|
புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கும் சாத்தியம் அதிகம் என்கிறார் ரவி கருணாநாயக்க. |
|
|
|
Tuesday, 04 April 2006 |
|
நோர்வேயின் சமாதான முயற்சியிலும் துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையும் விடயத்திலும் அரசாங்கத்துக்குள் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால் விடுதலைப் புலிகள் மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகரித்துக் காணப்படுகின்றன என்று ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஆயுதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதென கடந்த முதல் சுற்று ஜெனிவா பேச்சுக்களின் போது, அரச தரப்பு இணக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் கொடகதெனிய ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைய முடியாது என தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசு இரு வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியபோது, மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார நெருடல் இணையம்
|