பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

புலத்தில் தமிழ்த் தேசிய ஊடகங்கள் !?!?!?..... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 14 April 2006

கடந்த மாதத்தில், சில வாரங்களாக "ஐ.பி.சி" வானொலியில் பிரதி திங்கள் இரவு தோறும் நடைபெறும் "பஞ்சாயத்து" நிகழ்ச்சியில் "தமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டியது எதிரிகளிடமா? அல்லது துரோகிகளிடமா?" என்ற தலைப்பில் நேயர்களின் கருத்தாடல் இடம்பெற்றது. ஏறக்குறைய மூன்று வாரங்களாக தொடர்ந்த கருத்தாடலில், தொன்னூற்றி ஒன்பது விழுக்காட்டைச் சேர்ந்த நேயர்கள், "துரோகிகளிடமே தமிழர்கள் விளிப்பாக இருக்க வேண்டும்" எனும் கருத்தை ஆதாரங்களுடன் ஆழமாக வலுயுறுத்தினார்கள். நிகழ்ச்சியின் முடிவாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளரும் "தமிழர்கள் எதிரிகளை விட துரோகிகளிடமே விளிப்பாக இருக்க வேண்டும்" என்றும் தீர்ப்பும் வழங்கினார். ஆமாம் தமிழர்கள் களத்திலோ, புலத்திலோ எங்கிருப்பினும் துரோகளிடம் விளிப்பாகத்தான் இருக்க வேண்டும். இன்று துரோகளிடன் செயற்பாடுகள் களத்திலும் பார்க்க புலத்திலேயே நடவடிக்கைகளை அதிகரித்துள்ளார்கள். அப்படியாயின் ...

* புலத்தில் உள்ள துரோகிகளை, தாம் புலத்தில் தேசிய ஊடகங்கள் என்று கூறுபவை, புலம் பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கு இனங்காட்டினார்களா?
* புலத்தில் பெருகி வரும் துரோகிகளின், தமிழ்த் தேசிய விரோத செயற்பாடுகளையாவது இனங்காட்டினார்களா?
* ..

... இவைகளுக்கு பதில் "இல்லை" என்பதே!! அப்படியாயின், யார், இந்த புலத்தில் உள்ள தமிழ்த் தேசியத் துரோகிகளையோ, அவர்களின் செயற்பாடுகளை புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துவது??? அவர்களை விளிப்பூட்டுவது??? தமிழ்த் தேசியத் துரோகிகளின் முகமூடிகளைக் கிளித்தெறிவது??? ...

உதாரணத்திற்கு லண்டனில் வசிக்கும் "ஈழபதீஸ்வர ஆலய நிர்வாகி ஜெயதேவன், ரி.பி.சி வானொலி பணிப்பாளர் ராம்ராஜ்" ஆகிய இரு நபர்களின் செயற்பாடுகளையும், அவர்களின் பின் புலங்களையும் ஒருமுறை நோக்குவோம் ...

ஜெயதேவன் கூறுபவை:
கடந்த பல வருடங்களாக லண்டனில், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டதாகவும், ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கி தமிழ் மக்களுக்கு சேவை செய்ததாகவும், அண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வன்னி சென்ற போது, புலிகளினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்ததாகவும், அதன் பின் விடுதலையாகி வந்து, புலிகளிடமிருந்து மக்களை மீட்க, ஜனநாயகத்தை நிலைநிறுத்த போராடுகிறாராம்! ...

ஜெயதேவன் பற்றிய உண்மைகள்:
லண்டனில் ஈழத்தமிழ் மக்களின் பணத்தில், ஈழத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஈழபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகளில் ஒருவர். ஆலயத்தில் நடைபெற்றதாக நிரூபிக்கப்பட்ட பல பண மோசடிகளில் சூத்திரதாரி. இன்றுவரை தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், சில அரசியல்வாதிகளினால் காப்பாற்றப்பட்டு வந்தவர். மேலும் அவர் வன்னி சென்றபோது, தன் குற்றங்களை ஒப்புக் கொண்டவர். இன்று சில அயல் நாடுகளின் உளவு நிறுவனங்களின் வழி காட்டுதலில், லண்டனில் காட்டிக் கொடுப்புக்கள், மொட்டைக்கடிதங்கள், பொய்ப் பரப்புரைகள், மிரட்டல்கள் என துரோகத்தின் உச்சங்களைத் தொட்டு நிற்கிறார்.

