பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உளவாளிகள் அவதானம் - பாகம் 7 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 April 2006

இந்த ராசிக்குழுவினர் முன்னர் EPRLF இயக்கத்தில் இருந்தார்கள். 1990ம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பியோடியவர்கள், அங்கு இந்திய றோவினால் வளர்க்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்திற்கு ராசிக்குழுவினர் வந்தவுடன் இலங்கை ராணுவத்தில் துணைப்படையினராகச் செயற்பட்டு புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

அவ்வேளையில் EPRLFஇயக்கத்தில் இருந்து முற்றாக விலகி திருமணமாகி யிருந்தவர்களையும் தனித்து வாழந்தவர்களையும் இந்த ராசிக்குழுவினர் அணுகி கூடுதலான பணம் கொடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். அதாவது அந்த நபருக்கு ஏற்கனவே பெரும் கடன் இருப்பின் அல்லது வேறு சிக்கல்கள் உள்ளதா என்பதை முன்பே தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து அல்லது அந்த சிக்கலில் இருந்து மீண்டதால் குறிப்பிட்ட நபர் செஞ்சோற்றுக்கடன் போல ராசிக்குழுவில் முற்றுமுழுதாக இணைந்து கொள்வர். இத்திட்டமிடல் முற்றுமுழுதாக றோவின் அதிகாரிகளின் மூளைச்சலவையால் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் வரதராஜப்பெருமாள் கூட இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு மத்தியில் வைக்கப்பட்டு றோவின் ஒரு நீண்டகால திட்டமிடலுடன் வளர்க்கப்படுகிறார். பலகாலமாக இரகசியமாக வளர்க்கப்பட்ட வரதராஜப்பெருமாள் தற்போது இலங்கைக்கும் வந்து செல்லுகிறார். தற்போது வரதர் அணி இலங்கையிலுள்ளது. இவர்கள் வெளிநாடுகளில் வாழும் முன்னைநாள் EPRLF உறுப்பினர்களில் தங்களுக்கு விசுவாசமானவர்களிடம் இருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நடவடிகைகளை கண்காணித்து பெறும் அறிக்கைகளாக  றோவுக்கும், இலங்கை புலனாய்வு அமைப்பிற்கும் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல EPDP இயக்கத்தினரும் இலங்கையிலிருந்து வெளிநாடுவரை தமிழீழ
விடுதலைப்புலிகளின் நடவடிகைகளை தங்கள் முகவர்கள் மூலம் கண்காணித்து றோவிற்கும்NIB க்கும் வழங்குகின்றனர்.EPDP யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி இந்தியா சென்று இலங்கை அரசியல் சம்மந்தமாக றோவிடம் ஆலோசனை பெற்று வருவதாக அறியமுடிகிறது.

மேலும் டக்ளஸ் தேவானந்தா றோவின் ஆலோசனைக்கேற்ப தற்போது கருணா குழுவுடன் இணைந்து செயற்படுகிறார். மேலும் டக்ளஸ் தேவானந்தா இந்தியா சென்று றோவின் உயர்தர அதிகாரிகளுடனும் கலந்தாலோசனை செய்து தமிழீழபோராட்டத்தை சிதைப்பது சம்மந்தமாக நீண்ட நேரமாக உரையாடி திட்டமிட்டதாகவும் அறியமுடிகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கேந்திர முக்கியத்துவமான இடங்கள், முக்கிய துறைகளின் பொறுப்பாளர்கள் போன்றோரின் தகவல்களைச் சேகரித்து அழிப்பது இதற்காக EPDP றோ மற்றும்NIB யின் ஒத்துழைப்புடன் வடபகுதி, கிழக்கு மாகாணம் போன்றவற்றுக்குள் தங்களது ஊடுருவல், மற்றும் தூங்கு முகவர்களை   ஒழுங்குசெய்துள்ளனர்.தொடரும்…


சீனு
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..