்பர் கொம்யூட்டர் ஜேர்மனியில் வெளியானது. |
|
|
|
Tuesday, 07 March 2006 |
|
ஜேர்மனி நேற்று தனது சூப்பர் கொம்யூட்டரை முதல் தடவையாக பாவனைக்கு விட்டது. இப்போது பாவனைப்படுத்தப்படும் கணினிகளைவிட இது 15.000 மடங்கு பகாசுர வேகத்தில் இயங்கும் சக்தி வாய்ந்தது. இது ஐ.பி.எம் மின் புளு ஜீன் இயந்திரத்தில் இயங்குகிறது.
ஒரு வினாடியில் 46 பில்லியன் செயற்பாடுகளை செய்ய வெல்லது. இது உடனடியாக பொது மக்கள் பாவனைக்கு வரவில்லை ஆனால் பௌதிகவியலாளர், இரசாயனத்துறை, மருத்துவத்துறை விஞ்ஞானிகளுக்கும் முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. ஐ.பி.எம் நிறுவனம் இதுபற்றிக் கூறும்போது காலநிலை அவதானிப்புக்கள், பங்குச் சந்தைகளுக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளது. நெருடல் இணையம்
|