ராம்ராஜ் கூறுபவை:
புலத்தில் மாற்றுக்கருத்துகளுக்கான பிரபல ஊடகவியலாளராம். லண்டனில் ரி.பி.சி எனும் வானொலியின் பணிப்பாளராக இருக்கிராராம். புலிகளினால் செய்யப்படும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவராம். கொலைக் கலச்சாரத்தை எதிர்ப்பவராம்.

ராம்ராஜ் பற்றிய உண்மைகள்:
இந்திய அமைதிப்படைக் காலத்தில், ஈழத்தில் தமிழ் மக்களை நரவேட்டையாடிய கும்பல்களில் ஒன்றான "ஈ.என்.டி.எல்.எப்"இன் முக்கியஸ்தகர். பின் இந்தியாவிற்கு தப்பியோடி புலத்திற்கு வந்ததன் பின் போதைவஸ்து கடத்துதல், ஆட்கடத்தல்கள், கிரடிட்காட் மோசடிகள்தான் இவரின் பிரதான தொழிழ்களாக இருந்தன. இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பாளி. ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத்திற்கெதிராக பிரச்சாரத்திலீடுபட, அயல்நாட்டு புலனாய்வுத் துறையின் நிதிப்பங்களிப்புடன் "ரி.பி.சி" எனும் வானொலியின் பணிப்பாளர். ஐரோப்பாவில் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் பிரிதேசவாதம், சாதி முரன்பாடுகளை தோற்றுவிக்க தொடர்ச்சியான பொய்ப்பரப்புரைகளின் மூலகர்த்தா. இன்று சுவிஸில் போதவஸ்து கடத்தல் சம்பத்தப்பட்ட பல குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.

... இவர்கள் இருவரின் உண்மைகள் இன்று ஓரிரு இணையத்தளங்களில் வெளிவந்தமையால், அவ்விணையத்தளங்களைப் பார்வையிடும் சிலர் அறியக்கூடியதாக இருந்தது. இன்றும் இவர்களின் உண்மை முகங்கள் ஐரோப்பாவில் வாழும் எத்தனை மக்களுக்குத் தெரியும்? இவர்களின் பரப்புரைகளின் சிலர் மயங்கவில்லையா? அப்படியாயின் இம்மக்களுக்கு இவர்களைப் பற்றி யார் கூறுவது???

ஏன் "ரி.ரி.என், ஐ.பி.சி, ரி.வி.ஐ, சி.ரி.ஆர், புதினம், சங்கதி, .." போன்ற ஊடகங்கள், புலத்திலுள்ள துரோகிகளின் இனங்காட்டி, அவர்களின் முகமூடிகளை உரிக்க முன்வருவதில்லை???

உங்களின் ஊடகவியலாளர்கள் உயிராபத்தின் மத்தியில் செய்திகளை சேகரிக்கிறார்கள்தான். களத்திலுள்ள பத்திரிகைகளின் ஊடகவியலாலர்களும் இவற்றை திறம்பட செய்தே வருகிறார்கள். அதை இல்லையென்று சொல்லவில்லை. நாமும் அவர்களின் உயிராபத்துக்களை உணர்கிறோம், அவர்களை மதிக்கிறோம். ஆனால் ஈழத்தில் நடைபெறும் செய்திகளுக்காகத்தான் உங்களின் ஊடகங்கள் என்றால், புலத்தில் தேசியத்திற்கான முக்கிய கடமையைச் செய்ய தவறியவர்களாகவே உள்ளீர்கள்.


webeelam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..