|
இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - ஜெயலலிதா |
|
|
|
Sunday, 16 April 2006 |
|
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்வதற்கான சூழலை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.அப்போது ஈழத்தமிழர் நிலைப்பாட்டில் உங்களது நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்: எந்தவொரு முரண்பாடும் இல்லை. ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு எண்ணக்கரு, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள், ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத் தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கை தமிழர்கள் என்று சொல்கிறேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத் தமிழர்கள் மதிப்போடும், மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இதுதான் என்னுடைய கொள்கை. நெருடல் இணையம்
|