பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உளவாளிகள் அவதானம் - பாகம் 6 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 08 April 2006
... இன்று நேற்றல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகாலம் தொட்டு தற்போதுவரை இந்தியாவின் உளவு அமைப்பான றோவின் தலையீடும், ஊடுருவலும் இருந்து கொண்டே இருக்கின்றன. றோவின் முன்னாள் அதிகாரியான உன்னிக்கிருஷ்ணன், சந்திரகாசன் உட்பட பலர் எம் விடுதலைப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய முற்பட்ட கதை பலர் தெரிந்தும் தெரியாத கதைதான்.
 
அதன் பின்னர் தழிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தலமையையும் முற்றுமுழுதாக அழித்தொழிக்க றோ அமைப்பானது மாத்தையா தலமையில் மிகப்பெரிய சதி நாடகத்தை நடத்தியது. தலமையையோ, இயக்கத்தையோ அழிக்க முடியாவிட்டாலும் ஒரளவு வெற்றிக் கண்டனர்.அந்த வெற்றியானது இயக்கத்தின் பிரதித்தலைவர் உட்பட பல தளபதிகளையும், போராளிகளையும் இச்சதிக்கு உடந்தையாக்கியது.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமிக்க புலனாய்வுத்துறையின் அதீத நடவடிக்கையால் அதாவது அதன் முறியடிப்பு புலனாய்வுத்துறையின் திறனால் றோவின் அப்பெரிய சதியானது முற்றுமுழுதாக முறியடிக்கப்பட்டது என்றே கூறலாம். அதைவிட தலமைத்துவத்தின் விழிப்புணர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

மேலும்,முன்னாள் இந்தியப்பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் விடுதலைப் போராட்டத்தை முற்றாக சிதைக்க ஈழத்தில் றோவின் ஊடுருவல்கள் அதிகரித்தன. இது முற்றுமுழுதாக பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமைந்தது. தற்போதும் றோவின் ஊடுருவல் ஈழத்தில் பல்வேறு பரிமானங்களில் உள்ளது.

அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலமையையும், பெரிய தளபதிகளையும் அழிப்பது புலனாய்வுத்துறையைச் சிதைப்பதும், பொறுப்பாளர்களை அழிப்பதும், தரைப்படை, கடற்படை, விமானப்படைகளின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிப்பது போன்றவையாகும்.

இதற்காக கண்காணிப்பு, மற்றும் தூங்கு முகவர்களை தங்க வைத்தல், இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களை கண்காணித்து நடவடிக்கைகளில் ஈடுபடல், மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையுடன் தகவல்களைப் பரிமாறல். மற்றும் மாற்றியக்கங்களான E.P.D.P, E.P.R.L.F, PLOT, ENDLF தற்போது கருணா குழு போன்றவற்றுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கல்.இலங்கையின் புலனாய்வுத்துறையான N.I.Bக்கு ஆலோசனைகளை வழங்குதல் போன்றவையாகும்.

மேலும் இயக்கம் E.N.D.L.Fமுற்றுமுழுதாக றோவின் முழு வழி நடத்தலிலேயே இயங்குகிறது.அதன்இயக்கத்தலைவர் பரந்தன் ராஜன் உட்பட மட்டக்களப்பு சக்திவெளியைச் சேர்ந்த மாமா என்ற நபர் தொடங்கி எல்லோரும் ஆரம்ப காலத்திலிருந்தே றோவின் வளர்ப்புப் பிள்ளைகளாவே இருந்து வருகின்றனர்.

மாமா என்ற நபர் I.P.K.F காலகட்டத்தில் கிளிநொச்சியில் I.P.K.F யினர் இருந்த வேளையில் கிளிநொச்சி பழைய சிங்கள மகா வித்தியாலயத்தில் E.N.D.L.F அமைத்த முகாமில் இருந்தவர்.

அங்கே மகேந்திர மாமா என்ற இந்த நபர் கைது செய்யப்படுபவர்களை சித்திரவதை செய்து கொன்றவர். இவரால் பல இளம் மாணவிகளும், வேறு பெண்களும் கற்பழிக்கப்பட்டு கிளிநொச்சி பழைய சிங்கள மகா வித்தியாலய வளாகத்துள் பல எலும்புக்கூடுகள் கிணறு போன்றவற்றுள் கண்டு எடுக்கப்பட்டன.

மேலும், இந்த மாமா என்ற நபரின் நடவடிக்கையிலிருந்து இலங்கைப் புலனாய்வுத்துறைக்கும் இவரது பங்கு பெருமளவில் இருந்தது. இந்த மாமா ஆரம்பகாலகட்டத்தில PLOTE யில் லெபனானில் பயிற்சி பெற்றவர். இதனால் இறந்த PLOTE இயக்கத்தின் உபதலைவர் மாணிக்கதாசனுக்கும் வேண்டப்பட்டவராக இருந்தார்.

இதனால்தான் இலங்கையின் வெளிநாட்டுக்கான நடவடிக்கை புலனாய்வுத்துறையினரின் ஆலோசனைக்கு ஏற்ப மாணிக்கதாசனால் இந்த மாமா நியமிக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரான்சிற்கான பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் போன்றோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பின்னர் இந்த மாமா பிரான்ஸ் புலனாய்வுத்துறையால் தேடப்பட்டபோது ஜேர்மனிக்குத் தப்பி வந்தார். பின்னர் ஜேர்மனியில் பொலிசாரால் தேடப்பட்டபோதுதான் ஏதோ ஒரு வழயில் இலங்கைக்குத்தப்பிச் சென்ற இவரின் நடவடிக்கை பலகாலமாக இரகசியமாக இருந்தது.

