பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மார்ச் 8 இன்று உலகப் பெண்கள் தினம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 March 2006

இன்று உலகம் முழுவதும் உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் 1906 ம் ஆண்டு ஆண்களும் பெண்களும் சமம் என்ற பிரகடனம் முதல் முதலாக டென்மார்க்கில் செய்யப்பட்டது. 1908 ம் ஆண்டு பெண்கள் தேசிய தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

அதற்கு இரண்டு வருடங்களுக்கு பின் முதலாவது உலகப் பெண்கள் மாநாடு டென்மார்க் தலைநக் கொப்பன்கேகனில் கொண்டாடப்பட்டது. 1973ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சம்பளம் வழங்கும் சட்டம் டென்மார்க்கில் இயற்றப்பட்டது. இவ்வாறு ஆரம்பமுதலே பெண்ணுரிமை சம்மந்தமாக பல சாதனைகளைப் படைத்த டென்மார்க்கில் இவ்வருடமும் பெண்ணுரிமை தொடர்பாக பல காத்திரமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இன்று மதியம் 13.45 ற்கு பெண்கள் சம உரிமை பற்றிய கலந்துரையாடல் தேசிய நூதனசாலை மண்டபத்திலும், புலம்பெயர்ந்த பெண்கள் சமயம், கலாச்சாரம் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் தலைநகர் நோரஅலவிலும், இது குறித்த விசேட கண்காட்சி தலைநகர்  குவாட்டகவுசில் 19.30 மணிக்கும் நடைபெறுகின்றன. இது மட்டுமல்லாமல் பல நகரங்களில் தொடர்ச்சியாக உலகப் பெண்கள் தினம் அனுட்டிக்கப்படுகிறது.


 பெண்கள் தினம்பற்றி கருத்துரைத்த பெண்ணியவாதியும் எழுத்தாளருமான கனா வீபிகா கொல்ஸ்ற் கூறும்போது இன்றும் கூட பெண்களுக்கான சம உரிமை பல விடயங்களில் கிடைக்கவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் உலகில் பல நாடுகளில் அறிமுகமாகவில்லை, பெண்கள் மீதான ஆண்களின் நிந்தனை குறைவடையவில்லை, பெண்கள் மீதான பாலியல் பார்வை சமுதாயத்தில் இருந்து அகலவில்லை, பெண்கள் என்பதனால் நிராகரிக்கப்படும் வேலைத்தலங்களின் செயல்களில் மாற்றம் வரவில்லை. எனவேதான் பெண்ணுரிமை தொடர்பான போராட்டங்கள் மேலும் தீவிரமடைய வேண்டுமென்று என்று டென்மார்க்

ravi
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..