|
செப் 11 தாக்குதலை அமெரிக்கா முன்னரே அறிந்திருந்தது |
|
|
|
Thursday, 09 March 2006 |
|
கடந்த 2001 ம் ஆண்டு செப் 11 அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை அமெரிக்கர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக சுவீடன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அல்குவைடா தீவிரவாத அமைப்பு பயணிகள் விமானத்தை கடத்தி தாக்குதல் நடாத்த திட்டமிடுகிறது என்பதும் அதற்கான பயிற்சிகள் நடைபெறுவதும் 1990 லேயே தெரிய வந்திருக்கிறது. இதற்கான மாஸ்டர் மைன்ட் எனப்படும் திட்ட வடிவமைப்பாளரை பின்தொடர்ந்த உளவுப்பிரிவினர் 1997 லேயே கைது செய்யும் முயற்சியில் கோட்டை விட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3000 பேரின் மரணத்திற்கு காரணமானவரென குற்றம் காணப்பட்டுள்ள சகரியா மௌசோலி மீதான விசாரணை மன்றில் சாட்சியமளித்த அமெரிக்க உளவுப்பிரிவான எப்.பி.ஐ அதிகாரி ஒருவர் மேற்படி தகவலை தெரிவித்ததாகவும் அது செய்தி வெளியாகியுள்ளது. ravi
|