|
இப்படி புளட் இயக்கத்தில் மெசாட் முலம் பயிற்சி பெற்றவர்கள் தான் புளட் இயக்கத்தின் இராணுவத்தளபதியாகவும் உபதளபதியாகவும் இருந்து இறந்த மாணிக்கதாசன், முள்ளிக்குளத்தில் இறந்த புளட் இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் சங்கிலியன் மற்றும் புளட் இயக்கத்திலிருந்து பின்னர் ENDLFற்குச் சென்று இலங்கையரசின் கீழ் தற்போது துரோகி கருனாவுடன் இனைந்து புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டியிருக்கும் மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்த மகேந்திரன் மாமா போன்றேரும் அடங்குவர்.
இன்னும் எத்தனையோ பேருக்கு இந்த மொசாட் அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த அப்பட்டமான உண்மைகளையும் தன் பல வருடகால புலனாய்வு நடவடிக்கைளின் உண்மை வடிவங்களில் இலங்கையின் தன் அனுபங்களையும் மொசாட்டியிருந்து வெளியேறிய ஒரு உயர் புலனாய்வுஅதிகாரி விபரமாக நுல் ஒன்றில் தெரியப்படுத்திருந்தார். இப்படியான புலனாய்வு நடவடிக்கையானது உலக புலனாய்வுப்பதிவின் அனுபங்களில் எற்படககூடிய ஒன்று தான். முதளாளித்துவ வல்லரசு நாடுகள் தாங்கள் பாவிக்கும் புலனாய்வு முகவர்கள் புலனாய்வாளர்கள் போன்றோர்களை தாங்கள் எந்தளவிற்கு அவர்களை பாவித்து பயன் அனுபவிக்க முடியுமோ அந்தளவிற்கு பாவித்து விட்டு கைகழுவிடுவர் ஆனால் உலகில் மக்களின் விடுதலைக்காகப்போராடும் அமைப்புக்கள் அப்படி செய்வதில்லை! உலக பயங்கரவாதியாக முன்னர் பேசப்பட்டு பின் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட கார்லோஸ் என்பவர் முன்னர் விடுதலை அமைப்பிலிருந்தவர் இவரின் தன்னிகரான புலனாய்வுக்கட்டமைப்பு தாக்குதல்த்திறன் மதியுட்பம் போன்றவைகளால் கவரப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பான CIA மற்றும் இஸ்ரேலிய மொசாட் ரசியாவின் KGPபிரிட்டனின் MI5என்பன தங்கள் தனிப்பட்ட பாவனைக்கு பாவித்தன உகாண்டா கூட இதை செய்தது. பல எதிரி நாடுகளில் கார்லோசை வைத்து இவ் அமைப்புக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை செய்தன. போதைப்பொருள் கடத்தல் ராஜாக்கள் என்று அழைக்கப்படும் மாபியா கும்பலுக்குள் கூட கார்லோசின் ஊடுருவல் நடவடிக்கையிருந்தது. பின்னர் கார்லோசை வைத்து பயன்படுத்திய நாடுகள் எல்லாம் கார்லோசை தங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தின்டாடின. ஏனனில் கார்லோஸ் தனது தனித்துவமான புலனாய்வு நடவடிக்கைளால் மற்ற நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு கம்பி நீட்டினார்.மேற்கூறிய புலனாய்வு அமைப்புகளுக்கள் கார்லோசின் முகவர்கள் ஊடுருவி குழப்பத்தை உண்டு பண்னினர். இறுதியாக எல்லா புலனாய்வு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கார்லோசை சர்வதேசபயங்கரவாதியாகப்பட்டம் சுட்டி கைது செய்தனர். இலங்கை அரசுக்கு பிரிட்டன் அமெரிக்கா இந்தியா இஸ்ரேல் பாகிஸ்தான் சீனா யப்பான் போன்ற நாடுகள் புலனாய்வு ஆலோசனைகளையும் பயிற்சியையும் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க ஒத்துழைப்பு வழங்கி வந்தன. அதேபோல் இந்தியா கூட தனது உளவு அமைப்பான றோ முலம் இலங்கையரசுக்கு பலவருடமாக புலனாய்வு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கிருகிறது. மேலும், இலங்கையரசின் எதிர்கட்சியிருந்து ஆளும்கட்சி வரையும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இலங்கை அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாகுவதற்தும் அரசியல் தலைவரிலிருந்து நாட்டின் ஜனாதிபதி வரை தெரிவு செய்வற்குக் கூட இந்திய றேவின் தலையீடும் அணுசரனையுமே காரணமாகும். அதைவிட எமது விடுலை போராட்டத்தை பிரிவுபடச்செய்யவும் பின்தங்கசெய்யவும் தலைமையை அழிக்கவும் பல வழிகளிலும் இந்த றோ அமைப்பானது தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டேயிருக்கின்றது.தொடரும....
சீனு
|