|
உளவாளிகள் அவதானம் (பாகம் 3) |
|
|
|
Tuesday, 07 March 2006 |
|
மேலும்,கிழக்கில் அதாவது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு S.T.Fயினரின் பொறுப்பதிகாரியாக இஸ்ரேலின் மொசாட்டின் நேரடியாக இராணுவப்பயிற்சியும், புலனாய்வு பயிற்சியும் பெற்ற வீரதுங்கா என்வர் 1985 காலப்பகுதியில் கடமையாற்றினார். இந்த அதிகாரி மட்டக்களப்பு கொடுவாமடு என்ற இடத்தில் கண்ணி வெடித்தாக்குதலில் பின்னர் கொல்லப்பட்டார்.ஆனால் இறக்கும் வரை இந்த அதிகாரி தமிழ்மக்களுக்கு இழைத்த கொடுமையோ அளப்பரியது.
களுவாஞ்சிக்குடி,கல்முiனை,கரடியனாறு ,பாம்முகாம், ஏறாவுர்,முறக்கொட்டான்சேனை, கும்புறுமுலை என்று அதிரடிப்படை முகாமிகளில் இந்த அதிகாரியின் கிழ் நடந்த தமிழ் இளைஞர்சர்களின் சித்திரவதைக்கும் படுகொலைக்கும் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்புகளும் சொல்லமுடியாதது.
களுவான்சிக்குடி,கல்முனை முகாம்களில் விஜயதுங்காவே நேரடியாக செய்தான்.பல முஸ்ஸிம் இனத்தவர்கள் வீரதுங்காவிற்கு இரகசியத்தகவல் அளிப்பவர்களாகயிருந்தார்கள் இதில் என்ன வேதனையான விடயம் என்றால் பல தமிழர்கள் குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் தான் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் போராளிகளின்முகாம்கள், போராளிகளின்நடமாட்டம்,நடவடிக்கைளை இரகசியமாக வீரதுங்காவிற்கு வழங்கி வந்தனர்.மேலும் பொஸிஸ்பிரிவின் புலனாய்வு நடவடிக்கைகளை தொடரும்….
சீனு
|