உலக வாழ் தழிழ் உறவுகளுக்கு வணக்கம்!
நெருடல் இணையம் நாளாந்த செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொணரும் ஒரு தமிழ் இணையச் செய்தித்தளமாக வெளிவர தொடங்கியுள்ளது.
இவ் இணையத்தளம் கடந்த சில வருடங்களாக யாழ். மாவட்டம் , மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் தமிழீழத்தின் இதர செய்தியாளர்களின் பங்களிப்புடனும் மற்றும் உலக வாழ் தமிழ் ஆய்வாளர்களின் பங்களிப்புடனும், வேறு செய்தி இணையத்தளங்களின் ஆதரவுடனும் நாளாந்தம் செய்திகள் மற்றும் கட்டுரைகளை தொகுந்து வழங்கிக்கொண்டிருக்கின்றது.
இவ் உழைப்பாளிகளின் பங்களிப்பிற்கு நெருடல் இணையம் ஒரு வினாடி சிரம் தாழ்த்தி தன் பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளியிடுவதற்கே நாம் விரும்புகின்றோம். இதனால் செய்தி பழைய செய்தியாகிவிடக்கூடிய சாத்தியக்கூறு உண்டு. இருந்தும் வரும்காலங்களில் உடனுக்குடன் செய்திகளை தரமுயற்சிக்கிறோம்
அத்தோடு எமது தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அல்லது ஆதாரத் தரவுகள் என்பவற்றிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.
எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை மற்றும் ஆக்கங்களை தந்துதவினால் அவற்றை நாம் பிரசுரிக்க தயாராகவுள்ளோம். நாம் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும்.
மீள்பிரசுர உரிமை...
இங்கே
இலவசமாக செய்திகளைப் பெற்று மீள் வெளியீடு செய்பவர்கள் தயவுசெய்து
இத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட வேண்டும்.
அன்புடன்
நெருடல் இணையம் - குழுவினர்