|
யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியில் இன்று காலை மேற்கௌ;ளப்பட்ட கிளைமோர் தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தால் பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட முறையில் மேற்கௌ;ளப்பட்ட ஓர் தாக்குதல் என யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கெண்ட இத்தாக்குதலுக்கு பழிவாங்கும் பதில்தாக்குதல் தம்மால் நடத்தப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொங்கியெழும் மக்கள் படையால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தஅறிக்கையில்- சாவகச்சேரியில் இன்று இராணுவம் மிகவும் திட்டமிட்ட முறையில் பொது மக்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இராணுவத்தின் முழுமையான கண்காணிப்பில் உள்ள பிரதேசத்தில் வெடிகுண்டினைப் பொருத்தி வைத்து மிக கொடூரமான முறையில் இராணுவம் இப்படுகெலையை நிகழ்த்தியள்ளது. குறிப்பாக இத்தாக்குதலானது இளைஞர்களை குறிவைத்து மேற்கௌ;ளப்பட்டுள்ளது உயிரிழப்புகளையும் குழப்பங்களையும் மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே இராணுவம் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் நோக்கில் இராணுவம் மேற்கொண்டஇத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றுமெருவர் படுகாயமடைந்துள்ளார். இராணுவத்தின் இப்படுகெலை நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகதெரிவித்துள்ள பொங்கியெழும் மக்கள்படை இத்தகைய கொடூரமுகம் கெண்ட இராணுவத்துக்கு எதிராக தமது பழிக்குபழி வாங்கும் நடவடிக்கைகள் தெடர்ந்தேதீரும் என்றும் எச்சரித்துள்ளது. நெருடல் இணையம்
|