தற்போது துரோகி கருணாகுழுவின் றோவின் பிரதிநிதியாக அங்கம் வகித்து தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைக்கு மீண்டும் அத்திவாரம் ஈடுகிறார். இவருக்கு இரகசியத் தகவல்களை வழங்குவதற்கு வெளிநாடுகளில் பலர் உள்ளனர்.

மேலும் துரோகி கருணாவும் றோவின் முற்றுமுழுதான ஆலோசனைக்கேற்பவே செயற்படுகிறார் என்றால் மிகையாகாது. ஏனெனில் இலங்கை புலனாய்வுத் துறையும் இந்திய றோவும் கருணாவுக்கு மூளைச் சலவைசெய்து தங்களது வளர்ப்பு நாய்க்குட்டிபோல பராமரிக்கின்றனர்.

இந்த கருணாவின் வளர்ப்பும், பராமரிப்புக்கும் காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளை கருணா மூலம் ஓரங்கட்டலாம் என்ற அவாதானொளிய வேறொன்றுமில்லை. ஏனெனில் கருணா என்ற துரோகி ஏற்கனவே புலனாய்வு சம்பந்தமான அறிவைப் பெற்றிருப்பதால் றோவிற்கும், N.I.Bக்கும் இலகுவாகப் போய்விட்டது.

கருணாவிற்குத் தற்போதும் பலர் வெளிநாடுகளில் இருந்து தகவல்களைப் பரிமாறுகின்றனர். அத்தகவல்களானது தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நடவடிக்கைகளைப் பொறுத்தே பிரதிபலிக்கும். அதாவது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்தி ஊடகங்களை நிறுவுதல், இளைஞர்களை பல அமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து செயற்படற் செய்தல்.

டென்மார்க்கில் டென் உங்க, பாலம் அமைப்போம், தமிழ் கேள்ஸ். டிகே போன்றவைகளே நல்ல உதாரணமாகும். மேலும் ராமராஜனின் T.B.C சுவிடனில் வசிக்கும் K.T ராஜரெட்ணத்தின் Asian Tribune போன்றவைகள் எல்லாம் கருணாவிற்கு முழு ஆதரவாக இயங்குகின்றன.

அதேபோல் வேறுநாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடு போன்றவற்றை கண்காணித்து றோவிற்கும், N.I.Bகும் இந்த கருணா குழு முகவர்களால் வழங்கப்படுகிறது.

மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ராசிக்குழுவினருக்குக்கூட றோவினால் நேரடிப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. பல றோ அதிகாரிகள் கிழக்கு மாகணத்தில் நடமாடியதாக தகவல்கள் கூறின. மேலும், ராசிக் கொல்லப்பட்ட பின்னர் காந்தி என்பவர் ராசிக்குழுவிற்குத் தலமை தாங்கினார். பின்னர் தற்போது காந்தியும் கொல்லப்பட்டுவிட்டார். இருப்பினம் ராசிக்
குழுவின் செயற்பாடு தற்போதும் உள்ளது.
தொடரும்…



சீனு
Comments (4) >>

a guest said:

 
கருணா ஒரு நாய்! அவன மனிதனாக மதிப்பது பாவம்
April 10, 2006

Thamil Thesaththai Nesippavan said:

 
கருணா என்பவன் பச்சோந்தி.காம வெறிபிடித்த கயவன்.சுயநலத்துக்காக பிரதேசவாதத்தை கிளப்பியவன்.
October 20, 2006

Vethanayagam said:

 
சந்திவெளி மாமா என்பவன் சுவிஸ பாசல் மாநிலத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டே இலங்கைக்கு தப்பி சென்றார். இவரை சுவிஸ் பொலிஸ் தேடிவருகிறது சுவிஸ் பொலிஸ் இணையத்தளத்தில் இவரின் படமும் இவரைப்பற்றிய தவகலையும் காணலாம்
October 22, 2006

Ariyampathy thamilmakan said:

 
சந்தி வெளிமாமா என்பவன் தான் சுவிஷ் பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய நாடுகளில் விடுதலைப்புலிகள் பற்றிய தகவல்களை எடுத்து சிறிலங்காவுக்கும் றோவுக்கும் வழங்குபவனாக இருக்கிறான்.
இவனின் உறவினர்களை வைத்தும் மேலும் சில நபர்களை வைத்தும் இவன் தகவல்களை எடுக்கிறான்.
இதற்காக சிறிலங்கா து}தரகத்தின் ஊடாக அந்தந்த நாடுகளில் இருக்கும் சந்திவெளி மாமாவின் முகவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பிரான்சில் அவனின் தம்பி ரவி என்பவனும் ஜேர்மனியில் கணேஸ் என்பவனும் சுவிஸில் அவனின் மைத்துனன் ஏறாவூர் தவராசன் மூலமாகவும் தகவல்களை பெறுகின்றhன். அந்த நாடுகளில் இருக்கும் அந்த உளவாளிகள் பற்றி சம்பந்தப்பட்ட நாடுகளில் இருக்கும் மக்கள் அவனதானமாக இருக்க வேண்டும்
April 30, 2007
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..