|
வினை விதைத்ததால் விபரீத விளைவுகள் |
|
|
|
Thursday, 13 April 2006 |
|
யுத்தநிறுத்த இணக்கம் மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகும் மோசமான நிலை ஏற்பட்டிருக்கிறது. கொடூர யுத் தம் எப்போதும் வெடிக்கலாம் என்ற ஆபத்துக் கட்டத் தில் இலங்கைத்தீவு சிக்குண்டிருக்கின்றது.
ஒட்டுப்படைகளின் கட்டுப்பாடற்ற வன்முறைகளும், அரச படைகளின் கெடுபிடிகளும், அரச படைகளுக்கு எதிராகக் களத்தில் நிகழும் கிளைமோர்த் தாக்குதல் களும் திரும்பவும் நாட்டை கடந்த டிசம்பரில் நிலவிய மோசமான கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. இப்போதைய வன்முறைகள் தொடர்பாக இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகளுக்குப் பொறுப் பான நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமது பிந்திய அறிக்கையில் தெரிவித்திருக்கும் விடயம் ஒன்று முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. ""இந்த (கிளைமோர்)தாக்குதல்களை, முக்கிய தமிழ் சிவில் சமூகத் தலைவரான வ.விக்னேஸ்வரன் படு கொலை உட்பட அண்மைய நாட்களில் நிகழ்ந்த வன் முறைகளின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் சொல்ஹெய்ம். இன்றைய மோசமான நிலைக்கு விக்னேஸ்வரன் படுகொலை போன்ற கொடூர வன்முறைகளே மூலகார ணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அந்தப் படு கொலையால் பற்றிப் பிடித்த தீ, இப்போது கனன்று விளாசி எரிகின்றது.கிளைமோராக வெடிக்கின்றது. பதில் படு கொலைகளாக அரங்கேறுகின்றது. கட்டுப்பாடு இல்லாமல் - கட்டுமட்டு இல்லாமல் - கொட்டமடிக்கும் ஒட்டுப்படைகளைக் கட்டிவைப்பதற்கு அரசு தவறியதால் ஏற்பட்ட வன்முறைகளுள் ஒன்று தான் விக்னேஸ்வரன் படுகொலை என்பது ஊரறிந்த இரகசியம். விடுதலைப்புலிகளும் அதையே சுட்டிக்காட்டு கின்றனர். ஒட்டுப்படைகளின் ஆயுதங்களைக் களைந்து அவற் றைத் தமிழர் தாயகப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்து வது என்றுஜெனீவாப் பேச்சில் ஒப்புக்கொண்ட இணக் கத்தை - யுத்த நிறுத்த உடன்பாட்டில் ஏற்றுக்கொண்ட அதே அம்சத்தை நடைமுறைப்படுத்த மறுத்து, ஒட் டுப்படைகளைத் தனது ஆசீர்வாதத்துடன் களமிறக்கிய அரசுத் தரப்பு, அந்த வினைக்கான விளைவுகளை - பெறுபேறுகளை - எதிர்கொள்ளவேண்டிய இக்கட்டில் இப்போது சிக்கியிருக்கின்றது. முதல்சுற்று ஜெனீவாப்பேச்சில் இணக்கம் காணப் பட்ட விடயத்தை - முழு அளவில் - சொல்லிலும் செய லிலும் - நடைமுறைப்படுத்தாவிட்டால் அடுத்த சுற்று அமைதிப்பேச்சுகளில் பங்குபற்றுவதில் அர்த்தமே யில்லை என்று விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்பக் கூறிவந்தனர். அப்படியிருந்தும் ஜெனீவாப் பேச்சு இணக்கத்தை செயற்படுத்தாமல் - செயற்படுத்த விரும்பாமல் இழுத் தடித்து வந்தது இலங்கை அரசு. அதனாலும், அதன் விளைவாகக் களத்தில் தொடராக நிகழ்ந்த - நிகழ்ந்து வருகின்ற - வன்முறைச் சம்பவங்களினாலும் அடுத்த சுற்று அமைதிப்பேச்சு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதிகளும் போராளிகளும் கிழக்கிலிருந்து வன்னிக்கு வந்து செல் வதற்கு கெடுபிடியற்ற உரிய வசதிகளை வழங்க அரசு மறுத்து வருகிறது எனப் புலிகள் குற்றம் சுமத்துகின் றார்கள். அந்நிலைமை நீடித்தால் எந்தக் கணத்திலும் புலிகள் தமக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமே செய்துகொண்டு கடல்வழியாகத் தமது பயணத்தை முன்னெடுப்பர் என்றும் புலிகள் எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அத்தகைய செயற்பாட்டுக்கு அரசு அனு மதிக்காது என அரசுத் தரப்பிலும் திட்டவட்டமாக - உறுதியாக - பதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அப்படியானால் கடலில் ஒரு நேரடி உரசலுக்கு - மோதலுக்கு - களம் தயாராகின்றது என்றுதான் அர்த்தம். அதுவும் இப்பத்தியில் நாம் முன்னரே சுட்டிக்காட்டியமை போன்று, யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 14 நாள் முன்னறிவித்தல் வழங்கப்படாமலேயே யுத்தம் ஒன்று மீள வெடிப்பதற்கான முதல் உரசலுக்கு ஒரு வாய்ப்பு- ஒரு சந்தர்ப்பம் - கடலில் கருக்கட்டி வரு கின்றது என்பதுதான் நிலைமை. ஆயுதப் போராட்டம் மூலம் தமது உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ள ஒரு சக்தியுடன், அமைதி வழித் தீர்வுக்கும் தாங்கள் முயற் சிக்கின்றார்கள் என்ற அடிப்படையை மறந்து, மெத்த னப்போக்கில் - மிதப்பில் - அரசுத்தலைமை நடந்து கொள்ளுமாயின் நிலைமை மோசமாவதைத் தவிர்க்க முடியாமல் தான்போகும். uthayan
|