|
அகதிகளாக வந்த 45 பேர் கடலில் மூழ்கி மரணம். |
|
|
|
Wednesday, 08 March 2006 |
|
ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருவதற்காக புறப்பட்ட 46 அகதிகள் ஆபிரிக்கா கனேரி தீவுகளை அண்டிய பகுதியில் கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய் நடைபெற்றுள்ளது, இரண்டு படகுகள் விபத்தில் சிக்கி 45 பேர் மடிந்ததாக ஸ்பானிய செய்திகளும், செஞ்சிலுவைச் சங்க தகவல்களும் கூறுகின்றன. இதன்படி முதலாவது படகில் 46 பேர் வந்ததாகவும் அவர்களில் 22 பேர் மடிந்து 24 பேர் காப்பாற்றப்பட்டதாகவும். மற்றைய படகில் வந்தவரில் 23 பேர் மடிந்து 15 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நெருடல் இணையம்
|