|
இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்தியப் பிரதமர் கவலை. |
|
|
|
Wednesday, 12 April 2006 |
|
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் பாதுகாப்புச் சூழ்நிலை குறித்தும் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் தொலைபேசி மூலம் உரையாடியதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்த மீறல்கள் குறித்து இந்தியப் பிரதமர் தனது கண்டனத்தைத் தெரிவித்ததாகவும், அதே நேரம் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற இந்தியா அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் திருகோணமலையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்திய துணைத் தூதுவரின் கவனத்துக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார். நெருடல் இணையம்
|